எதிர்நீச்சலில் மாறியது வேல ராமமூர்த்தி மட்டுமல்ல.. குணசேகரனின் கேரக்டரும்தான்..இனி கதை இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் நடிகர் ராமமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதில் வேல ராமமூர்த்தி இதுவரைக்கும் இருந்து வந்த குணசேகரனின் கேரக்டரை வித்தியாசமாக காட்டிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மாறியது வேலராம மூர்த்தி மட்டுமல்லாமல் குணசேகரனின் கேரக்டரும் தான் என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் வில்லனாக இருந்தாலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தார். பொதுவாக சீரியலில் கதாநாயகனுக்கு தான் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு இருக்கும். ஆனால் இந்த சீரியலில் மட்டும் தான் வில்லனுக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.
ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத விதமாக தான் நடிகர் மாரிமுத்துக்கு மரணம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் அவர் நடித்து வந்த ஆதி குணசேகரன் கேரக்டரில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதில் தற்போது நடிகர் வேலராமமூர்த்தி அறிமுகம் ஆகியிருக்கிறார். இவரும் மாரிமுத்து போன்று கிராமத்து சாயலில் பேசுவது மற்றும் உடல் மொழி காட்டுவதால் ரசிகர்கள் இவரை ஆரம்பத்தில் இருந்து இந்த சீரியலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வந்தனர்.

ஆனால் அவர் அறிமுகமான முதல் நாளிலிருந்து இப்போது மாறி இருப்பது வேலராமமூர்த்தியோடு குணசேகரனின் கேரக்டரும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். இதுவரைக்கும் குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து வில்லனாக இருந்தாலும் அதிகமான நக்கல் தனத்தோடு பேசிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது வந்திருக்கும் வேலராமமூர்த்தி தன்னுடைய மிரட்டலான நடிப்பை மட்டும் தான் காட்டுகிறார்.
அதுவும் இதற்கு முன்பு குணசேகரன் போலீஸ் ஸ்டேஷன் ஆக இருந்தாலும் சரி எந்த இடமாக இருந்தாலும் சரி போலீசிடம் திமிராக பேசுவார். ஆனால் அவரிடம் தன்னுடைய வீரத்தை காட்ட மாட்டார். ஆனால் இப்போது வந்திருக்கும் குணசேகரன் வந்த முதல் நாளே போலீஸாரின் நெஞ்சில் எட்டி மிதித்து இருந்தார். நேற்றைய எபிசோடில் கூட இது பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.
நான் போலீஸ் ஆபீசரை எட்டி மிதித்து விட்டேன் அவன் உயிரோடு இருப்பானா இல்லையான்னு தெரியாது என்று நேற்று பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இதற்கு முன்பு யாரிடமும் வில்லத்தனத்தை குணசேகரன் நேரடியாக காட்டியது கிடையாது. உதாரணமாக ஜீவானந்தம் தன்னுடைய கம்பெனியில் இருந்து தண்ணை தூக்கி வெளியே தூக்கி போடும்போது கூட குணசேகரன் நேரடியாக எதுவும் செய்யவில்லை. சட்டையை மட்டும் கழட்டி தோளில் போட்டுவிட்டு சோகமாக நடந்து வந்தார். அவருடைய அந்த செயல் பார்ப்பவரையும் பரிதாப பட வைத்திருந்தது.
ஆனால் இப்போது வந்திருக்கும் குணசேகரன் வரும் போதே வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கெத்து காட்டுகிறார். போலீசார் முன்பு மட்டும் அல்லாமல் வீட்டு வாசலில் வந்து நின்றபோது கூட வேட்டியை மடித்து கட்டிக் கொண்டுதான் அங்கு இருக்கும் தண்ணீரை எடுத்து தலையிலே ஊற்றிக் கொண்டார். இப்படியாக பழைய குணசேகரனுக்கும் இப்போது வந்திருக்கும் குணசேகரனுக்கும் அதிகமான வித்தியாசத்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் பழைய குணசேகரன் தன்னுடைய தம்பிகள் மீது பாசம் வைத்திருப்பது தன்னுடைய ஆதாயத்துக்கு தான்.
அதனால் தான் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக கூட கதிரை மட்டும் தான் கிள்ளிவளவனோடு அனுப்பி வைத்திருந்தார். அப்போது கூட வீட்டில் என்னுடைய தம்பி எனக்கு ஒரு வேட்டை நாய் தான் நான் சொன்னதை செய்வான். அவன் உயிரோடு வரலாம். அல்லது பிணமாக கூட வரலாம் என்று கூறியிருந்தார். இப்படித்தான் தம்பிகள் மீது பாசம் வைத்திருந்தார். ஆனால் இப்போது வந்திருக்கும் குணசேகரன் வந்த முதல் நாளே தம்பிகள் மீது பாச மழைகயை பொழிகிறார்.
இந்த வீட்டில் இருக்கும் நான்கு சேர்களிலும் நாங்கள் ஆண்பிள்ளைகள் மட்டும் தான் உட்கார வேண்டும் என்று சொல்கிறார். அதோடு தன்னுடைய தம்பி சக்தி பொம்பள பேச்சை கேட்டுகிட்டு இப்போ இருந்தாலும் அவனுக்கும் என்னுடைய சிம்மாசனத்தில் சீட்டு உண்டு என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் இப்போது மாறி இருப்பது வேல ராமமூர்த்தி மட்டுமல்ல குணசேகரன் உடைய கேரக்டரும்தான். இனி இது ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு கவரப்போகிறதா? இல்லை கவுக்க போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications