நூலில் ஆடும் பொம்மையாகிப் போனாளே நிலா!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் மர்ம முடிச்சுகளுடன் ரொம்ப நல்லா இருக்கு.ஒவ்வொரு நாளும் நிலாவின் தவிப்பு நமக்கும் வந்துருது.
நிலாவை நீலாம்பரியின் மகன் பாருக்கு அழைச்சுட்டு போனதுக்கு பிறகு, நிலாவின் அப்பா இனி உங்க பையனுக்கு பொண்ணு தர மாட்டேன்னு உறுதியா சொல்லிட்டு வந்துடறார்.
அப்போதும் நீலாம்பரி இந்த கல்யாணம் நடக்கும்னு சவால் விட, நிலாவின் அப்பாவுக்கு ரொம்ப கோவம் வந்துருது. திட்டிட்டு வந்துடறார்.

கல்யாணம்
நிலாவின் கல்யாணம் நடக்காதுன்னு வீட்டில் சொல்றார் நிலாவின் அப்பா. நிலாவின் அம்மாவும் மாமாவும் கவலையில் இருக்க, நிலா எதுக்குமே ஒன்னும் பேசாம இருக்கா. அவ இன்னும நீலாம்பரியை நம்பறதா தெரியுது.

தங்கை
நீலாம்பரியின் தங்கை வெண்மதி வெளிநாட்டில் இருந்து சஞ்சய் கல்யாணத்துக்காக வந்திருக்கா. அவ நிலா வீட்டுக்கு வர்றா. நிலாவின் அப்பாகிட்ட சமாதானம் பேசறா. இனிமே நிலாவை சஞ்சய் அழைச்சுக்கிட்டு போக மாட்டான். இதுக்கு நான் கேரன்டின்னு சொல்றா.

வளர்ந்தது
சஞ்சய் வளர்ந்தது அப்படி.. அவனுக்கு எடுத்து சொன்னாலும் இப்போதைக்கு புரிய வைக்க முடியாது. கல்யாணத்துக்கு பிறகு அவன் நல்ல பையனா மாறிடுவான். உங்க பொண்ணு நிலாவே அவனை மாத்திடுவான்னு நான் நம்பறேன்னு சொல்றா.

நடக்கணும்
நிலாவை சஞ்சய்க்கு ரொம்ப பிடிச்சு போச்சு. அவனை மாத்தறது சுலபம்.. இந்த கல்யாணம் நடக்கணும்..அதை கேட்கத்தான் வந்தேன்னு சொல்றா. வீட்டுக்கு வந்தப்போ உங்க அக்கா இப்படி பேசலை. ஆனா, உன்னை மாதிரி சஞ்சயும் நல்லவனா மாறுவான்னு நினைக்கறேன்.. இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்னு சொல்றார்.
நிலா எண்ணத்தை மனசுல நினைச்சுகிட்டு இருக்கான்னே தெரியாத மாதிரியான முகபாவத்தில் நிக்கறா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications