Nila Serial: பத்துன்னு சொன்னாலே சஞ்சய்க்கு டென்ஷன் எகிறுதே ஏன்?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் பெண்களுடன் ஆட்டம் போட்ட சஞ்சய்க்கு பத்து என்று சொன்னாலே டென்சன் ஏகத்துக்கும் எகிறிப் போகுதே..ஏன்னு தெரியலை.
நீலாம்பரியின் ஒரே மகன் சஞ்சய் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் படுக்கையை பகிர்ந்துக் கொள்பவன். இப்படித்தான் நிலா அவனை இனம் கண்டு தனது தங்கை ஸ்வேதாவை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.
கடைசியில் ஓரு பிளானில் நிலா நீலாம்பரியின் தம்பி அசோக்கை இரண்டாம் தாரமாக பொய் கல்யாணம் செய்துகிட்டு நீலாம்பரி வீட்டுக்கு மருமகளா வந்துடறா.

சஞ்சய் ஸ்வேதா
நிலாவின் தங்கை ஸ்வேதா சஞ்சயிடம் தன்னை பறிகொடுத்துவிட்டும் , இவர்களை ஏத்துக்க மறுக்கறாங்க நீலாம்பரி. இவர்களை எப்படியும் சேர்த்து வைத்திட வேணும்னு நினைச்ச நிலா, தனது மறுதாலி சடங்கில் இதுக்கு ஒரு முடிவு கட்ட எண்ணுகிறாள் .நீலாம்பரிக்கு தனது தம்பி அசோக்கை நிலா திருமணம் செய்து கொண்டது உண்மைதானா என்று சந்தேகம் வர, மறுதாலி சடங்குக்கு ஏற்பாடு செய்யறாங்க. இதை சாதகமாகப் பயன்படுத்திகிட்ட நிலா அந்த தாலியை நீலாம்பரி மகன் சஞ்சயை விட்டு ,ஸ்வேதாவின் கழுத்தில் கட்டிட வைக்கிறாள்.

கல்யாணம் முடிந்து
ஒரு வழியாக கல்யாணம் முடிந்தும், சஞ்சய் நடவடிக்கை மாறவில்லை. தங்கையின் புருஷன் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டு இருந்ததையும் ஒரு நாள் நிலா பார்த்து அவனைக் கண்டிக்கிறான், ஸ்வேதா இது கூட புரியாமல், என் புருஷனை ஏண்டி இப்படி திட்டறேன்னு கேட்க, உனக்காக தாண்டி அவன்கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன். புருஷனை திருத்தி உன் கூட வச்சுக்கோன்னு சொல்றா நிலா

பத்து லட்சம் ரூபாய்
சஞ்சய் தன்னை கெடுத்துவிட்டான் என்று ஒரு பெண் அவனிடம் கூறியதோடு, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் உன்னை போலீசில் மாட்டி விட்டுடுவேன் என்றும் மிரட்டுகிறாள். உடனடியாக பத்து லட்சம் ரூபாய்க்கு எங்கே போவேன் என்று சஞ்சய் புலம்ப அந்த பெண் போய் விடுகிறாள். எப்படி பத்து லட்சம் ரூபாய்க்கு எங்கேடா போவதுன்னு யோசிச்சு டென்ஷன்ல இருக்கான்.

கீரை கட்டு
ஸ்வேதா அங்கிருந்து வந்து ஏங்க பத்து ரூபாய் குடுங்கன்னு கேட்க, பத்துன்னு கேட்ட உடனே டென்ஷன்ல குதிக்கறான் சஞ்சய். எதுக்குங்க இப்படி டென்சன்ஆகறீங்க. பத்து ரூபாய் இல்லேன்னுதானே கேட்டேன்னு மறுபடியும் பத்துன்னு சொல்லி டென்ஷனாக்கறா.. திரும்பிப் போன ஸ்வேதா மறுபடியும் வந்து நீங்க எதோ டென்ஷன்ல இருக்கீங்க.ஒரு பத்து நிமிஷம் அமையா இருக்கீங்கன்னு சொல்றதுக்குள்ள...பத்து பத்து பத்துன்னு கத்தறான் சஞ்சய், ஸ்வேதா வெளியில் ஓடிப் போயிடறா.
எதுக்கு பல பெண்களோட சகவாசம் வச்சுக்குவானேன்... பின்னே பத்துன்னா பதறுவானேன்?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications