Azhagu Serial: சீரியல்களில் தனி பகை போயி இப்போ குடும்ப பகை டிரண்ட்!
சென்னை: டிவி சீரியல்களில் நேருக்கு நேர் தனிப்பகை போயே போச்சு. இப்போ புதுசா குடும்ப பகைன்னு ஒரு ஆயுதம் அவங்கவங்க கையில் சூலாயுதமா எப்போ யாரை குத்திக் கிழிக்குமோன்னு பயமுறுத்துது.
சன் டிவி சீரியல்களில்தான் இப்போது இந்த டிரண்ட். அழகு சீரியலில் மல்லிகா நம்ம குடும்பத்தை அழிச்ச இந்த குடும்பத்தை சீரழிக்காம விட மாட்டேன்னு போனில் பேசறா.
தமிழ்ச்செல்வி சீரியலில் தில்ருபா நம்ம குடும்பத்தை அழிச்சு மாமாவை சாகடிக்காம விட மாட்டேன் அம்மான்னு சபதமெடுக்கிறாள். பாண்டவர் இல்லம், சந்திரலேகா சீரியலிலும் இப்படி ஒரு கேரக்டர் வலம் வந்துகிட்டே இருக்கு.

அழகு சீரியல்
சன் டிவியின் அழகு சீரியலில் மல்லிகா பழனிச்சாமி வாத்தியாரின் ரெண்டாவது மனைவி என்று வீட்டில் கால் வைக்கிறாள். வந்தது என்னவோ அழகம்மை, பழனிச்சாமி இருவருடனும்தான். ஆனால், என்ன கதை என்று அழகம்மை சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க. என்னவா இருக்கும்னு மண்டையைப் பிச்சுக்கும்போதே இன்றைய ப்ரோமோவில், நம்ம குடும்பத்தை அழிச்ச இந்த குடும்பத்தை அழிக்கமா விட மாட்டேன்னு மல்லிகா போனில் சபதம் போடுகிறாள்.

தமிழ்ச்செல்வி சீரியல்
அதே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ்சசெல்வி சீரியலில் தில்ருபா ஆரம்பத்தில் இருந்தே அமுதனின் குடும்பத்தை பழி வாங்க ஒவ்வொரு திட்டமாகப் போடுகிறாள். தம்பியை வச்சு அமுதனின் தங்கையை காதலிக்க வைக்கிறாள். கல்யாணத்துக்கு முன்பே அவளை கர்ப்பமாக்கவும் தம்பிக்கு கட்டளையிடுகிறாள். கடைசியில் இப்போ பார்த்தால் அமுதன் தாய் மாமா பையன். தாய் மாமா தில்ருபாவின் அம்மாவின் வாழ்க்கையை கெடுத்து சொத்தை தராமல் ஏமாற்றியவராம். அதனால் மாமா குடும்பத்தை கெடுக்காமல் விட மாட்டேன்னு தில்ருபா சபதம் எடுக்கிறாள்.

பாண்டவர் இல்லம்
சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் பாண்டவர் இல்லம் குடும்பத்தில் ஐந்து பேரன்கள் ஒரு தாத்தா. இப்படி குடும்பமா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் மூத்தவன் கல்யாணம் ஆகாமல் இருக்க, அடுத்த இரண்டு பேர் கல்யாணம் செய்து மனைவியை கூட்டிகிட்டு வந்து வாழ்ந்துகிட்டு இருக்காங்க. இந்த சமயத்தில் மூத்த பேரனுக்கு மனைவியா ஒருத்தி வந்து வாய்க்கிறாள். அவள் இந்த குடும்பத்தை பிரிச்சே தீருவேன்னு சபதம் எடுத்துகிட்டு உள்ளே காலடி வைக்கிறாள். இதுவும் குடும்ப பகை.

சந்திரலேகா சீரியல்
சந்திரலேகா சீரியலில் ரிப்போர்ட்டராக இருக்கும் சந்திரா வீட்டுக்குள் ஏதோ பகை தீர்க்கிறேன் என்று, பவானி என்கிற பெயரில் நுழைகிறாள் ஒருத்தி. இவளின் குறிக்கோளும் பகை, பழி வாங்கறேன் என்றுதான் இருக்கிறது. அதுவும் குடும்ப பகைதான். பவானியின் உண்மை பெயர், அவளின் குடும்பத்தை யாரோ அழித்தது என்று ஃபிளாஷ் பேக்கில் காண்பிக்கிறார்கள். இப்படி ஏதோ ஒரு நாட் புடிச்சு கதையை பிடிக்கிறார்கள். ஆனால் ஒரே மாதிரி கதையை கொண்டு போகாமல் கொஞ்சம் மாத்தி கொண்டு போகிறார்கள். இதுதான் இன்றைய சீரியல் டிரண்ட்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications