நிகிதாவின் 4வது கணவன்.. பின்னாலயே 2வது புருஷன்! இடிக்குதே? கோடம்பாக்கம் ஸ்வாதி நினைவிருக்கா: பிரபலம்
சென்னை: "வளமான உலகம் இருந்தால், அதில் அனைவருக்குமே வேலைவாய்ப்புகள் இருந்திருந்தால், அவரவர் தங்களுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருப்பார்கள். வேலைவெட்டிகள் பலருக்கும் இல்லாததால்தான், நாட்டில் மோசடி குற்றங்கள் பெருகிவிட்டன. சோம்பேறிகள் மூளைதான் சாத்தான்கள் வசிக்கும் வீடு என்று ஆங்கிலத்தில் பழமொழியே உண்டு" என்று நிகிதா விவகாரத்தில் டாக்டர் காந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமானது குறித்து, மதுரை திருமங்கலம் நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரிக்க அழைத்து சென்று தாக்கினார்கள். அப்போது அஜித்குமார் இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நகை மாயமானதாக புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

கண்ணீர் வீடியோ
இந்நிலையில், நிகிதா கண்ணீருடன் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "என்னை பற்றி இப்போது பல்வேறு தரப்பினர் பேட்டியளித்து வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று எனக்கு தெரியும்.
என்னுடைய சொந்த வாழ்க்கையை பேசுவதற்கு முன்பு அவர்களுடைய நிலையை யோசித்து பார்க்க வேண்டும். எனக்கு பெரிய அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் நன்கு தெரியும், அதை பயன்படுத்தி தான் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நான் பொறுமையாக இருந்து வருவதால் குற்றவாளி கிடையாது. அஜித்குமார் இறந்ததற்கு அவருடைய தாயாரிடம் நான் பலமுறை மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
நான்கு திருமணங்கள்
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "நிகிதா பற்றி கேள்விப்படும்போது எல்லாமே இங்கு தப்பாக இருக்கு. 4 கணவன்கள்.. 4 திருமணமுமே மோசடி. அரசு வேலையில் இருந்துள்ளதால், இவரை பலர் ஆதாயத்துக்காக பயன்படுத்தியிருக்கலாம்.
ஒரு பெண் மோசடிப்பேர்வழி என்று தெரிந்தும் எதற்காக 3 பேரும் திருமணம் செய்ய வேண்டும்? எனவே 3 கணவன்மார்களையும் விசாரித்தால்தான் இதுகுறித்த உண்மை வெளியே வரும். 4வது கணவன் மட்டும்தான் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார். மற்ற 3 பேரும் ஏன் தெரிந்தே திருமணம் செய்துள்ளார்கள்? நிகிதாவால் ஏதோ சில காரியங்கள் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவா?
ஒரு பெண் சொன்னதுக்காகவே, ஒருவரை அடித்து கொன்றிருக்கிறார்கள் என்றால், அந்த பெண்ணின் பின்னால் இருப்பவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்? யாரோ செல்வமும், செல்வாக்கும் உள்ள மகத்தான சக்தி கொண்டவர், நிகிதா பின்னணியில் இருக்கலாம். எனவே கணவன்மார்களைதான் விசாரிக்கணும்.
ஒரு பெண் புகார் சொல்வதாலேயே, அதன்மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விடுகின்றன. நம்ம ஊரை பொறுத்தவரை தாய்க்குலம் என்றாலே அத்தனை பேரும் பொங்கிவிடுவார்கள்.
பெண் ஆண் சமமாக நீதி
ஒரு பெண்ணுக்கு அநீதியா? இதுதான் திராவிட மாடலா? என்று உடனே ஆவேசமாகிறார்கள். அநீதி இழைக்கப்படும்போது, பெண், ஆண் என்று தனித்து ஏன் பார்க்க வேண்டும். மனித இனம் என்று பொதுப்படையாக பார்க்கலாமே? பெண் என்றதுமே மீடியாக்காரர்கள்தான் ஹைலைட் செய்கிறார்கள். டிவி சீரியல்களில் பெண்களின் அதிகாரமே தலைதூக்கியிருக்கிறது.
இன்றைய சீரியலையும் எடுத்துப்பார்த்தால், மாமியார், எந்த காரணமுமில்லாமல் ஒரு நாத்தனார் அதே வீட்டில் கணவருடன் தண்டமாய் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். மருமகள் அந்த வீட்டில் போராடுவாள், பிச்சைக்கார குடும்பத்திலிருந்து வந்த உன்னை துரத்தாம விடமாட்டேன் என்பது கட்டாய டயலாக்காக இருக்கும்.
டிவி சீரியல் கொடுமை
நாத்தனார், மாமியார் 2 பேரும் சேர்ந்து, மருமகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதைதானே காலையில் 9 மணியிலிருந்து ராத்திரி 11 மணி வரை சீரியலில் காட்டுகிறார்கள். அந்த மருமகள் தப்பித்தவறி 2 நாள் சிரித்துவிட்டால், மாமியார் கொடுமை எதுவுமே இல்லாமல் அந்த சீரியல் படுத்துவிடும்.
ஒரு பெண் நன்றாக வாழ்ந்ததாக சீரியலில் காட்டுவதேயில்லை. அப்படியிருக்கும்போது, நிகிதா போன்ற சம்பவங்கள் நடக்கத்தானே செய்யும்? சுவேதா என்ற பெண்ணை கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி எறிந்தனர். உடனே ஒரு காமெடி நடிகர், என் சாதி பெண்ணை கொலை செய்யப்பட்டதற்கு என்ன நியாயம்? என்று கேட்டார். அதற்கு பிறகு அவரிடமிருந்து சத்தத்தையும் காணோம்.
கடைசியில் இளைஞர் ஒருவர்தான் குற்றவாளி என்று சொல்லப்பட்டது. அந்த இளைஞர் தன்னுடைய வாயில் எலக்ட்ரிக் ஒயரை வைத்து, பல்லால் கடித்து தற்கொலை செய்து கொண்டாராம். பூலோகத்திலேயே கேள்விப்படாத தற்கொலை இதுவாகும். இந்த கேஸ் மூடியாச்சு. இன்றுவரை சம்பந்தப்பட்டவர்கள் அந்த கேஸை எடுக்கவேயில்லை. ஏன் எடுக்கவில்லை என்பது தெரியாது.
அரசு வேலைகள்
நிகிதா பின்னாடி பவர்புல் ஆட்கள் உள்ளதாகவே தெரிகிறது. ஆடிட்டர் ரமேஷ் விவகாரத்திலும் இப்படித்தான். அனைவரும் பொங்கியெழுந்தார்கள். வழக்கை விசாரிக்க போகும்போது, ஆடிட்டர் ரமேஷ் பற்றின தவறான தகவல் சுற்றியதால், அதையும் மூடிவிட்டார்கள். இப்படி பல கேஸ்கள் உள்ளன. நிகிதா பற்றி கணவன்மார்கள் புகார்கள் தருகிறார்கள். பணமோசடிக்கு ஆளானவர்கள் புகார்கள் தருகிறார்கள். இப்படி வரிசையாக வந்து கொண்டிருக்கும்.
நிகிதா பின்னாடி இத்தனை பேர் சுற்றியிருக்கிறார்கள். அவரிடம் திறமை இருந்திருக்கிறது. அதனால்தான், அத்தனை பேரும் நிகிதாவிடம் அரசு வேலை கேட்டு சென்றிருக்கிறார்கள். அவரை 4 பேரும் திருமணம் செய்துள்ளனர். எனவே, 4 கணவன்மார்களையும் விசாரிக்க வேண்டும்.
முழுமையான விசாரணை தேவை
நிகிதாவின் 4வது கணவன் புகார் சொல்லவும்தான், நிகிதாவின் 2வது கணவரே புகார் சொல்ல வருகிறார். விளம்பரம் கிடைக்கிறது என்பதற்காக வருகிறாரா? அல்லது உண்மையிலேயே புகார் சொல்கிறார்களா தெரியவில்ல.
இன்று வேலைவாய்ப்புகள் இல்லை. சினிமா இன்று விழுந்துவிட்டது. ஓட்டல்கள் டவுன் ஆகிவிட்டன. பொழுதுபோக்க இப்படியெல்லாம் தவறான வழிகளில் பலர் ஈடுபடுகிறார்கள்.
வளமான உலகம் இருந்தால், அதில் அனைவருக்குமே வேலைவாய்ப்புகள் இருந்திருந்தால், அவரவர் தங்களுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருப்பார்கள். வேலைவெட்டிகள் பலருக்கும் இல்லாததால்தான், இதுபோன்ற மோசடி குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். சோம்பேறிகள் மூளைதான் சாத்தான்கள் வசிக்கும் வீடு என்று ஆங்கிலத்தில் பழமொழியே உண்டு" என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications