இரவு தூக்கத்தை மறந்து பார்க்க வைக்கும் பழைய படங்கள்...!
சென்னை: சன் டிவி தினம் இரவு காலத்தை வென்ற காவியங்கள் என்று பழைய படங்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த வரிசையில் ஒளிபரப்பாகும் படங்களை பெரியவர்களோடு சேர்ந்து இளம் வயதினரும் விரும்பிப் பார்க்கிறார்களாம்.
Recommended Video
இப்போதைய காலக்கட்டங்களில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள்தான் குழந்தைகளின் விருப்பமாக இருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து குழந்தைகள் தாயம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி என்று உட்கார்ந்தபடியே சுவாரஸ்யமாக விளையாடி வருகின்றனர்.
அப்படி பெரியவர்களோடு ஒட்டிக்கொண்ட குழந்தைகள், அவர்கள் இரவு விரும்பிப் பார்க்கும் படங்களையும் கூடவே உட்கார்ந்து பார்க்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.இவர்கள் காலையில் வெகு நேரம் தூங்கி பொழுதை கழிக்கிறார்கள்.. காலையில் எழுந்து என்ன செய்வது என்கிற குழப்பமே குழந்தைகளை இப்படி ஆக்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

மறு ஒளிபரப்பு சீரியல்கள்
ஐயோ வேணாம் மறு ஒளிபரப்பு சீரியல்கள் என்று மக்கள் அலறி ஓடும் அளவுக்கு சீரியல்கள் இருக்கின்றன. அடுத்து என்ன என்று தெரியாதபோதே சீரியல் பார்க்கும் பிரில்லியண்ட் குழந்தைகள்...இதுதான் நடக்கப் போகுது என்று கெஸ் செய்து டப்பென்று அடித்து விடும் அளவுக்குத்தான் சீரியல்கள் இருந்தன.

சுவாரஸ்யம் இல்லை
சீரியல்கள் மறு ஒளிபரப்பில் கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாமல், மாறாக கடுப்பேற்றும் வகையில் இருக்கிறது. அடுத்தது என்ன என்று தெரிந்தே இவர்களின் இழுவையை பார்க்க முடியவில்லை. தயவு செய்து சீரியல்கள் மறு ஒளிபரப்பை நிறுத்தி விடலாம் என்பதுதான் மக்களின் ஆலோசனை.

பழைய படங்கள்
காலத்தை வென்ற காவியங்கள் என்று எதாவது சுவாரஸ்ய தலைப்பு வைத்து அந்த வரிசையில் படங்களை ஒளிபரப்பும்போது மக்களும் குதூகலம் ஆகி விடுகிறார்கள். குழந்தைகளும் பெரியவர்களுடன் தூக்கத்தை மறந்து பழைய படங்களை விரும்பிப் பார்க்கத் துவங்கி உள்ளனர்.

குழந்தைகள் அவ்வழி
வீட்டில் பெரியவர்களுடன் குழந்தைகள் பொழுதை போக்குவது என்பது அரிதாகிவிட்ட இந்த காலத்தில், இந்த லாக்டவுன் அந்த அரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறது. பெரியவர்க்ளுடன் தாயம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது.. அவர்கள் விரும்பிப் பார்க்கும் பழைய படங்களை பார்ப்பது என்று, பெரியவர் எவ்வழியோ அவ்வழி என்று குழந்தைகள் இந்த காலக்கட்டத்தில் இருக்கின்றனர். குழந்தைகளின் இந்த நடைமுறை மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications