நீலாம்பரி நிலாவை மருமகளாக்க நினைக்க ... மகனோ நிலா தங்கச்சி பின்னால சுத்தறானே!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியல் ஆரம்பிச்சு ரெண்டு வாரங்களுக்கு மேல ஆகியும் கூட, பல விஷயங்கள் புரியாத புதிராவே இருக்கு. நிலாவுக்கு உண்மையான அம்மா , அப்பா இவங்கதானா?
நிலாவை தனக்கு மருமகளாக்க நீலாம்பரி துடிக்கறாங்களே ஏன்? நீலாம்பரி வீட்டுல கட்டி போட்டு வச்சுருக்கற பொண்ணு யாரு.. இப்படி பல விஷயஙங்கள் தெரிஞ்சுக்க ஆவல் வருது.
ஆனா, நிலா அப்பா சொல்றார் உன்மேல அம்மாவுக்கு பாசம் அதிகம்மா.. அதனாலதான் உன்கிட்ட மட்டும் கண்டிப்பா நடந்துக்கறான்னு.. இதை தெரிஞ்சுக்கவே பல பேர் நிலா சீரியலை தொடர்ந்து பார்க்கறாங்க.

கல்யாணம் வேண்டாம்
நீலாம்பரி தன் மகனை, பெங்களூருவில் இருந்து உடனடியா கிளம்பி வர சொல்லி, நிலா போட்டோவை காமிக்கறாங்க. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைம்மா.. பொண்ணு நல்லாருக்குன்னுதானே சொன்னேன்னு சொல்லிடறான் பையன். நீலாம்பரி ஒரு முடிவெடுத்துட்டா சாமியால கூட மாத்த முடியாதுன்னு சொல்றாங்க நீலாம்பரி.

குட்டி 16 அடி
நீலாம்பரி மகன் தனது மாமாகிட்ட சொல்றான், தாய் எட்டடி பாய்ஞ்சா, குட்டி 16 அடி பாயும்..போகப் போக என் ஆட்டத்தை பாருங்க மாமான்னு சொல்றான். பொண்ணுகளை என் பக்கம் இழுப்பது எனக்கு சாதாரண விஷயம்னு சொல்றவன் இவன்.

யாரையாவது காதலிக்கறாளா
நிலாவின் அம்மாவை அழைச்சு, உண்மையை சொல்லுங்க..உங்க பொண்ணு யாரையாவது காதலிக்கறாளான்னு கேட்கறாங்க. ஆனா, நிலாதான் என் மருமகன்னு நான் முடிவு பண்ணிட்டேன்னும் சொல்றாங்க.நிலா கார்த்திக் மேல் விருப்பப்படுவதை சொல்லி, ஆனா, அப்பா, அம்மா எங்க பேச்சை நிலா மீற மாட்டா மேடம்னு நிலா அம்மா சொல்றாங்க.

ஸ்வேதா
நீலாம்பரி பையன் ரெண்டு நாளாவே நிலாவின் தங்கை ஸ்வேதாவை ஃபாலோ பண்றான். அவள் ஸ்கூட்டியை விட்டுட்டு கடைக்குள் போய் வருவதற்குள் டயரில் காத்தை புடுங்கி விட்டுடறான். உதவி செய்யட்டுமான்னு கேட்க, நீதானே காத்தை புடுங்கி விட்டேன்னு கேட்கறா ஸ்வேதா.

பார்க்க ஆரம்பிச்சுட்டா
இல்லைன்னு நிரூபிக்க நான் என்ன பண்ணனும்னு கேட்கறான் இவன். அதோ இருக்காங்களே அந்த பொண்ணுங்க.. அவங்ககிட்ட போயி ஃபிரண்டாகு பார்ப்போம்னு சொல்றா. இவனும் ரெண்டு பொண்ணுங்ககிட்ட பேசி, செல்ஃபி எடுத்து, விசிட்டிங் கார்டு குடுக்கற அளவுக்கு போயிடறான். வியந்து போயி அவனையே பார்த்து நிக்கறா ஸ்வேதா.. மறுபடியும் உதவி வேணுமான்னு அவன்கேட்க, வேணாம்னு சொல்லிடறா. இவன் வண்டியை எடுக்க, அவனையே பார்த்து நிக்கறா ஸ்வேதா.

ஏன் அப்படி?
பார்க்க வச்சுட்டேன்ல... பாரு இன்னும் என்னென்ன செய்ய போறேன்னுன்னு தனக்குள்ளே சொல்லிகிட்டே கிளம்பறான். இப்போ சீரியல்களில் அக்காவை பார்க்க போனா தங்கச்சியை புடிச்சு போகுது. தம்பியை பார்க்க போனா அண்ணனை பிடிச்சு போகுதே.. ஏன்?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications