எங்கே திரும்பினாலும் அழுகாச்சி சீன்கள்...பிக்பாஸ்க்கு என்ன ஆச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பார்த்து ரசிகர்கள் திகைத்துப் போய் இருக்கின்றனர்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணீரும், கம்பலையுமாக இருக்கிறதே என ரசிகர்கள் கதறி வருகிறார்கள்.

கண்களை கசக்கி பிழியும் போட்டியாளர்களை பார்த்து ரசிகர்களும் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

கொட்டும் கண்ணீர் மழை

கொட்டும் கண்ணீர் மழை

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏதேனும் வரைமுறை இருக்கிறது அதனால்தான் இப்படி எல்லாம் ஒவ்வொரு சீசனும் அழுது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்களா?? என்று ரசிகர்கள் ஒரு பக்கம் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் போட்டி போட்டுக் கொண்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமாக போய் இருந்து இந்த அளவிற்கு கண்ணீரை பிழிவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

காண்டான ரசிகர்கள்

காண்டான ரசிகர்கள்

தாங்களெல்லாம் நடிகர்கள் என்பது தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நிரூபித்து வருகிறார்கள் என பலர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், இதில் யாருடைய அழுகை நிஜம் என்று தெரியவில்லையே என பலர் குழம்பி வருகின்றனர். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்று போட்டி போட்டுக்கொண்டு இவர்கள் போடும் அழுகாச்சி சீன்களை பார்த்து பலர் காண்டில் இருந்து வருகின்றனர்.

பிரச்சனை வெடித்திருக்கிறது

பிரச்சனை வெடித்திருக்கிறது

ரியாலிட்டி ஷோ என்றால் கொஞ்சம் ஜாலியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று இந்த நிகழ்ச்சிக்கு பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்கம் போல இந்த சீசனும் சண்டை சச்சரவுகளை தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த சீசனில் அபிஷேக் இருந்ததால்தான் இந்த மாதிரி எல்லாம் பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று பலர் அபிஷேக் மீது குற்றம்சாட்டி கொண்டிருந்த நிலையில் அவரை வெளியேற்றிவிட்டால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என பலர் கூறிவந்தனர். தற்போது அவர் வெளியே சென்ற பிறகு தான் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வருகிறது.

கலாய்க்கும் ரசிகர்கள்

கலாய்க்கும் ரசிகர்கள்

நிகழ்ச்சியில் ஒருவர் அழுதால் கூட சரி...என்று இதற்கு யார் காரணம் என தீர்ப்பு சொல்லி விடலாம். ஆனால் இது இடியாப்பச் சிக்கலை போன்று இருக்கிறது. பிரச்சனைகளுக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் போட்டி போட்டுக்கொண்டு தாமரைச்செல்வி ஒருபக்கம் அழுது கொண்டிருக்கிறார். அவர் திட்டி விட்டார் என்று சுருதியும், பாவனியும் மற்றொரு பக்கம் இருந்து கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் அழுகை தன்னால் வந்துவிடுகிறது என்று பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+