விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்
சென்னை: நடிகர் விஜய் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகள் புதிய திருப்பத்தை எடுத்துள்ளன. குறிப்பாக நடிகை திரிஷா உடன் அவர் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரிய விவாதமாக மாறி இருக்கிறது. இந்த சம்பவம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாமல், அவரது குடும்ப வாழ்க்கையுடன் இணைத்து பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் செய்தி வாசிப்பாளரும் அரசியல் பிரமுகருமான நிர்மலா பெரியசாமி அளித்த பேட்டி தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது. அவர் மிகவும் நேரடியாகவும், எதையும் மறைக்காமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நிர்மலா பெரியசாமி ஆதங்கம்
நிர்மலா பெரியசாமி பேசும்போது, "ஒரு பெண் என்ற அடிப்படையில் நான் சொல்லுகிறேன்... விஜய்க்கு ஒரு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் திரிஷாவை கூட்டிட்டு கல்யாணத்திற்கு போவது - அது சாதாரண விஷயம் இல்ல. அது அவருடைய மனைவி சங்கீதாவுக்கு எரிச்சல் வர மாதிரி செய்தது. அவருடைய மனதை நோகடிக்கணும்னு நினைச்சு செய்திருக்கலாம். இல்லன்னா ஒரு அகங்காரம்... 'நான் இப்படித்தான் செய்வேன், இப்ப என்ன பண்ணப்போறீங்க?'ன்னு காட்டுற மாதிரி இருந்திருக்கும்.
ஆணின் கடமை
ஒரு ஆணுக்கு முதலில் என்ன கடமைன்னா, பெற்றோரை பார்த்துக்கணும். குடும்பத்தை கவனிக்கணும். பணம் இல்லாத பெற்றோருக்கு உதவி செய்யணும். பெற்றவர்களுக்கு அன்பும் மரியாதையும் கொடுக்கணும். குழந்தைகளை கடைசி வரைக்கும் பார்த்துக்கணும். அதுக்கப்புறம் முக்கியமானது - கட்டுன மனைவியை நல்லபடியா பார்த்துக்கணும். இத்தனை வருடம் குடும்பமா வாழ்ந்த பிறகு கண்டபடி போயிட்டு இருந்தா, மனைவி கேள்வி கேட்கத்தான் செய்வா. அதுல என்ன தவறு?
விஜய் பற்றி நிர்மலா பெரியசாமி
உங்களுக்கு அவங்க வேண்டாம்னா, நேர்மையாக விவாகரத்து பண்ணிக்கலாம். அது ஒரு சட்டப்படி இருக்குற வழி. ஆனா விவாகரத்து பண்ணினா சம்பாதிச்ச பணத்துல பகிர வேண்டி வரும். அதனால அதை தவிர்க்கிறதுக்காக இப்படி நடந்து கொள்வது சரியா? பழிவாங்குற மாதிரி எந்த ஆணும் இப்படி செய்யக்கூடாது." இன்று நிர்மலா பெரியசாமி பேசி இருக்கிறார். இப்படி அவர் கடுமையாக பேசியிருப்பது தான் இந்த வீடியோ வைரலாக காரணமாகி இருக்கிறது.
இயக்குநர் சமுத்திரக்கனி ஆதங்கம்
இதற்கிடையில், விஜய் குறித்து திரையுலகத்திலிருந்து வரும் கருத்துகளும் மீண்டும் பேசப்பட ஆரம்பித்திருக்கின்றன. நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி முன்பு விஜயைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பர்களுடன் பேசி இருந்தார். அதில் இந்த கட்சி இப்போதுதான் நல்லபடியா மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் இவர் இந்த நடிகையோட இப்படி கல்யாண பங்க்ஷனுக்கு போகணுமா? இவர் யாரை பழிவாங்கறதுக்காக இப்படி பண்ணுறாரு? என்று பேசியிருந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்படுகிறது.
இந்த கருத்தை வைத்து, விஜய் ரசிகர்கள் அவரை ஆதரித்து வருகிறார்கள். "ஒரு நிகழ்ச்சிக்கு யாருடன் போனார் என்பதைக் கொண்டு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது" என்பதும் அவர்கள் வாதமாக உள்ளது.
மற்றொரு பக்கம், சில அரசியல் மற்றும் சமூக விமர்சகர்கள், "பொது வாழ்கையில் இருக்கும் ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு அளவு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குடும்பம், மனைவி, குழந்தைகள் குறித்து பொது வெளியில் பேசப்படும் விஷயங்கள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இப்படிப்பட்ட செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது.
-
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications