ஒன்னு.. 50 சதவிகிதம் ஓகே.. இன்னொன்னு...75.. அப்ப இன்னொன்னு...!
சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் நிலா, திரு சொந்தம்னு காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டவங்க.
ஆனா, இன்னும் முதலிரவு நடக்க விடாம திருவின் அம்மா தனக்கு பிடிச்ச ஆஃபீஸ்ல வேலை செய்யற அஞ்சலியை சேர்த்துக்கிட்டு பிளான் பண்றாங்க.
இன்னிக்கு முதலிரவு வச்சுக்கலாம்னு ரெண்டு பேரும் முடிவெடுக்கையில், அஞ்சலிகிட்ட அவளுக்கு இன்னிக்கு முதலிரவு நடக்காதுன்னு சேலன்ஞ் பண்றாங்க..

சரியில்லையாம்..
மாமியார் உடம்பு சரியில்லைன்னு மயங்கி விழறாங்க. உடனே டாக்டர் வீட்டுக்கு வந்து, ரொம்ப கிரிட்டிக்கல்தான்.. நான் மருந்து தந்துட்டு போறேன்.. மணிக்கு ஒரு தடவை இதை சரியா கண்ணு முழிச்சு குடுத்துடனும்னு சொல்லிட்டு போறாங்க.

கண்ணு முழிக்கறது
யார் கண்ணு முழிக்கறதுன்னு பேசிகிட்டு இருக்கும்போது, அஞ்சலி எனக்கு ஆ ஃபீஸ் ஒர்க் நிறைய இருக்கு.. அதை பார்க்கணும்னு சொல்றா.திரு அம்மாவும், அவளை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு சொல்றாங்க. வேலைக்கார அம்மா பார்த்துக்குவாங்கன்னு திரு சொல்ல, அவ எப்போ பார்த்தாலும் இருமிகிட்டே இருப்பா. அவ வியாதி எனக்கு ஒட்டிக்கும்னு சொல்றாங்க.

மனசும் புண்பட
அத்தே.. யார் மனசும் புண்பட பேச கூடாது அத்தே..அப்படி பேசினா நரகத்துல இரும்புல நகம் செய்து, கை விரல்கள்ல மாட்டிவிட்ருவாங்களாம் . அதை போட்டுக்கிட்டு உடம்புல அரிக்குதுன்னு சொறிஞ்சா ரத்தம் வரட்டும், உடம்பெல்லாம் எரியட்டும்னுதான் நிலா சொல்ல, இதெல்லாம் எதுக்கு.. இப்போ என்கூட நைட்ல யார் இருக்க போறீங்கன்னு மாமியார் கேட்கறாங்க.

உங்க மருமக
நான்தான் அத்தை உங்க மருமக.. நான்தான் உங்களை பார்த்துக்கணும்னு சொல்றா. புருஷன் கோச்சுக்கிட்டு ரூமுக்கு போயிடறான். அத்தை இப்போதுதான் தலை குளிச்சேன். தலையை காய வச்சுட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு ரூமுக்கு வர்றா.

கோவத்தில் புருஷன்
திரு கோவத்தில் இருக்க, என் ஆசை புருஷனுக்கு கோவமான்னு கேட்கறா. பின்னே அஞ்சலியை நம்ம வேலைக்கு வச்சுக்கிட்டு, சம்பளமும் தர்றோம். அவ ஆஃபீஸ் வேலையை செய்துகிட்டே அம்மாகூட இருந்து கவனிச்சுக்கிட்டே பார்க்க கூடாதான்னு கேட்கறான்.

அத்தான்
இருக்கட்டுமே அத்தான்.. எனக்குத்தான் அத்தையை பார்த்துக்கற கடமை இருக்கு. பாருங்க இன்னிக்கு ஒரு நாள் சந்தோஷத்தை விட்டுக் குடுத்தா.. பல நாள் சந்தோஷத்தை கடவுள் நமக்கு அள்ளி அள்ளி தருவார்னு சொல்றா..

ரெண்டு முத்தம்
போ நிலா.. இன்னிக்கு நான் எவ்ளோ ஆசையா இருந்தேன். எல்லாத்தையும் கெடுத்துட்டேன்னு சொல்றான். என் ஆசை அத்தானுக்கு ஒரு முத்தம்னு சொல்லி குடுக்கறா. இப்போ திருப்தியான்னு கேட்க..50 சதவிகிதம் ஓகேன்னு சொல்றான். அப்படியான்னு இன்னொரு முத்தம் தர..இப்போ 75 சதவிகிதம்ன்னு சொல்றான்.

100 லிப்லாக்குங்க..
அப்டியா இருங்கன்னு கன்னத்தில் மாத்தி மாத்தி முத்தம் குடுக்க 90, 99 சதவிகிதம் ஓகேன்னு சொல்றான்...100 ல்லாம் இப்போ கிடைக்காது.. கம்முன்னு படுங்க அத்தான்னு சொல்றா நிலா.
புரியலையா.. 100 ன்னா லிப்லாக்குங்க....!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications