கே ஜி எஃப்க்கு வந்த சோதனையா..??பிரபல சீரியலை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
திரைப்படங்களை காப்பி செய்து பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களை ஏமாற்றி வருவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பல மீம்ஸ்களை பரப்பி வருகிறார்கள்.
இதுவரைக்கும் பீட்ஸ் படத்தை காப்பி செய்தவர்கள் தற்போது கே ஜி எஃப் படத்தை சுட்டு விட்டார்களா என்று கேஜிஎப் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

கதையின் சுருக்கம்
பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பம் முதல் தற்போது வரை பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பாரதி ஒரு டாக்டராக இருந்தாலும் அவருக்கு ஆண்மை இல்லை என்று டாக்டர் கொடுத்த சர்டிபிகேட்டை நம்பிக்கொண்டு தன்னுடைய காதல் மனைவியை சந்தேகப்பட்டு அவருடைய குழந்தைக்கு தான் தகப்பன் அல்ல என்று கூறி வருகிறார். பாரதியின் மனைவியான கண்ணம்மாவும் உன் முன்பாக நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என்று சபதம் விடுத்து வீட்டை விட்டு வெளியேறி பல வருடங்கள் ஆகியும் பாரதி தான் தன் குழந்தைகளுக்கு அப்பா என்பதை தெளிவாக கூறாமல் இருந்து வருகிறார்.

ஒரு டெஸ்ட் மொத்த கதையும் க்ளோஸ்
பொதுவாகவே சீரியல் என்றாலும் ரசிகர்கள் சலிப்பு தட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா கதைகளையும் டுவிஸ்ட்களையும் கொடுத்து எபிசோடுகளை நகர்த்திக் கொண்டிருப்பது வழக்கமாக ஒன்றாக இருப்பது போலத்தான் தற்போது இந்த சீரியலிலும் இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறுகின்றார்கள். பாரதி கண்ணம்மா சீரியல், டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் ஒரே நாளில் முடிந்து விடும் ஆனால் அதை வருட கணக்கில் எடுக்காமல் தற்போது இரண்டாவது சீசனிலும் இந்த சீரியல் அடி எடுத்து வைத்திருக்கிறது.

தீவிரவாதி வாரம்
பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரம் தீவிரவாதிகள் வாரம் என்று சொல்லும் அளவிற்கு தீவிரவாதிகள் பிடியில் பாரதியின் மருத்துவமனை காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. எப்போது, பாரதி மருத்துவமனையில் இருப்பவர்களை காப்பாற்றுவார் என்று ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கதையில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் நடைபெறும் என்று சீரியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஐஏஎஸ் ஆபிஸர்களாக புதுமுக நடிகர்கள் இந்த சீரியலில் களமிறங்க போகிறார்களாம். ஆனாலும் தீவிரவாதிகளை எப்படி பாரதி அளிக்கப் போகிறார் என்று சீரியல் ஆர்வத்தோடு பார்த்து வருகிறார்கள்.

கே ஜி எஃப்க்கு டப் கொடுப்பாங்க போல
ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியலை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திரைப்படத்தோடு கம்பர் செய்து கலாய்த்து வரும் நெட்டிசன்கள் இப்போது கே ஜிக்கு2 படத்தில் யாஷ் கெட்டப்பை தற்போது தீவிரவாதிகளில் ஒருவர் போட்டு வந்து இருக்கிறாரே என்று கலாய்த்து வருகிறார்கள். அதுவும் யாஷ் கே ஜி எஃப் 2 படத்தில் போலீஸ் ஸ்டேஷனை சுடுவதற்காக பெரியஅம்மையை பயன்படுத்தியிருக்கிறார். அது போன்று தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் ராக்கி பாய் ஸ்டைலில் தீவிரவாதி ஒருவர் நின்று கொண்டு பெரியம்மையை ராக்கி பயன்படுத்துவது போல, கேமரா ஸ்டாண்டை பிடித்துக் கொண்டு நிற்கிறார். இந்த போட்டோவை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகிறார்கள். அதுவும் இந்த போட்டோவை யாஷ் பார்த்தால் என்ன நினைப்பார், இது யாஷுக்கே வந்த சோதனை என்று பல்வேறு மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தின் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications