ப்ளீஸ் எனக்காக இதை பண்ணுங்க.. வேண்டுகோள் வைத்த அனிதா சம்பத்.. இன்ஸ்டாகிராமில் அதை பாத்தீங்களா..?
சென்னை: செய்தி வாசிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கும் அனிதா சம்பத் தன்னுடைய instagram பக்கம் மூலமாக ரசிகர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
தனக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு ஐடியை ரிப்போர்ட் அடிக்க வேண்டும் என்று அனிதா சம்பத் கூறியிருக்கிறார்.
அப்படி என்னதான் நடந்தது எதுக்காக அனிதா சம்பத் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில் ஒரிஜினலை விட டூப்ளிகேட்டுகள் அதிகமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது பொருள்களாக இருந்தாலும் சரி மற்றவர்களுடைய அடையாளத்தை திருடுவதாக இருந்தாலும் சரி, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பலர் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அந்த மாதிரி தான் தற்போது அதிகமாக நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் பெயரில் போலியான இணையதள முகவரிகள் தொடங்கப்பட்டு, அவர்களுடைய ஐடியில் இருந்து பிரபலங்கள் பேசுவது போன்று பேசி சாதாரண மக்கள் பலரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அதில் பலர் சிக்கி பல லட்சங்களை இழந்தவர்களும் உண்டு. சிலர் மிரட்டலுக்கு ஆளாவது உண்டு.
அந்த வகையில் செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும், பிக் பாஸ் பிரபலமாகவும் இருக்கும் அனிதா சம்பத் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு ரசிகர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு காரணம் தன்னுடைய பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் ஐடி ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் தன்னுடைய வீடியோக்கள் பலவற்றை போட்டு தன்னை போலவே அந்த ஐடியை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

அந்த ஐடி உண்மையில் என்னுடையது கிடையாது. தயவு செய்து என்னுடைய நண்பர்கள் அனைவரும் குறிப்பிட்ட அந்த இன்ஸ்டாகிராம் ஐடியை ரிப்போர்ட் செய்து எனக்கு உதவுங்கள் என்றும் அனிதா சம்பத் கூறியிருக்கிறார். ஏற்கனவே இது போல பல பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடித்த குமரன் பெயரிலும் இதுபோன்று போலியான ஒரு ஐடியில் இருந்து ரசிகர்களிடம் குமரன் பேசுவது போல பேசி whatsapp நம்பர் கேட்டு வீடியோ கால் செய்வதாக தொந்தரவு செய்திருந்தனர்.
அது குறித்து குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இது போலியான ஐடி இதை யாரும் ஃபாலோ செய்யாதீர்கள் என்று எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த நிலையில் இப்போது அனிதா சம்பத் பெயரிலும் போலி அக்கவுண்ட் தொடங்கப்பட்டிருப்பது குறித்து இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கவனமாக இது ஒரிஜினல் ஐடி தானா? என்று செக் பண்ணி பிரபலங்களை பின்தொடர வேண்டிய நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். இதில் அதிகமான கவனம் கண்டிப்பாக வேண்டும்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications