இப்போ சொல்லு.. எது அரை...எது ஒன்றரை..எது மூன்றரை?
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி அவ்வப்போது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கோமாளியாக இருக்கும் புகழ் தேங்காயை வதக்கிக்கொண்டு இருக்க...செஃப் வெங்கடேஷ் வந்து, இப்போ சொல்லு.. எது அரை...எது ஒன்றரை..எது மூன்றரை என்று கேட்டு குழப்பி விடுகிறார்.
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி மீண்டும் மீண்டும் சிரிப்பு என்பது போல மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது.
உமா ரியாஸ்கானுக்கு கோமாளியாக சேர்ந்த புகழ், அவருக்கான நேரத்தில் தேங்காயை வதக்கிக்கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் வந்து செஃப் வெங்கடேஷ் அவரை குழப்பிவிட்டு சென்றார்.

ரம்யா உமாரியாஸ்
குக்ஸ் ரம்யாவும், உமா ரியஸும் ரூமில் இருக்க, கோமாளி புகழ், பாலா இருவரும் சமையலை செய்ய வேண்டும். அப்போது தேங்காயை வதக்கிக்கொண்டு இருந்தார் புகழ். அங்கே வந்த செஃப் வெங்கடேஷ், அடிப்புடிக்குது பாரு...நீ பாட்டுக்கு கிளறிக்கிட்டே இருக்கேன்னு கேட்டார். நீங்க வந்தாலே குழப்பம்தான் என்று சொன்னார் புகழ்.

எங்கங்க அடிப்புடிக்குது
மறுபடியும் அடிப்புடிக்குதுன்னு வெங்கடேஷ் சொல்ல, எங்கங்க அடிப்புடிக்குது என்று கேட்டபடியே, கடாயை கையால் தூக்கி அடியில் பார்த்தார் புகழ். முட்டாள்.. அடிப்புடிக்குதுன்னா அடியில புடிக்காதுடா...உள்ளே புடிக்குது பாருன்னு சொன்னார். கடாயை அப்படியே தூக்கிவிட்ட புகழ் கடாய் சுட்டதில் கையை ஊதிக்கொண்டு இருந்தார்.

வெங்காயத்தை போடு
உரிச்சு வச்சு இருக்கியே.. அந்த வெங்காயத்தை போட்டு வதக்குன்னு வெங்கடேஷ் சொல்ல, இப்போ போடக்கூடாதுங்க...அதை கிரேவி செய்யும்போது வதக்கணும்னு சொல்லி, இது அரை..இது ஒன்றரை.. இது மூன்றரை ஸ்பூன் போடணும் என்று பாட்டில்களை காண்பித்தார்.

மாத்தி வச்ச
பாட்டில்களை மாத்தி மாத்தி வச்சுட்ட வெங்கடேஷ், இப்போ சொல்லு..எது அரை.. எது ஒன்றரை.. எது மூன்றரை என்று கேட்க...ஸ்ஸ்ஸ்..அப்பா என்று குழம்பி நின்றார் புகழ்.அடிபுடிச்சுருச்சு அடிப்புடிச்சுருச்சுன்னு சொன்னீங்க.. இப்போ எனக்கு பைத்தியம் புடிச்சுருச்சு என்று சொன்னார் புகழ்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications