ஜெயலலிதா சன் டிவி நியூஸை பார்ப்பாங்க! கடைசியில் என்ன செய்வார் தெரியுமா? நிர்மலா பெரியசாமி பூரிப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சன் டிவி நியூஸை பார்த்தார்கள் என செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சினிமா மீதும் நடிகைகள் மீதும் தீராத அன்பு இருந்த காலகட்டத்தில் டிவி சேனல்கள் முளைத்தன. அதில் சன் டிவி 90 கிட்ஸ் இடையே மிகவும் பிரபலம். அந்த சேனலில் பணியாற்றிய பெப்சி உங்கள் சாய்ஸ் உமா, சன் மியூசிக் ஆனந்தக் கண்ணன், விஜயசாரதி, அர்ச்சனா, சுவர்ணமால்யா உள்ளிட்ட தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

அது போல் செய்தி வாசிப்பாளர்களான பாத்திமா பாபு, சுஜாதா, ரத்னா சிவராமன், வரிசையில் நிர்மலா பெரியசாமியை யாராலும் மறந்திருக்க முடியாது. அவர் செய்தி வாசிப்பின் போது வணக்க்க்கம் என்ற வார்த்தையை கேட்டுவிட்டு பின்னர் நகர்ந்தவர்களும் நிறைய பேர் உண்டு.
இது போன்ற தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்குக் கூட ரசிகர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் கூட அவர்களை நினைவு வைத்துக் கொண்டு எங்கு பார்த்தாலும் அவர்களிடம் நலம் விசாரிக்கிறார்கள். அந்த வகையில் நிர்மலா பெரியசாமி கலாட்டா சானலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் பலவிஷயங்களை ஷேர் செய்துள்ளார். அவற்றில் சில உங்களுக்காக:
என்னுடைய புடவையை பார்ப்பதற்காகவே நிறைய பேர் நான் நியூஸ் வாசிப்பதை பார்த்ததாக பொதுவெளியில் மக்கள் சொல்வார்கள். ஆள் பாதி ஆடை பாதி என்பதால் நான் நன்றாக உடை உடுத்த தொடங்கினேன். மேலும் மக்களின் பாராட்டுகளும் எனக்கு கிடைத்ததால் அந்த பேஷனை மக்கள் விரும்புகிறார்கள் என நினைத்து அதையே பிடித்துக் கொண்டேன்.
ஒரு முறை கட்டிய சேலையை திரும்பியும் கட்டவே மாட்டேன். அப்படியே அவசரத்திற்கு கட்ட வேண்டுமானாலும் கூட அது 3 அல்லது 4 மாதங்கள் கழித்துத் தான் இருக்கும். அது கூட நான் ஏற்கெனவே கட்டியது என யாராலும் எளிதில் கண்டுபிடிக்கவே முடியாது. அப்போதைக்கு 500 முதல் 600 புடவைகள் வரை வைத்திருந்தேன்.
பிறகு அதை சிலருக்கு கொடுத்துவிட்டேன். தற்போதும் என்னிடம் 500 முதல் 600 புடவைகள் உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு கொள்ளை பிரியம். ஒரு முறை தலைமைச் செயலகத்திற்கு என்னை அழைத்திருந்தார். அப்போது என்னிடம் ஆசுவாசமாக பேசுவதற்காக எல்லாரையும் அனுப்பிவிட்டு என்னிடம் 55 நிமிடங்கள் பேசினார்.
எனது குடும்பம் , ஜாதி, உள்ளிட்ட விஷயங்களை கேட்ட அவர் வணக்க்கம் என சொல்வீர்களே அவர்தானே நீங்கள் என்றார். பிறகு எனது லட்சியம் என்ன என கேட்டார், அதற்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. ஒரு வேளை உங்கள் லட்சியம் அரசியலாக இருந்தால் அதிமுகவுக்கு வரலாம் என்றார்.
நீங்கள் வாசிக்கும் போது உங்கள் செய்தியை கேட்டுவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன். பிறகு நானே சிரித்துக் கொள்வேன் என ஜெயலலிதா என்னிடம் கூறியிருந்தார். மேலும் உங்களுக்கு ஜெயா டிவியிலிருந்து அழைப்பு வந்ததா என கேட்டார். நான் அதற்கு யாரும் அழைக்கவில்லை அம்மா என்றேன். நாம் கட்டிய சேலை பிடித்திருந்தால் கூட தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு ரசிப்பார்.
ஒரு வேளை ஒருவரை பிடிக்காவிட்டால் அப்படியே முகத்தை திருப்பிக் கொள்வார். எத்தனை அழகு அம்மா! பிரம்மன் பார்த்து பார்த்து செதுக்கி வைத்த தங்கச் சிலை அவர்! ஆனால் அவருடைய இறப்பு குறித்து இன்னமும் நிறைய விடைத் தெரியாத கேள்விகள் உள்ளன. அவருக்கு அப்பல்லோவில் என்ன நடந்தது. எப்படி இறந்தார், என்றைக்கு இறந்தார் போன்ற கேள்விகளுக்க பதில் தெரியவில்லை.
இந்த பதிலை நான் சொல்கிறேன் என ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் கடைசியில் அவரும் ஏமாற்றிவிட்டார். ஜெயலலிதா இறந்த போது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ்தான். எனவே உள்ளே என்ன நடந்தது என சொல்ல வேண்டியது அவருடைய கடமைதான். இன்னமும் கூட ஜெயலலிதா இறப்பை நினைத்தால் என் மனம் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தழுதழுத்த குரலில் நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications