நிரூப்பை பற்றி புட்டு புட்டு வைத்த அப்பா...மிரண்டுபோன போட்டியாளர்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அழுகாச்சி சீன்களுக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து வருகிறது.
உறவினர்களின் வருகையால் பிக்பாஸ் வீடு களை கட்டி இருக்கின்றது.

தொடரும் டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒரு ரியாலிட்டி ஷோவாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில் வழக்கம் போல ஒவ்வொரு சீசனிலும் நடந்துவரும் சம்பிரதாயமாக ஃப்ரீஸ் டாஸ்க் இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறது. இதில் போட்டியாளர்கள் பலரும் ஆர்வமாக காத்து இருந்த தருணம் வந்துவிட்டது என்று ரசிகர்களும் கூறிவருகின்றனர். பிக்பாஸ் முதல் சீசனில் இந்த டாஸ்க்கிற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அப்படியே ஐந்தாவது சீசன் வரைக்கும் கொண்டு வந்த பிக்பாஸ் இன்னும் எத்தனை சீசன்கள் வந்தாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சந்தோஷமும், அழுகையும்...
ஆரம்பம் முதலே இந்த ஒரு உணர்ச்சிகரமான தருணம் எப்போது வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் தற்போது இந்த எபிசோடுகளை ஆர்வமாக பார்த்து வருகிறார்களாம். நேற்றிலிருந்து இந்த டாஸ்க் தொடங்கிவிட்டது. இதில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பத்து போட்டியாளர்களில் உறவினர்களின் வருகையால் பிக்பாஸ் வீடு நன்றாக களை கட்டி வருகிறது. ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் மற்றொரு பக்கம் அழுகை சீன்களும் இங்கே போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் ப்ரமோவில் நிரூப் தந்தை
நேற்றைய முதல்நாள் டாஸ்க்கில் அக்ஷராவின் குடும்பத்தினரும் சிபியின் குடும்பத்தினரும் வந்து அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்து விட்டனர். அடுத்ததாக யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இன்றைய ப்ரமோ வில் நிரூப்புடைய தந்தை வருகை தந்துள்ளார். அவர் அனைவருக்கும் அட்வைஸ் மட்டும் அல்லாமல் மோட்டிவேஷன்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மகன் செய்தது தவறு என்று அவர் சுட்டிக் காட்டிய விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Recommended Video

நெருப்பான அப்பா
கண்ணாடி டாஸ்க்கில் நிரூப் அபிநய் கையைப் பிடித்துக் கொண்டு பேசியதை பார்த்து நான் அப்படியே ஆடிப் போய்விட்டேன் என்று தன்னுடைய கோபத்தை உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நான் நிரூப்க்காக தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன். இதற்கு முன்பு நான் பார்த்தது கிடையாது என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஜு மற்றும் சஞ்சீவ் இவர்களுக்கும் தங்களுடைய மோட்டிவேஷன்களையும், அறிவுரைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் நிரூப்பை போலவே அவருடைய அப்பாவும் நெருப்பாக இருக்கிறார் என்று கூறிவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications