சுந்தரி சீரியலை நிறுத்த கூறி வெளியாகும் கோரிக்கை... காரணம் பலரும் எதிர்பார்த்தது தானாம்!
சுந்தரி சீரியலை நிறுத்த கூறி ஆண் ஒருவர் வெளியிட்ட வீடியோவை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
சென்னை: சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் சுந்தரி சீரியல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த சீரியல் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று ஆண் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த சீரியலின் கதையினால் வீட்டில் இருக்கும் பெண்கள் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்று கூறியிருக்கிறார்.
சுந்தரி சீரியல் மட்டுமல்லாமல் இதே போன்ற கதையோடு இருக்கும் இன்னும் ஒரு சில சீரியல்களுக்கு எதிராகவும் மனு கொடுக்கப்படும் என்றும் அந்த ரசிகர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சீரியல்கள் மோகம்
சன் டிவியில் டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வரும் சுந்தரி சீரியல் அதிகமாக பெண் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் சீரியல்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அதிகமான சீரியல்களை ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்ததன் விளைவு தற்போது சனிக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த அளவிற்கு மக்களுக்கு சீரியலின் மீதான மோகம் அதிகரித்திருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒரு சில சீரியல்கள் இல்லத்தரசிகளின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. அதில் சுந்தரி சீரியலும் ஒன்றாக இருக்கிறது .

கணவனால் ஏமாற்றம்
சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சுந்தரி கேரக்டரில் நடிகை கேப்ரெல்லா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மோனன் நடித்து வருகிறார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று கிராமத்தில் வாழ்ந்து வரும் சுந்தரிக்கு கார்த்திக் உடன் எதிர்பார்க்காமல் திடீரென திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு கணவரால் ஏமாற்றப்பட்ட நிலையில்,பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டத்தை போன்று தான் சுந்தரியின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.

ரசிகரின் கோரிக்கை
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டின் ஐந்தாவது வாரத்தில் இந்த சீரியல் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலை தடை செய்ய வேண்டும் என்று ஆண் ஒருவர் நூதனமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசு பொருள் ஆகியுள்ளது. இரவு நேரத்தில் ஆண்களுக்கு சோறு வைப்பதை மறந்துவிட்டு தன் மனைவி ஆர்வமாக சுந்தரி சீரியல் பார்ப்பதால் அந்த சீரியலை தடை செய்ய வேண்டும் என்று ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

சுந்தரி சீரியலுக்கு எச்சரிக்கை
அதுமட்டுமல்லாமல் சாதிக்க வேண்டும் என்று கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்த சுந்தரிக்கு தற்போது கண் பார்வை போய் இருக்கிறது. இதனால் இதை பார்த்து பல பேர் வீட்டில் இதே புலம்பல்கள் தான் நடந்து வருகிறது. எதார்த்தமாக நடப்பது போன்று இல்லாமல் ஒரு நெகட்டிவ்வான விஷயத்தை தான் சில சீரியல்கள் காட்டி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் கண் பார்வை இழந்து இருக்கும் சுந்தரி சீரியலில் அவருடைய கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார். இது தப்பான உறவுக்கு அடித்தளம் போட்டு காட்டும் செயலாக இருக்கிறது. அதனால் இந்த மாதிரி செயல்கள் இருக்கும் சீரியலை தடை செய்ய வேண்டும் என்றும் அந்த நபர் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த கருத்துக்கு அதிகமான ஆண்கள் தங்களுடைய ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அந்த வீடியோவில் அந்த நபர் விரைவில் இதுபோன்ற சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் சீரியல்களுக்கு விரைவில் கம்ப்ளைன்ட் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications