மாறாத சிரிப்பு குறையாத ஸ்டைல் ...பாரதிகண்ணம்மா நடிகரை பார்த்து உருகும் ரசிகர்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அருண்பிரசாத்தை பார்த்து அவருடைய ரசிகர் சமூக வலைத்தளத்தில் உருகி இருக்கிறார்.
நடிகர் அருண் பிரசாத்தை தனக்கு பிடிப்பதற்கான காரணத்தை பற்றி அவருடைய தீவிரமான ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சும்மாவே அருணை கலாய்த்து தள்ளி வரும் நெட்டிசன்கள இந்த போஸ்ட் பார்த்து கலாய்த்து வருகிறார்கள்.

ரசிகர்களின் பாசம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இப்ப வரைக்கும் அதிகமாக ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் அருண் பிரசாத் தன்னுடைய நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி இருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து பலர் கலாய்த்து தள்ளி இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் அவருக்காக உருகி உருகி சமூக வலைத்தளத்தில் போஸ்ட்களை அள்ளி குவிக்கிறார்கள்.என்ன தான் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருந்தாலும் தனக்கென்று இருக்கும் ரசிகர்களின் ஆதரவை பார்த்து இந்த சீரியலில் இவர் இப்ப வரைக்கும் நடித்து வருகிறார்.

நெட்டிசன்களுக்கு பிடித்த சீரியல்
கொஞ்ச நாட்களுக்கு முன்புவரைக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தான் விலகப் போவதாக அறிக்கை விட்டு இருந்தார். அவருடைய அறிக்கையை பார்த்ததும் அவருடைய தீவிரமான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம். அதனால் மீண்டும் இந்த சீரியலில் இவர் தொடர போவதாக அறிவித்து தற்போது வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் பாரதி கேரக்டரில் அருண் பிரசாத் நடித்துக் கொண்டிருப்பது எரிச்சல் அடைகிறது என்று ஒரு பக்கம் நெட்டிசன்கள் கூறிக் கொண்டிருந்தாலும் ஒரு பக்கம் இவருடைய தீவிரமான ரசிகர்கள் ரசித்து கொண்டிருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பம் முதலே இப்ப வரைக்கும் நெட்டிசன்களிடம் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

அசத்தும் டயலாக்
ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை அதிகமாக கலாய்த்த நெட்டிசன்கள் பின்பு, ஒரு டாக்டராக இருந்தாலும் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் சரியாக எடுக்கவில்லையே என்று பாரதியை வாய் வலிக்காமல் வசைப்பாடி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அருணின் தீவிரமான ரசிகர் ஒருவர் படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ரம்யா கிருஷ்ணன் பேசும் பிரபலமான டயலாக் வைத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து என்ன நடக்குது?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

போட்டி வேற மாதிரி இருக்கு
பாரதிகண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்த அருண்பிரசாத் இந்த சீரியல் முழுக்க ஒரே எக்ஸ்பிரசனை காட்டி வருகிறார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அருண் பிரசாந்தை பார்த்து, வயசானாலும் மாறாத சிரிப்பும் குறையாத ஸ்டைலும் தான் ரசிக்க காரணம் என்று அவருடைய தீவிரமான ரசிகர் ரசித்து கொஞ்சியதுதான் தற்போது நெட்டிசன்களால் பொறுக்க முடியாமல் கொந்தளித்து வருகிறார்கள். ஆனால் நெட்டிசன்களுக்கு அருண் பிரசாத்தின் ரசிகர்களே பதில்களை கூறி வருகிறார்கள். எங்களுக்கு அவருடைய நடிப்பு பிடித்திருக்கிறது நாங்கள் ரசிக்கிறோம். உங்களுக்காக நாங்கள் வெறுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என கூறி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications