அதிதி உண்மையிலேயே இவ்வளவு வெகுளியா? மேடையில் சிவகார்த்திகேயனை பற்றி இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவான "நேசிப்பாயா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த திரைப்படத்தில் நடித்த ஹீரோயினியான அதிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிவகார்த்திகேயன் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் நடிகை அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தான் தயாரித்திருக்கிறார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

பொதுவாக பட விழாக்கள் என்றால் அந்த திரைப்படத்தின் ஹீரோக்கள் அருகே தான் கதாநாயகிகளுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நேசிப்பாயா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அதிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அருகில் அமர்ந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயனோடு அதிதி அதிக நேரமாக பேசி சிரித்துக்கொண்டே இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
அதுபோல அதிதி மேடையில் பேசும் போது சிவகார்த்திகேயன் பற்றி பேசியதும் இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. அதில் அதிதி பேசுகையில் நேசிப்பாயா படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. எல்லோரும் அந்த படத்தை பாருங்க வித்தியாசமான கதைகளத்தோடு இருக்கும் என்று படம் குறித்து முதலில் பேசியிருக்கிறார்.
அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பற்றி பேசும் போது நேசிப்பாயா படத்தின் ஹீரோ ஆகாஷ் முரளி அருகே அமராமல் தனது முந்தைய படமான மாவீரர் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் அருகே அமர்ந்து நான் இவ்வளவு நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன்.

நான் நேசிப்பாயா படத்தின் நிகழ்ச்சியையே மறந்து விட்டு அவர் அருகே அமர்ந்து கொண்டு ஸ்கூல் ஆனுவல் டேவில் பசங்களோட அரட்டை அடிப்பது போல் அடித்துக் கொண்டிருந்தேன். அவர் அடக்கி வாசிக்க சொல்ல, நான் அடக்கி கிட்டு இருந்தேன்.. ரொம்ப நன்றி சார்.. நீங்க இங்க வந்ததுக்கு என்று மேடையில் அதிதி பேசியிருக்கிறார்.
அதிதி பேசியதை கேட்டு அங்கிருந்த எல்லோரும் சிரித்து இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதிதி உண்மையிலே வெகுளியா அல்லது இவர் நடிக்கிறாரா? என்று பலர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். எந்த நிகழ்ச்சியில் அதிதி கலந்து கொண்டாலும் அதிதி பேசுவது ட்ரோல் ஆகி விடுகிறது.












Click it and Unblock the Notifications