கத்தீரிக்கா.. கத்தீரிக்கா.. குண்டு கத்தீரிக்கா.. கலாய்த்த மகாலட்சுமி.. சயின்ஸ் பாடம் எடுத்த ரவீந்தர்
சென்னை: வந்தாள் மகாலட்சுமியே எனும் நிகழ்ச்சியில் ரவீந்தரும் மகாலட்சுமியும் கலந்து கொண்ட நிகழ்ச்சி இன்று வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு "விஜய் டிவி கொஞ்சம் ஓவராக போகிறது" என்கிறார்கள்.
கடந்த ஒரு மாதமாக ரவீந்தர்- மகாலட்சுமி செய்து கொண்ட திருமணம்தான் இணையத்தில் டிரென்டிங் டாப்பிக்காக இருக்கிறது. ஏற்கெனவே ரவீந்தருக்கு மகாலட்சுமியா என 90 ஸ் கிட்ஸ் அங்கலாய்த்து வருகிறார்கள்.
இடை இடையே ரவீந்தர் போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு இளசுகளை வெறி ஏற்றுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வந்தாள் மகாலட்சுமியே என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது.

புதுமண தம்பதி
இதில் புதுமண தம்பதிகளான ரவீந்தரும் மகாலட்சுமியும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹைப்பை ஏற்றியது. அதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் உட்கார வைக்கப்படுகிறார்கள்.

செருப்பு
பொதுவாக கணவன்- மனைவி, அம்மா- மகள், மகன், தந்தை- மகள், மகன் உள்ளிட்டோரிடம் உள்ள அன்பை தெரிந்து கொள்ள சில கேள்விகள் கேட்கப்படும். அதற்காக இருவருக்கும் இருவரது முகங்கள் பொதித்த ஒரு பிளக்கார்டு வழங்கப்படும். கேள்விக்கேற்ப அவர்கள் அந்த கார்டை காண்பித்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் அவர்களுடைய செருப்புகள் வழங்கப்பட்டன.

மகாலட்சுமி
அதாவது மகாலட்சுமிக்கு அவருடைய ஒரு செருப்பும், ரவீந்தரின் ஒரு செருப்பும் வழங்கப்பட்டது. அது போல் ரவீந்தருக்கும்! இதில் யார் அடிக்கடி ஐ லவ் யூ சொல்வது யார் என்ற கேள்விக்கு மகாலட்சுமி தனது செருப்பை காட்ட ரவீந்தரும் மகாவின் செருப்பையே காட்டுகிறார். அப்போது மகாலட்சுமி, இவர் எப்போதும் ஐ லவ் யூ சொல்லவே மாட்டார் என சொல்ல, அதற்கு ஈரோடு மகேஷ், அதெப்படி என கேட்டு அவர் கையில் பூச்செண்டு கொடுத்து பிரபோஸ் செய்ய வைக்கிறார்கள்.

அல்வா
மேலும் ரவீந்தரின் கையில் கொடுக்கப்படும் பொருளை வைத்து அவர் கவிதை சொல்ல வேண்டும். அந்த டாஸ்கில் ரவீந்தரிடம் அல்வா கொடுக்க, நான் சுவைத்த இனிப்பில் மகாலட்சுமியை விட கம்மிதான் இந்த அல்வா என கூறி நிகழ்ச்சியில் இருந்தோரின் கைதட்டுக்களை பெறும் ரவீந்தரின் 90 ஸ் கிட்ஸ்களின் கோபத்தையும் பெற்றுவிட்டார்.

மல்லிகை பூ
மல்லிகை பூவை கொடுக்க அதற்கு அவர் இந்த பூ வாடலாம், நான் உன் மீது வைத்திருக்கும் பாசம் மாறாது என்கிறார். பின்னர் கொலுசை கொடுத்த போது புவிஈர்ப்பு விசைக்கு தெரியாது உனது கால்கள் இவ்வளவு கனத்தை தாங்கும் என்று! என கூறி மகாலட்சுமிக்கு சயின்ஸ் பாடத்தை எடுக்கிறார். பின்னர் ரவீந்தரும் மகாலட்சுமியும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போல் இருக்கிறது.

கத்திரிக்காய் பாடல்
அதில் ரவீந்தர் தொகுத்து வழங்கும் போது மகாலட்சுமியிடம் நீங்கள் என்ன செய்றீங்க என கேட்கிறார். அதற்கு மகாலட்சுமியோ நான் உங்களைத்தான் சைட் அடிக்கிறேன் என்கிறார். பிறகு உங்களுக்கு என்ன பாடல் வேண்டும் என ரவீந்தர் கேட்க அதற்கு மகாலட்சுமியோ டூயட் படத்தில் வரும் கத்தீரிக்கா, கத்தீரிக்கா.. குண்டு கத்தீரிக்கா பாடலை கேட்கிறார். அதற்கு ரவீந்தர் நெனச்சேன் என சொல்லி சிரிக்கிறார். இவர்களது இந்த லவ் அட்ராசிட்டி பார்ப்போரை கடுப்பேற்றுவதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். நிகழ்ச்சி நடத்த வேறு எதுவுமே இல்லையா என அந்த புரோமோவிலேயே கமென்டில் கேட்கிறார்கள். டிஆர்பி ரேட்டுக்காக இப்படியெல்லாமா நிகழ்ச்சி நடத்துவது என்ற கமென்டுகளும் அங்கே கிடக்கின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications