Nila Serial: நிலா வீரபத்ரனுக்கு சின்ன மேடமா? ஆஹா சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவை சுற்றி பல்வேறு மர்மங்கள் இருந்து, அவைகள் விடுபட்ட நிலையில், இப்போது அவளுக்கே தெரியாமல் அவளை சுற்றி என்னவோ மர்மம் நடப்பது போலிருக்கிறது.

நிலாவின் அப்பா,ஸ்ரீதரும், நீலாம்பரியும் பிசினெஸ் பார்ட்னர்கள்.வாழக்கையிலும் இணையலாம் என்று நீலாம்பரி கனவில் இருக்கும்போது, தனக்கு கல்யாணமாகி மனைவி முழுக்காமல் இருப்பதாக ஸ்ரீதர் சொல்றார்.

அன்றிலிருந்து ஸ்ரீதருக்கு ஆபத்து சுற்றிக் கொள்கிறது நீலாம்பரி .கடைசியில் ஸ்ரீதரை கொன்றே விடுகிறாள். ஆனால், அவள் தான் கொன்றுவிட்டதாக நினைத்த ஸ்ரீதர் உயிரோடு இருப்பதை பார்க்கிறாள்,

ஸ்ரீதரின் சொத்து

ஸ்ரீதரின் சொத்து

ஸ்ரீதரின் சொத்தை அடைய எப்படியோ, ஸ்ரீதரின் மகள் நிலாவை கண்டுபிடிச்சு தனக்கு மருமகளாக்கி அவளது பெயரில் இருக்கும் ஸ்ரீதரின் சொத்துக்கள் அத்தனையையும் தனக்கு சொந்தமாக்கிக்க நினைக்கிறாங்க. அதே போல நீலாம்பரியின் தம்பி அசோக்கை கல்யாணம் செய்துக்கிட்டவள் போல நடிக்கிறாள் நிலா.

அன்வர் ஸ்ரீதர்

அன்வர் ஸ்ரீதர்

ஹைதராபாத்தில் நிலா தனக்குத் தானே தாலி கட்டிக்கொண்டதை பார்த்த நீலாம்பரியின் ஆள் வீரபத்திரன் ஒரு விபத்தில் நினைவின்றி கிடக்க, அவனை சென்னைக்கு வரவழைச்சு அதுவும் அன்வராக மாறி இருக்கும் ஸ்ரீதரிடமே வைத்தியம் பார்க்கறீறாங்க. அவருக்கு இருபது வருடத்துக்கு முந்தைய நினைவு எதுவும் இல்லையாம் என்று வைத்திய சாலை வைத்து நடத்தும் காப்பாளர் கூறுகிறார்.

நினைவு வீரபத்ரனுக்கு

நினைவு வீரபத்ரனுக்கு

வீரபத்ரனுக்கு நினைவு வந்துவிட்டது என்று நர்ஸ் சொலல் ,உடனே நிலாவை அழைச்சுக்கிட்டு போறாங்க நீலாம்பரி. நிலா வீரபத்ரனை பார்த்து ஷாக்காகி நிற்க, அதாவது நிலா தனக்குத் தானே தாலி கட்டிக்கொண்டதை கண்ட ஆள், இவன்தான் .இதை நீலாம்பரியிடம் சொல்லத்தான் வீரபத்திரன் துடிச்சுக்கிட்டு இருக்கான். நீலாம்பரி, வீரபத்ரா இவதான் நிலா...இவளை உனக்கு யாருன்னு தெரியுதான்னு கேட்க, நிலா பயத்தில் ஒளிஞ்சு நிக்கறா.

நிலா முன்னால்

நிலா முன்னால்

நிலா என் பின்னால எதுக்கு ஒளிஞ்சு நிக்கறே.. முன்னால வந்து நில்லு நிலான்னு சொல்லி வீரபத்ரனை நீ பார்த்திருக்கியான்னு கேட்கறாங்க. இல்லை ஆண்ட்டின்னு இவள் சொல்ல, வீர் பத்ரா நீ பார்த்து இருக்கியான்னு கேட்கறாங்க. அவனும் இல்லைன்னு சொல்றான்.உனக்கு இன்னும் முழுசா நினைவு வரலை போலிருக்கு.. சரி நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு போக, நிலாவும் பின்னால் போகிறாள்

சின்ன மேடம்னு கூப்பிட்ட வீரபத்திரன்...இனிமேல் நன் உங்க பக்கம்தான்னு சொல்லி தம்ஸ் அப் காமிக்கறான் சிரிச்சுகிட்டே. நிலாவோ விழிக்கிறாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+