ரச்சிதாவோடு இன்னும் விவாகரத்து ஆகல.. அவங்களுக்காக பிக் பாஸில் இதை செய்வேன்.மனம் திறந்த நடிகர் தினேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தினேஷ் மற்றும் அவருடைய மனைவி ரச்சிதா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்தது பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Not divorced with Rachitha yet open-minded actor Dinesh

இந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி பற்றி தினேஷ் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறேனா? இல்லையா? என்பது பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த மாதிரி தான் சில வருடங்களுக்கு முன்பு பிரிவோம் சந்திப்போம் என்று சீரியலில் ஒன்றாக நடித்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி மற்றும் நடிகர் தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்திருந்தனர்.

இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக தான் போய்க்கொண்டிருந்தது. இருவரும் தங்களுடைய துறையில் தனித்தனியாக பல சீரியல்களில் நடித்துக் கொண்டு இருந்தனர். கடைசியாக இவர்கள் இருவரும் சேர்ந்து நாச்சியார்புரம் என்கிற சீரியலில் நடித்து இருந்தனர். அந்த சீரியல் கொரோனா காரணமாக திடீரென்று முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரச்சிதாவும் தினேஷம் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. அதே நேரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதா போட்டியாளராக அறிமுகமானார். அப்போதும் தினேஷ் அவருக்கு சப்போர்ட் பண்ணி, நாங்கள் இருவரும் இப்போது பிரிந்து இருப்பது உண்மைதான். ஆனால் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுடைய பிரச்சனை தீரவில்லை.

அந்த நேரத்தில் தான் திடீரென்று ரச்சிதா தினேஷ் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் அது குறித்து தினேஷும் தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருந்தார். இந்த நிலையில் நடிகர் தினேஷ் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று செய்திகள் வைரலாகி வருகிறது. அது குறித்து பேட்டி ஒன்றில் தினேஷ் தற்போது பல தகவல்களை பேசி இருக்கிறார்.

Not divorced with Rachitha yet open-minded actor Dinesh

அதில் நானும் பார்த்தேன் பல செய்தி சேனல்களில் என்னுடைய பெயர் உறுதியான பட்டியலில் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். ஆனால் அம்மா சத்தியமா சொல்கிறேன். எனக்கு இதுவரைக்கும் ஒரு போன் கால் கூட வரவில்லை. கடந்த சீசனில் ரச்சிதா கலந்து கொண்டிருக்கும்போது நான் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொள்வேன் என்று அவர் பலர் கூறி வந்தனர். அதனுடைய தாக்கம் தான் இந்த சீசனிலும் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கும் ரச்சிதாவிற்கும் விவாகரத்து வழக்குப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. அதுபோல அவங்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டாங்க. ஒருவேளை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் கூட அந்த டைட்டில் அவருக்காக வெற்றி பெற்று கொடுக்கலாம். ஆனால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விரும்பவில்லை. எனக்கு இப்போது சீரியலில் பிஸியாக இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் நடிகர் தினேஷ் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+