Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த முல்லை யார்.. அடுத்தடுத்து பரவும் தகவல்கள்.. ஏக்கத்தில் பாவனி ரெட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லையாக வாழ்ந்து விட்டு போய் விட்டார் சித்ரா. அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ஏக்கத்துடன் கூறியுள்ளார் அவரது தோழியும் நடிகையுமான பாவனி ரெட்டி.

ராசாத்தி சீரியல் மூலமாக பாவனி ரெட்டியை தமிழக டிவி ரசிகர்களுக்கு நன்கு தெரியும் .சினிமாவிலும் நடித்துள்ளார் . சித்ராவின் மரணத்தால் வேதனையில் மூழ்கியுள்ளவர்களில் இவரும் ஒருவர்.

பாவனி ரெட்டியிடம் பலரும் நீங்க பேசாம முல்லை வேடத்தில் நடிக்கலாமே என்று கேட்டு வருகிறார்களாம் .ஆனால் சித்ரா இடத்தை யாராலும் நிரப்பமுடியாது என்று கூறியுள்ளார் பாவனி ரெட்டி.

தோழி பாவனி ரெட்டி

தோழி பாவனி ரெட்டி

பாவனி ரெட்டியும், முல்லையாக நடித்து மக்கள் மனதைக் கவர்ந்த சித்ராவும் நல்லதோழிகள்தான் .நெருக்கமாக பழகியும் வந்துள்ளனர். சித்ராவின் திடீர் மரணத்தால் பாவனியும் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார் .ஏமாற்றமாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை என்று அவர் போஸ்ட் போட்டிருந்தார்.

நம்பவே முடியலை

நம்பவே முடியலை

பாவனி ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒரு போஸ்ட் போட்டிருந்தார் .அதில் நம்பவே முடியலை.. ஏத்துக்க மனசே வரலை. உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று 3 நாட்களுக்கு முன்பு தான் போஸ்ட் போட்டிருந்தார் பாவனி ரெட்டி. பலரும் வந்து அதில் இரங்கல் தெரிவித்திருந்தனர். பாவனி மட்டுமல்ல யாராலுமே இதை நம்பத்தான் முடியவில்லை.

சித்ரா பெஸ்ட்

சித்ரா பெஸ்ட்

அதேபோல தனது இன்னொரு போஸ்ட்டில் தனது படத்தைப் போட்டிருந்தார் பாவனி ரெட்டி .அதில் பலரும் வந்து வழக்கமான பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர் . கூடவே நீங்க பார்க்க சித்ரா போலவே இருக்கீங்க. பேசாம நீங்க முல்லை வேடத்தில் நடிக்கலாமே என்று கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த கருத்துக்கள் அதிகரிக்கவே அதற்கெல்லாம் பாவனியும் பதில் கொடுத்து வருகிறார்.

யாராலும் நிரப்ப முடியாது

யாராலும் நிரப்ப முடியாது

ஒரு வாசகரின் கேள்விக்கு, சீக்கிரமே அவர் இறந்து போய் விட்டார் .யாராலும் அவரது இடத்தை நிரப்பமுடியாது .அவரது வாழ்க்கை அப்படி இருந்தது என்று கூறியுள்ளார். சித்ரா மீது தான் எந்த அளவுக்கு அன்பையும், மதிப்பையும் வைத்துள்ளார் என்பதை அவரது இந்த வார்த்தைகள் விளக்குவதாக உள்ளன. மேலும் சித்ரா இடத்திற்கு தன்னால் வர முடியாது என்பதையும் பாவனி கூறியுள்ளார்.

நீங்க சித்ரா வேடத்தில் நடிக்கலாமே என்று இன்னொரு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைக்கு அவர் அளித்த பதிலில், சித்ராதான் பெஸ்ட், முல்லை கேரக்டர் அவருக்குத்தான் பொருத்தமானது .அந்த வேடத்தில் யாராலும் நடிக்க முடியாது. சரிவராது என்றும் நேரடியாக பதிலளித்து முல்லை கேரக்டர் என்றாலே சித்ராதான் என்பதையும் சொல்லாமல் சொல்லி விட்டார் பாவனி.

தொடரும் வதந்திகள்

தொடரும் வதந்திகள்

இப்போது நிறை ய நடிகைகளிடம் நீங்க பேசாமல் முல்லை வேடத்தில் நடிக்கலாமே என்று பலரும் கேட்டு வருகின்றனர் .சரண்யா துராடியிடம் இப்படித்தான் பலரும் கேட்கிறார்கள் .ஆனால் அவர் மறுத்து விட்டார் .அது தொடர்பாக வரும் செய்திகள் வதந்தி என்று கூறி விட்டார். இப்போது பாவனி ரெட்டியிடமும் கேட்டுள்ளனர் .அவரும் சித்ராதான் பெஸ்ட் என்று கூறியுள்ளார்.

அடுத்து யார் நடிப்பா

அடுத்து யார் நடிப்பா

சில ரசிகர்கள் பேசாமல் முல்லை கேரக்டரையும் முடித்து விடுங்கள் .எங்களால் சித்ராவைத் தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று அழுதபடி கூறுகின்றனர் .இதனால் முல்லை கேரக்டர் என்னாகும் என்ற எதிர்பார்ப்பும் கோரிக்கையும் அதிகரித்துள்ளது .ஆனால் சீரியல் குழுவினர் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை .முல்லையின் கடைசிக் காட்சிகள் வெளியாகி முடித்த பிறகுதான் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிய வரும் என்று சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+