சீச்சீ.. பெட்ரூம் சீனை தொடர்ந்து.. பாத்ரூம் சீனை ஒளிபரப்பும் பிரபல சீரியல்.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சீரியலில் TRP அதிகரிப்பதற்காக சில அபத்தமான காட்சிகள் ஒளிபரப்புவது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக திரைப்படங்களில் மட்டும் தான் ஆபாசமான காட்சிகளுக்கு 'A' சர்டிபிகேட் கொடுக்கப்படுகிறது.
ஆனால் அது போன்று சீரியலுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதால் இப்போது பல சீரியல்களில் பல ஆபாச காட்சிகள் சாதாரணமாக ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஒரு சில காட்சிகள் குறித்து ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அப்படி கலாய்ப்பதற்கு அங்கு என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சீரியல்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பது சமீப காலமாகவே பலரும் சொல்லும் வார்த்தையாக மாறிவிட்டது. ஏனென்றால் டிஆர்பியின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் கதை மாற்றப்படுவது வழக்கம்தான். ஒரு கதையை நினைத்து இயக்குனர் சீரியலை தொடங்கினால், அடுத்த வாரத்தில் அந்த கதை திடீர் திருப்பங்களோடு மாற்றப்பட்டு விடுகிறது.
ரசிகர்களின் மனநிலை அறிந்து ஒரு சில சீரியல்கள் கதை போய்க் கொண்டிருந்தாலும் பல சீரியல்கள் ஏனோ தானோ என்று ஆரம்பத்தில் இருந்த கதைக்கும் முடிவிற்கும் சம்பந்தமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சில சீரியல்கள் குறித்து அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருவது இயல்புதான்.

அந்த மாதிரி தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலையும் ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த சீரியலின் கதாநாயகி தான் படிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய பெற்றோர் உடன் சண்டை போட்டு சென்னைக்கு வந்து கல்லூரி படிப்பில் பல போராட்டங்களுக்குப் பிறகு சேருவார். ஆனால் அங்கே கல்லூரி ஆசிரியரோடு அவருக்கு காதல் ஏற்பட்டு விடுகிறது,
ஒரு ஆசிரியருக்கும் மாணவிக்கும் உள்ள காதல் குறித்து ஆரம்பத்தில் இருந்தே பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இது ஒரு தப்பான உதாரணம் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. சரி அதைத் தொடர்ந்து இப்போ என்ன நடந்தது என்ற கதைக்கு வருவோம்.
இந்த சீரியலில் கதாநாயகி வெண்ணிலாவும் கதாநாயகன் சூர்யாவும் காதலித்து வருவார்கள். அது வீட்டிற்கு தெரிந்து விடுகிறது. முதலில் பல பிரச்சனைகள் வந்து பிறகு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணத்திற்கு நாள் குறித்து இருப்பார்கள்.

ஆனால் கதாநாயகனின் குடும்பத்தினர் செய்த சூழ்ச்சியால் வெண்ணிலாவின் அப்பாவை சூர்யா திருமண மண்டபத்தில் வைத்து அடித்துவிடுவார். இதனால் இனி எனக்கு இந்த சூர்யா வேண்டாம் என்று கூறி தன்னுடைய அப்பா மட்டும் போதும் என்று வெண்ணிலா வந்து விடுவார். பிறகு மீண்டும் படிப்பதற்காக அதே கல்லூரிக்கு போகிறார்.
அப்போது வெண்ணிலாவிற்குள் இருக்கும் காதலை வெளியே கொண்டு வருவதற்காக சூர்யா தன்னை ஒரு தலையாக காதலித்த தோழியை காதலிப்பது போன்று நடித்துக் கொண்டு இருக்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் வெண்ணிலா தன்னுடைய காதலை வெளிகாட்டி விடுகிறார். ஆனாலும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு பிகு பண்ணி கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த வெண்ணிலாவின் கழுத்தில் அவருக்கு தெரியாமல் சூர்யா தாலி கட்டி விடுகிறார். இந்த நிலையில் உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிந்து விட்டது. இனி நீ தான் என் பொண்டாட்டின்னு சூர்யா வெண்ணிலாவின் வீட்டில் அவருடைய அம்மா அப்பாவிற்கு தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார்.
இந்த அபத்தமான காட்சிகள் குறித்து தான் அதிகமான ரசிகர்கள் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் வெண்ணிலா இருக்கும் அறையில் வீட்டில் இருக்கும் அம்மா அப்பாவிற்கு தெரியாமல் சூர்யா ஃபர்ஸ்ட் நைட் ரூமாக ரெடி பண்ணி அலப்பறை செய்கிறார். அதுவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் ஒரே பாத்ரூமில் குளிப்பது போன்ற காட்சியும் வெளியாகி இருந்தது இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
திரைப்படங்களுக்கு கூட 'A' சர்டிபிகேட் இருப்பதால் நாங்கள் குழந்தைகளோடு அந்த படத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கும் சீரியலில் இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் ஒளிபரப்பு செய்வது தவறான முன்னுதாரணமாக பலருக்கும் மாறப்போகிறது. இதற்காகவே இந்த மாதிரி சீரியல்களுக்கு தடை வைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்ற சீரியல் கதை மற்றும் காட்சிகளுக்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? இந்த சீரியல் மட்டும் தான் இப்படி இருக்கிறதா? இல்லை தமிழ் சீரியலில் வேறு எந்த சீரியலிலும் இதே மாதிரி அபத்தமான காட்சிகள் இருக்கிறதா? உங்களுடைய கருத்துக்களை பகிருங்கள்.












Click it and Unblock the Notifications