4 முறை அந்த டிவியில் ரிஜெக்ட் பண்ணாங்க! “கோடை இடி” பட்டம் கொடுத்த கலெக்டர்- நிர்மலா பெரியசாமி ஓப்பன்
சென்னை: செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி பல வருடங்கள் கழித்து தான் எப்படி செய்தி வாசிப்பாளராக மாறினேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் தனக்கு ஆரம்பத்தில் 4 முறை டிவி சேனலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு பிறகு சன் டிவி மூலமாகத்தான் செய்தி வாசிப்பாளராக பிரபலம் அடைந்தேன் என்று கூறியிருக்கிறார்.
அதோடு பள்ளியில் தான் படிக்கும் போதே தனக்கு கலெக்டரால் கோடை இடி என்று பட்டம் கொடுக்கப்பட்டது. அதற்கு காரணம் இதுதான் என்று ஒரு ரகசியத்தையும் நிர்மலா பெரியசாமி உடைத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளர்களில் ஒரு சிலர் மக்கள் மத்தியில் அதிகமான பிரபலமடைந்திருக்கின்றனர். அதில் ஒருவர் தான் நிர்மலா பெரியசாமி இவர் 90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் செய்தி வாசிப்பாளர். இவர் சன் டிவியில் சில வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது மக்கள் மத்தியில் பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு இருந்தது.
அதிலும் இவர் மேட்சிங் மேட்சிங் ஆக புடவைக்கு தகுந்த நகைகள் அணிந்து எளிமையாகவும் அதே நேரத்தில் வசீகரமாகவும் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதுபோல தினமும் இவர் உடுக்கும் புடவையை பார்ப்பதற்காகவே பல பெண்கள் செய்தி சேனல்கள் பார்த்த கதை உண்டு. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இவருடைய செய்திக்காக காத்திருந்த கதை எல்லாம் உண்டு. இந்த நிலையில் முதல் முறையாக நிர்மலா பெரியசாமி தான் எப்படி ஒரு செய்தி வாசிப்பாளராக மாறி இருந்தேன் என்பது பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் எங்க அப்பா அவருடைய நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது எனக்கு அரசியல் ஆர்வம் தன்னிச்சையாக வந்துவிட்டது. நான்காம் வகுப்பு படிக்கும் போது அப்பாவும் அவருடைய நண்பர்களோடும் சேர்ந்து நான் அரசியல் விவாதிப்பேன். அதற்கு பிறகு அதிகமாக நான் புத்தகங்களை படிக்க தொடங்கினேன்.
பள்ளியில் படிக்கும் போது நான் அதிகமாக கர்ணன் வேஷம் போடுவேன்.. ஸ்கூலில் எல்லா போட்டிகளிலும் நான் கலந்து விடுவேன். படிப்பில் மட்டுமல்லாமல் போட்டிகளிலும் நான் முதலாக இருப்பதால் பள்ளியில் நான் செல்லப்பிள்ளை அதனால் எல்லா வருஷமும் கர்ணன் வேஷம் எனக்கு மட்டும்தான். அப்போது ஒரு முறை நான் மேடையில் நாடகம் நடித்ததை பார்த்து அங்கு வந்த கலெக்டர் ஒருவர் இவர் மைக்கே இல்லாமல் கோடை இடி போல பேசுகிறார் என்று என்னை பாராட்டி இருந்தார்.
அதற்குப் பிறகு பள்ளியில் எல்லோரும் என்னை கோடை இடி என்று கூப்பிடுவார்கள். பிறகு நான் கல்லூரி எல்லாம் படித்து முடித்த பிறகு வேலை செய்யலாம் என்று முயற்சி செய்திருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு திருமணம் முடிந்து விட்டது. திருமணத்திற்கு பிறகு சென்னைக்கு வந்தேன் சென்னைக்கு வந்ததும் நான் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்று தூர்தர்ஷன் நான்கு முறை இன்டர்வியூக்கு போயிருந்தேன்.
என்னை நான்கு முறையும் நிராகரித்து விட்டார்கள் அந்த நேரத்தில் தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஆள் எடுத்தார்கள். நான் அங்கு இன்டர்வியூக்கு போயிருந்தேன். பல பேர் வந்த இடத்தில் நான் பல கட்ட இன்டர்வியூ நடைபெற்ற போதிலும் அதில் தேர்வாகியிருந்தேன். அப்போது இன்டர்வியூ எல்லாம் ரொம்பவே கஷ்டமாக இருக்கும் நான் அரசியலில் எல்லாம் ஆரம்பத்திலேயே ஆர்வமாக தெரிந்து கொண்டதாலே எனக்கு அந்த இன்டர்வியூவில் வெற்றி பெற முடிந்தது.
பிறகு நான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக என்னுடைய பயணத்தை தொடங்கியதுமே மக்கள் மத்தியில் எனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. தனியார் தொலைக்காட்சியில் மூலமாக மக்கள் மத்தியில் இவ்வளவு இடத்தை பிடிக்கலாம் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. அந்த நேரத்தில் நான் பிசினஸும் செய்து கொண்டிருந்ததால் செய்தி வாசிப்பதற்கு அவசர அவசரமாக தான் வருவேன்.

அதுபோல நான் ஒரு நாள் அணிந்த புடவையை எந்த இடத்திலும் மறுபடியும் அணிய மாட்டேன். அதுபோல என்னுடைய உடை அலங்காரம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. நான் கை இறக்கி பிளவுஸ் போட்டால் அது தமிழ்நாட்டில் ட்ரெண்டாகிவிடும். அதுபோல நான் கையை மேலே கொஞ்சம் தூக்கி விட்டால் அதுவும் டிரெண்டாக இருந்தது. அதை எல்லாம் நான் ரொம்பவே ரசித்து இருந்தேன் என்று அந்த பேட்டியில் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications