This Week OTT: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் உட்பட.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ
சென்னை: பிப்ரவரி மாசம் ஆரம்பம் சூப்பரா இருக்கப் போகுது! நிறைய புது படங்கள், வெப் சீரிஸ் எல்லாம் OTT-ல ரிலீஸ் ஆகப் போகுது. Netflix, Prime Video, Disney+ Hotstar, Zee5 எல்லாத்துலயும் என்னென்ன புதுசா வருதுன்னு பாருங்க. உங்களுக்குப் பிடிச்சதை தேர்ந்தெடுத்து இப்போவே பாக்க ஆரம்பிங்க!
இந்த வாரம் பார்க்கவேண்டிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்:
Anuja (Netflix): ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் பண்ணின இந்த குறும்படம் ஒரு பொண்ணோட கதை. ஒரு கார்மெண்ட் ஃபேக்டரில வேலை பாக்குற பொண்ணுக்கு ஸ்கூலுக்குப் போக சான்ஸ் கிடைக்குது. அவ என்ன முடிவு எடுக்குறா, அது அவளோட வாழ்க்கைய எப்படி மாத்துதுன்னு பாருங்க. பிப்ரவரி 5-ம் தேதி Netflix-ல ரிலீஸ் ஆகுது. இதே போல, The Åre Murders என்ற ஸ்வீடன் திரில்லர், Cassandra என்ற ஜெர்மன் அறிவியல் புனைகதை தொடர் ஆகியவையும் நெட்ப்ளிக்சில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Kobali - Disney+ Hotstar: ராயலசீமா பின்னணியில் அமைந்த இந்த தெலுங்கு தொடர், அதிகாரம், துரோகம் மற்றும் பழிவாங்கல் வலையில் சிக்கிய இரண்டு குடும்பங்களைச் சுற்றி வருகிறது. ரவி பிரகாஷ், பரத் ரெட்டி, ரேவந்த் லேவகா மற்றும் தருண் ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த பழிவாங்கும் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது.

Bada Naam Karenge (SonyLIV): ஒரு கல்யாணமான தம்பதி. அவங்களுடைய பழைய ரகசியங்கள் வெளியில வரதால அவங்களுக்குள்ள பிரச்சனை வருது. Ritik Ghanshani, Sachin Viddrrohi, Rajesh Tailang, Omm Dubey நடிச்சிருக்காங்க. பிப்ரவரி 7-ம் தேதி SonyLIV-ல பாக்கலாம்.

Mrs (Zee5): கல்யாணம் ஆன ஒரு பொண்ணு சமையலறையில தன்னோட அடையாளத்த கண்டுபிடிக்க முயற்சி பண்ற கதை. Sanya Malhotra, Kanwaljeet Singh, Siya Mahajan, Nishant Dahiya எல்லாம் நடிச்சிருக்காங்க. பிப்ரவரி 7-ம் தேதி Zee5-ல பாக்கலாம்.

Madraskaaran (Aha): ரெண்டு பேரு சும்மா சண்டை போட்டுக்கிறாங்க. அது பெருசா ஒரு பிரச்சனையாவே மாறுது. அதான் கதை. Shane Nigam, Aishwarya Dutta, Geetha Kailasam, Niharika Konidela, Kalaiyarasan நடிச்சிருக்காங்க. பிப்ரவரி 7-ம் தேதி Aha-ல ரிலீஸ் ஆகுது.

The Mehta Boys (Prime Video): அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில இருக்கிற உறவைப் பத்தி ஒரு படம். ரெண்டு பேரும் ஒரு 48 மணி நேரப் பயணத்துல அவங்களுடைய சண்டையையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்றாங்க. Shreya Chaudhry, Boman Irani, Puja Sarup, Harssh Singh, Avinash Tiwary நடிச்சிருக்காங்க. பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.













Click it and Unblock the Notifications