Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sundari Neeyum Sundaran Naanum Serial: பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசலையோ...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசறது என்றாலே இந்த தலைமுறையினருக்கு தெரியாது. பித்தளை பாத்திரங்களில் சமைப்பது என்றால் ஈயம் பூசாமல் சமைக்கக் கூடாது.

இப்போது பித்தளை பாத்திரங்களில் யாரும் சமைப்பது இல்லை. பித்தளை பாத்திரங்கள் நிறைய வீடுகளில் இன்டோர் பிளாண்ட்ஸ் வளர்க்கும் அழகிய தொட்டிகளாக மாறிவிட்டன.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, பூஜை மணி இப்படி பூஜைக்கு ஏற்றவை மட்டுமே பித்தளையில் இருக்கின்றன. மற்றபடி வீட்டை அலங்கரிக்கும் பொருட்களாகவே பித்தளை பாத்திரங்கள் இப்போதைய வீடுகளில் இடம் பிடிக்கின்றன.

ஈயம் பூசும் காமெடி

ஈயம் பூசும் காமெடி

செந்தில் கவுண்டமணி இருவரும் ஒரு படத்தில் கிராமத்தில் ஈயம் பூசுபவர்களாக நடித்து காமெடி செய்து இருப்பார்கள்.ஈயம் பூச வந்த ஒரு பெண்ணிடம் நான்தான் இந்த கடைக்கு ஓனர் என்று சொல்லி செந்தில் அவளை காதலிக்க ஆரம்பிக்க, கவுண்டமணி லொள்ளு செய்துகொண்டு ஒரே காமெடியாக இருக்கும்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடிகை லதா பாட்டியாக நடித்து அசத்தி இருக்கார். இவருக்கு வேலு என்று ஒரு பேரன். பேரனுக்கு பாட்டி மீதும், பாட்டிக்கு பேரன் மீதும் அதீத பாசம். அதே ஊரில் உதவியில் அரசு பள்ளி நடத்தி வரும் தமிழ்ச் செல்வியை பாட்டிக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது.

பாட்டி தமிழ்ச்செல்வி

பாட்டி தமிழ்ச்செல்வி

பாட்டியும் தமிழ்ச் செல்வியும் நட்பாகி விடுகிறார்கள். ஆனால், பாட்டியின் பேரன் வேலு அரசியல்வாதி. ஆரம்பத்தில் பள்ளியில் அரசியல் கூட்டம் அது இது என்று நிறைய தொல்லைகள் கொடுத்து வந்ததால், தமிழ்ச்செல்விக்கும் வேலுவுக்கும் எப்போதும் கடுகடு போட்டியாகவே இருக்கிறது.

பணக்கார பாட்டி

பணக்கார பாட்டி

பாட்டி பெரும் பணக்காரர், அவரின் பணத்துக்காக வேலுவை கல்யாணம் செய்துக்கணும் என்று உறவுகள் சுத்திவர, பாட்டிக்கு வேலுவுக்கு தமிழ்ச்செல்வியை கட்டி வைக்க ஆசைப்பட்டு, இருவரையும் தனியாக அங்கங்கு அனுப்பி வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வர சொல்கிறார்..

சாமி கும்பிட

சாமி கும்பிட

புரட்டாசி படையல் போடணும் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிக்கிட்டு வாங்கன்னு ரெண்டு பேரையும் அனுப்பி வைக்கறாங்க. வேலு பசங்களிடம் ஜோடியாக மாட்டிக்க கூடாதுன்னு ஒளிய, தமிழ் அத்தைக்கு தான் வேலுவுடன் ஜோடியாக வந்திருப்பது தெரிந்துவிடக் கூடாதுன்னு ஒளிய இப்படியே நேரம் போய்விடுகிறது. பாத்திரத்துக்கு ஈயம் பூசவில்லை.

எங்கே பாத்திரம்?

எங்கே பாத்திரம்?

பாத்திரம் எங்கே என்று பாட்டி கேட்க, கடைக்கு போனோம்.. ஈயம் பூசுறவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு வரோம்னு பாட்டின்னு வேலு சொல்றான்.அவளும் ஆமாம் போடுகிறாள். சரி எந்த ஆஸ்பத்தரின்னு கேட்க, இவன் சூரியா என்றும் அவள் கார்த்தி என்றும் சொல்றாங்க.

கார்த்தியா சூர்யாவா

கார்த்தியா சூர்யாவா

என்னடா ரெண்டு பேரும் உளர்றீங்க..ஆஸ்பத்திரி பேரு சூர்யாவா, கார்த்தியான்னு கேட்கறாங்க. சூர்யா கார்த்தி ஆஸ்பத்திரி ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க பாட்டி.அவங்க அப்பா பேரு சிவகுமாராம். எங்கே போனை போட்டுக் குடுன்னு பாட்டி சொல்ல, என்ன பொய் மேல பொய்னு காட்சி நகைச்சுவையா இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+