Maharasi Serial: கமலி... சூர்யா காதல்கோட்டை சீன் வரும்னு பார்த்தா... ப்ச்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் பாரதியும், புவியும் எப்போதான் பார்த்துப்பாங்க.. எங்க பொறுமையை சோதிக்காதீங்க என்று ரசிகர்கள் கோபப்படும் அளவுக்கு நிலைமை ஆகிப் போச்சு.

ஆனால், சீரியல் குழு இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் காண்பிச்சுட்டு இருக்காங்க. ஒரே வீட்டில் இருக்காங்க.. கோயிலில் புவி பாரதியை உத்து உத்து பார்க்கறான்.

இவன் என்ன இப்படி பார்க்கறான்னு நினைச்ச பாரதி, இவனை மாதிரி ஆளுங்களை கோயிலில் விடக் கூடாதுன்னு முணுமுணுக்கிறாள். அவன் எதிர்க்க நடந்து வந்து கண்களை மூடியபடி நிற்கிறாள். அவனும் அருகில் வந்து நிற்கிறான்

மாறுவேஷம் எப்படி

மாறுவேஷம் எப்படி

கோயிலில் அவள் அருகில் போயி நிக்கறான் புவி.என்னது இது நம்மை பார்த்ததும் பாரதி ஆசையா ஓடி வருவான்னு பார்த்தால் கண்டுக்காம நிக்கறாளேன்னு டயலாக் வச்சு இருக்காங்க. பெரிய தாடி...புறா கூடு போல் தலைமுடி.. சோடா புட்டி கண்ணாடின்னு மாறு வேஷத்துல இருக்கோமேன்னு அவனுக்கு தெரியும்தானே.. எதுக்கு இந்த டயலாக்?

நேரம் கடத்த

நேரம் கடத்த

பாரதியின் சித்தப்பா புவி மாறு வேஷத்தை கலைக்கும் போது கரெக்ட்டா வரணும்னு.. வேண்டாத டயலாக் எல்லாம் பேசறான் புவி. அப்போதுதான் நினைவுக்கு வந்தவனாக ஓ.. நாம மாறு வேஷத்தில் இருக்கோம்.. அதான் பாரதிக்கு அடையாளம் தெரியலை.. இந்த விக்கை எடுக்கலாம்னு எடுக்க போறான்... அப்போ பார்த்து சித்தப்பா அவனை தள்ளி விடுகிறார்.

எவ்ளோ திட்டு

எவ்ளோ திட்டு

புவியையும், பாரதியையும் ஏங்க இன்னும் நேரா சந்திக்க விட மாடறீங்கன்னு ரசிகர்கள் திட்டுவதை எல்லாம் இவங்க காதில் வாங்கிக்கறது இல்லை. எத்தனை கமெண்ட்ஸ் போடறாங்க தெரியுமா...சரி, அதிருக்கட்டும்.. வீட்டுக்கு அரசி மூட்டை எடுத்துட்டு வர்றான் புவி. அப்போ பார்த்து இவன் சட்டை கிழிஞ்சுருது.

அம்மா புது சட்டை

அம்மா புது சட்டை

புவியின் அம்மா என்னப்பா அன்பு சட்டை கிழிஞ்சு இருக்குன்னு கேட்டுட்டு, புவிக்கு எடுத்து வச்சு இருக்கும் சட்டையையே அவன்கிட்டே கொடுக்கறாங்க. சரி.. இவன் சட்டையை கழட்டுவான்.. நெஞ்சில் பாரதின்னு ஹிந்தியில் பச்சை குத்தி இருப்பதை பாரதி பார்த்துருவா என்று ரசிகர்கள் காதல்கோட்டை சீனுக்கு காத்திருக்க தொடரும் போட்டுட்டாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+