எதிர்நீச்சல் நடிகர்கள் நடிக்கும் புது சீரியல்.. விஜயகாந்த் பட பெயர் தான்.. இவங்களும் இருக்காங்களே!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பல பிரபலங்கள் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருக்கின்றனர். அதற்கான பூஜை இன்று நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த சீரியலுக்கு "சொக்கத்தங்கம்" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்று அதிகமான சீரியல் அப்டேட் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியலின் கடைசி நாள் சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அது குறித்து பலர் வருத்தங்களாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். அதுபோல பல புது சீரியல்களின் பூஜைகளும் இன்று நடத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலின் தகவலைத்தான் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏற்கனவே சன் டிவியில் ஒரு வருடத்திற்கு முன்பு பூஜையோடு தொடங்கிய சீரியல்கள் இன்னும் வெளிவராமல் இருக்கும் நிலையில் இப்போது சமீபத்தில் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் நடிக்கும் சொக்கத்தங்கம் என்ற சீரியலின் பூஜை இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நடிகர் விஜயகாந்த் நடிப்பில் பெரிய அளவில் பாராட்டை பெற்று வெற்றி அடைந்த சொக்கத்தங்கம் திரைப்படத்தின் தலைப்பை இந்த சீரியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதோடு இந்த சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் தர்ஷன் கேரக்டரில் நடித்த நடிகர் ரித்திக் ராகவேந்திரா, ஜான்சிராணி கேரக்டரில் நடித்த காயத்ரி அதுபோல கரிகாலன் கேரக்டரில் நடித்த விமல் குமார் போன்றோர் இருக்கின்றனர். அதுபோல சன் டிவியில் விரைவில் முடிவடைய இருக்கும் பூவா தலையா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பாண்டி கமல், ஸ்வேதா இவங்களும் இருக்கிறார்கள். அதுபோல இன்னும் பல சீரியல் பிரபலங்களும் இந்த சீரியலில் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இந்த சீரியலை 18 Reels நிறுவனம் தான் ப்ரொடக்ஷன் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலை ப்ரோடக்ஷன் செய்து வருகிறது. இதனால் செவ்வந்தி சீரியல் இனி முடிவுக்கு வந்தால் அந்த நேரத்தில் சொக்கத்தங்கம் சீரியல் ஒளிபரப்பாகுமா? அல்லது வேறு நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறதா? என்று இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சிராணி மற்றும் கரிகாலனுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அந்த சீரியலில் நெகடிவ் கேரக்டர் செய்திருந்தாலும் இவர்களுடைய நடிப்புக்கு பலர் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர் இவர்கள் இனி இந்த சொக்கத்தங்கம் சீரியலில் என்ன மாதிரி கேரக்டரில் நடிக்கப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த பூஜை புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications