பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோவில் கவனிச்சீங்களா?முக்கியமான விஷயத்தில் சொதப்பல்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நேற்று ஒளிபரப்பான ப்ரோமோக்கும் இன்று ஒளிபரப்பான ப்ரோமோக்கும் வித்தியாசம் ஏற்பட்டிருப்பதை குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நேற்று வெளியான ப்ரோமோவில் பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டுக்கு ரெய்டு வந்த ஆஃபீஸர்ஸ் பேசியதை இன்று பலரும் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.

அடிக்கடி மாற்றப்படும் நடிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் ஆரம்பத்தில் இருந்த பல நடிகர்கள் இப்போது இந்த சீரியலில் இல்லை. தொடர்ந்து முக்கியமான கேரக்டர்களில் நடிகர்களின் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனாலே இந்த சீரியலுக்கு பெரிய அளவில் டிஆர்பி யில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாக இல்லை. அடிக்கடி ஒரு கொண்டாட்டத்தை வைத்து இந்த சீரியல் கதையை நகர்த்திக் கொண்டிருந்தாலும் இந்த சீரியலின் அண்ணன் தம்பி பாச பிணைப்பை பார்ப்பதற்காக ஒரு கூட்டம் சீரியலுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

சூப்பர் மார்க்கெட்டுக்கு புது பிரச்சனை
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இப்போது வில்லனாக மீனாவின் அப்பாவாக இருக்கும் ஜனார்த்தனன் பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் வீட்டை விட்டு அனைவரையும் வெளியேற்றி விட்டாலும் அண்ணன் தம்பிகள் பிரியவில்லையே என்று வருத்தத்தில் இருக்கும் ஜனார்த்தனன் அடுத்ததாக அவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் பிரச்சனையை செய்ய முடிவு எடுத்திருக்கிறார். சூப்பர் மார்க்கெட் விவசாய நிலத்தில் இருப்பதாகவும் இங்கே கமர்சியல் பில்டிங் கட்டக்கூடாது என்று ஆபிஸர்ஸ் வந்து சூப்பர் மார்க்கெட்டை உடனே காலி பண்ண வேண்டும் என்று கூறுகின்றனர்.

யாராலையும் பிரிக்க முடியாது
அதே நேரத்தில் பொருள்களை எல்லாம் மொத்தமாக லாரிகளில் மூட்டை முடிச்சு போட்டு அண்ணன் தம்பி அனைவரும் அனுப்பி வைக்கின்றனர். அதை ஜனார்த்தனன் நின்று பார்த்து சிரிக்கிறார். பின்பு கதிர் மற்றும் ஜீவா இருவரும் ஜனர்தனன் காரை மடக்கி நிறுத்தி அதிலிருந்து ஜனார்த்தனன் வெளியே வந்ததும் எங்க கடையை மூடலாம், எங்க வீட்டை விட்டு வெளியே ஏத்தலாம், ஆனால் எங்க நாலு பேரையும் யாராலும் பிரிக்க முடியாது. எங்கள மட்டும் அல்ல எங்க வீட்டுக்கு வந்த உங்க பொண்ணு மீனாவையும் பிரிக்க முடியாது என்று பேசி இருக்கின்றனர். இந்த ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது.

இதுதான் சொதப்பல்
ஆனால் இதே ப்ரோமோ நேற்று வெளியான நிலையில் அதில் ஆபிஸர்ஸ் வந்து பேசும்போது நாங்கள் கார்ப்பரேஷனில் இருந்து வருகிறோம் என்று கூறும் இடத்தில் நேற்றைய ப்ரோமோவில் நாங்கள் இன்கம் டேக்ஸ் ஆபீஸில் இல் இருந்து வருகிறோம் என்று பேசி இருக்கின்றனர். அந்த வீடியோ கிளிப்ஸ்களை நெட்டிசன்கள் பலர் இணையதளத்தில் பகிர்ந்து கடைசியில் மண்ட மேல இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்களே. எங்கிருந்து வருகிறோம் என்று தெரியாமலே சூப்பர் மார்க்கெட்டை க்ளோஸ் பண்ண வைத்துவிட்டீர்களே? என்னதான் சீரியலாக இருந்தாலும் இன்கம் டேக்ஸ் ஆபீஸரா? இல்லை கார்ப்பரேஷன் ஆபிஸரா? என்பதில் அவர்களுக்கே கன்பியூஸ் ஆகிவிட்டது போல என்று பல விதமாக கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications