இனி படுக்கவச்சு தடவிக்கொடுக்க முடியாது.. ஐஷூ போனதும்.. மோசமாக பேசிய நிக்சன்.. ஷாக் சம்பவம்
சென்னை: நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் ஐஷு குறித்து சொன்ன சில வார்த்தைகள் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் பாடகர் என்ற அடையாளத்துடன் உள்ளே சென்றவர் நிக்சன். பாடகர் என்று சொல்லிவிட்டு சென்றாலும் இவர் நிகழ்ச்சியில் பாடியது என்னவோ 3 முறைதான். மற்ற சமயங்களில் எல்லாம் பெரும்பாலும் இவர் ஐஷூ உடன்தான் சுற்றிக்கொண்டு இருந்தார்.

ஐஷூவிற்கு வேட்டி கட்டி விடுவது.. ஐஷூவை கட்டிப்பிடிப்பது.. ஐஷூவிற்கு தலை சீவி விடுவது.. அவரை தூங்க வைப்பது என்று வளர்ந்த பெண்ணை "பார்த்துக்கொள்கிறேன்" என்ற பெயரில் கூடவே இருந்து தூக்கி தாங்கினார். தொடக்கத்தில் நெருக்கமான தோழர்கள் மணி ரவீனா ஒன்றாக இருப்பதையே.. இதெல்லாம் இங்கே வேண்டாம் மணி.. வெளியே போய் வச்சுக்கோங்க.
நிக்சன் செய்தது என்ன?: இங்கே இப்படி பண்ணாதீங்க. இரண்டு பேரும் தனியாக கேம் ஆடுங்க. அப்போதுதான் நன்றாக இருக்கும் என்று அட்வைஸ் சொன்னவர் நிக்சன். ஆனால் அதே நிக்சன் போக போக ஐஷூவுடன் அதே வேலையை செய்ய தொடங்கினார்.
தனியாக கேம்: ஐஷூவும் தனியாக கேம் ஆடாமல்.. இவரும் தனியாக கேம் ஆடாமல்.. கடைசியில் கண்ணாடி முத்தம் வாங்கும் அளவிற்கு கூட நிக்சன் சென்றார். ஐஷூவிற்கு வேட்டி கட்டுவது, கண்ட இடத்தில் கேமரா முன் தொடுவது, வெளியே காதலன் இருக்கிறான் என்று தெரிந்தும்.. பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் இருக்கலாம் என்று சொல்வது என்று ஐஷூவிடம் பல இடங்களில் உரிமையாக அத்துமீறி இருக்கிறார் நிக்சன்.
மோசமான பேச்சு: இப்படி தன்னுடைய செயல்பாடுகள் மூலம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார் நிக்சன். ஐஷூ வெளியேற கூட இவர் ஒரு காரணமாக மாறினார். அதன்பின் அந்த பழியை ஹவுஸ் மேட்ஸ் மீது போட்டதும் கூட இவர்தான்.
இந்த நிலையில்தான் ஐஷூ குறித்து நேற்று நிக்சன் பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. நேற்று அவர் பேசுகையில்.. இங்கே இருக்கிற மாதிரி வருமா.. ஐஷூவை போய் பார்க்க முடியாது. இதுக்கு மேல் இல்லையா.. இதற்கு மேல் பார்க்க முடியுமா ?
பார்த்தால் கூட இது வருமா? பார்த்தால் கூட.. அவரை படுக்க வைத்து தடவி கொடுக்க முடியுமா? அவர் பக்கத்தில் உட்கார்ந்து தடவி கொடுத்து தூங்க வைக்க முடியுமா? அந்த பீல்தான். இதுக்கு அப்பறம் இது இல்லையா? இதற்கு பின் இப்படி செய்ய முடியுமா வாய்ப்பே இல்லையே என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று நிக்சன் பேசி உள்ளார்.
அவரின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள், விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்துக்கொண்டு இருக்கின்றனர் .
வெளியேறிய ஐஷு: ஐஷு நிகழ்ச்சியில் நிக்சன் உடன் நெருக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிக்சன் உடன் அவர் காதலில் இருந்ததாக புகார் வைக்கப்பட்டது. அதிலும் அவர் நெருக்கமாக பழகிய சில காட்சிகள், கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்தது போன்ற விஷயங்கள் கடுமையான விவாதங்களுக்கு, சர்ச்சைகளுக்கு உள்ளானது.
அதோடு இல்லாமல்.. ஐஷுவை அவரின் பெற்றோர்களே வெளியே வர சொன்னதாக புகார் வைக்கப்பட்டது. ஐஷு எலிமினேட் ஆகவில்லை. அவருக்கு பதில் பூர்ணிமாதான் எலிமினேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அவருக்கு பதிலாக ஐஷுவை எலிமினேட் செய்ய வேண்டும் என்று அவரின் பெற்றோர்தான் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications