மஞ்சள் மால்கோவா.... அடடா அதை பார்த்தாலே.. சொக்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொக்க வைக்கும் அழகை திறந்து காட்டி ரசிகர்களை கிக்கு ஏற்றிருக்கும் ரம்யா பாண்டியனைப் பார்த்து ரசிகர்கள் கிறங்கிப் போயிருக்கிறார்களாம்.

மஞ்சள் வண்ண மால்கோவாவாக மின்னும் அழகைப் பார்த்து பலருக்கும் நாவில் நீர் ஊறுகிறதாமே.

விதவிதமாய் போட்டோ வெளியிட்டாலும் ரசிகர்களின் கண்கள் என்னவோ ரம்யா பாண்டியனின் கண்ணைத் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லையே என்று கலாய்க்கும் நெட்டிசன்களின் கூட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது.

பல நாளுக்குப் பரிசு

பல நாளுக்குப் பரிசு

பல நாட்களுக்குப் பிறகு ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் வெளியிட்ட போட்டோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கோ கலக்கு என்று கலக்கி வருகிறது. இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்களால் தங்களுடைய கைகளை அந்த லைக் பட்டனை தொடுவதிலிருந்து எடுக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு இவருடைய போட்டோவை பார்த்ததும் கை ஆட்டோமெட்டிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. பல நாள் கழித்து போட்டோ வெளியிட்டாலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப பார்த்து பார்த்து போட்டோ வெளியிட்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்களிடமிருந்து கமெண்ட்டுகளும் மலைபோல குவிகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் சமூக வலைத்தளமே ஸ்தம்பித்து போய்விடும் போல, அந்த அளவிருக்கு ரசிகர்களின் ஆட்டம் வெறித்தனமாக இருக்கிறது.

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

பார்க்கும் பார்வையாலேயே பரவசத்தை தூண்டும் ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் போட்டோக்கள் தான் பல ரசிகர்களின் டிபிக்களாகவும், ஸ்டேட்டஸாகவும் வலம் வருகிறது. எத்தனையோ நாட்களுக்கு பிறகு இவர் போட்ட போஸ்ட்டுக்கு குதூகலிக்கும் ரசிகர்கள் கொஞ்சி கொஞ்சி கவிதைகளை கொட்டுகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. முதல் திரைப்படத்தில் இவர் அறிமுகமாகும்போது யாருக்குமே அந்த அளவிற்கு தெரியவில்லை! அதனாலேயே வருத்தத்தில் இருந்த ரம்யா பாண்டியனுக்கு மொட்டை மாடி தான் கைகொடுத்திருக்கிறது. எல்லோரும் மனது சரியில்லை என்றால் மொட்டை மாடியில் சென்று உலா வருவர். ஆனால் ரம்யா பாண்டியன் தன்னுடைய வாய்ப்புக்காக மொட்ட மாடியை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். இவரைப் பார்த்து பல நடிகைகள் போட்டோ சூட்டில் காலடி எடுத்து வைத்தாலும் யாராலும் இவருடைய இடத்திற்கு வர முடியவில்லை.

அந்த சிரிப்புக்கு ஈடு இல்லை

அந்த சிரிப்புக்கு ஈடு இல்லை

பல படங்களில் நடித்து வாங்கும் பேரும், புகழையும் இவர் ஒரே போட்டோ ஷூட்டில் வாங்கிய பிறகு தான் இவர் விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்காகவே பல ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க துவங்கி விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியிலும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள். இவருடைய ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்துதான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதற்கு முன்பு இருந்த ரசிகர்களை விடவும் வெளியே வரும்போது பல மடங்கு ரசிகர்களை பெற்றுவிட்டார். அதிலும் குறிப்பாக பெண்கள் மனதையும் கொள்ளை கொண்டுவிட்டார். இவருடைய போல்டான கேரக்டரில் எதற்கும் சிரிப்பையே பதிலளிக்கும் குணத்தையும் பலருக்கும் பிடித்துவிட்டது.

கண்ணுக்கு சுவையா தான் இருக்கு

கண்ணுக்கு சுவையா தான் இருக்கு

தற்போது மீண்டும் திரைப்படங்களில் பிஸியாகிவிட்டார். இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருடைய ரசிகர்களுக்காக அடிக்கடி போட்டோஷூட்டும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர் சும்மா இருந்தாலும் ரசிகர்கள் இவரை இருக்க விடுவதில்லை. இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன் பேஜ்களை வைத்து இருக்கின்றனர். அதில் ரம்யா பாண்டியனின் போட்டோக்களும் வீடியோக்களும் வெறித்தனமாக வலம்வரும். அந்த போட்டோக்களுக்கு கூட ரசிகர்கள் இவர் எப்போது லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிடுவார் என்று தான் அதிகமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள். தற்போது இவருடைய பிறந்த நாளுக்குப் பிறகு எந்த போஸ்ட்டும் போடாமல் இருந்த ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் ஒரே நேரத்தில் போஸ்ட் போட்டிருக்கிறார். அதுவும் தங்கம் போல ஜொலிக்கும் இவர் மாம்பழ கலரில் உடை அணிந்து ரசிகர்களின் மனதிருக்கு சுவையூட்டி இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்ததும் பல நாட்கள் கழித்து வந்தாலும் தகுந்த பரிசோடு தான் வந்திருக்கிறார் என்று ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால் சமூக வலைத்தளமே அலறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+