கையில் விளக்கு...என்ன ஒரு தலுக்கு... கலக்கும் தர்ஷா... கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை : விளக்கு ஒளியில் தேவதையை போல மின்னும் தர்ஷா குப்தாவை பார்த்து அசந்துபோன ரசிகர்களால் இன்ஸ்டாகிராமே ஆட்டம் கண்டு விட்டது.
புன்னகை போதுமே எந்த பொன்நகையும் வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு இவருடைய மயக்கும் புன்னகையால் பல பேர் மயக்கம் தெளியாமல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.
விதவிதமாக பலபேர் ஓணம் வாழ்த்துக்களை கூறி வந்தாலும் விளக்கோடு இவர் கூறியிருக்கும் வாழ்த்துக்களை பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் குவிக்கிறார்கள்.

ரசிகர்களுக்காக இப்படியா
ஓணம் பண்டிகை அதுவுமாக சினிமா நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை பலரும் புது புது உடையோடு போட்டோஷூட்டில் இறங்கிவிட்டனர். இதில் பாதி நடிகைகள் இந்த பண்டிகையை கொண்டாடி கொண்டிருந்தாலும் ஒரு சிலர் போட்டோ ஷூட் காகவும் தங்களுடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதற்கும், சில நடிகைகள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். யார் எப்படி கொண்டாடிக் கொண்டு இருந்தாலும் இப்போ தர்ஷா குப்தாவின் ஓணம் பண்டிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோஸ் படுபயங்கரமாக வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. சும்மாவே தர்ஷாவின் ரசிகர்கள் கமெண்டுகளை குவிப்பார்கள், தற்போது இவரை இந்த மாதிரி பார்த்ததும் கைவிரல்களை கட்டுப்படுத்த முடியாமல் ஹார்டின்களை பறக்க விடுகிறார்கள்.

அழகி இல்ல..பேரழகிதான்..
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமாகி அழகான வில்லியாக கலக்கிவிட்டு, தற்போது வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தாலும் தான் வந்த வழியை மறக்க மாட்டேன் என்று தர்ஷா குப்தா அவருடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அடிக்கடி இன்ப அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் முதல் சீரியலில் நடிக்கும்போது கிராமத்து பைங்கிளி ஆக இருந்ததை பார்த்து இவருடைய மொத்த அழகு இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களை அது எல்லாம் நடிப்பு மட்டும்தான் வெளியே வந்து பாருங்கள் என்னுடைய சுய உருவம் தெரியும், என்று டிக் டாக் செயலி ஆக்டிவாக இருக்கும்போது அதில் ஆக்டிவாக இவர் போஸ்ட் போட்டு ரசிகர்களை அசத்திவிட்டார். அதுவும் இவர்தான் அந்த சீரியலில் நடிக்கிறார் என்று சொன்னால் நம்ப முடியவில்லையே என்று பலரும் கூறிக் கொண்டிருந்தனர். சீரியலில் இவர் மேக்கப் எதுவுமே போடாமல் கருப்பாக இருந்ததை பார்த்து பலர் அதுதான் உங்க அழகா இப்போ இருக்கிறது மறக்கப்பட்டு என்று கேட்டு வருகின்றனர்.

சத்தியமா நம்புங்க பாஸ்
தன்னிடம் கருப்பாக இருந்த நீங்கள் எப்படி கலராக மாறி விட்டீர்கள் என்று கேட்கும் ரசிகர்களிடம், இவர் இதுதான் என்னுடைய நிஜ கலரு, அதுதான் டூப்ளிகேட் .அந்த கருப்பு அழகுக்காக தான் கருப்பாக மேக்கப் போட்டு இருந்தேன். அதனால் அப்படி இருந்தேன் என்று விளக்கமும் கொடுத்து இருக்கிறார். ஆனாலும் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடும் போதெல்லாம் எப்படியாவது ஒரு சில ரசிகர்கள் இதே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் ரசிகர்கள் கலாய்த்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத தன்னுடைய ரசிகர்களின் மீது அதிகமாக பாசத்தையும் கொட்டியிருக்கிறார். அதனால்தான் இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்ஸ் வந்ததற்காக ரசிகர்களை அழைத்து விருந்து வைத்து அசத்தி விட்டார். அதுமட்டுமல்லாமல் லாக்டவுன் நேரம் என்பதால் தான் தனக்கு ஃபேன்ஸ் பேஜ் வைத்திருக்கும் ரசிகர்களை மட்டுமே அழைத்திருக்கிறார்.இல்லை என்றால் தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்குமே நான் மீட் பண்ண வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சி ஒளி வீசுது
இவர் இதுவரைக்கும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது இவர் பிஸியாக இருப்பதால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று சீரியலை விட்டு விலகி விட்டார். ஆனால் அவருடைய ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மீண்டும் எப்போது சின்னத்திரைக்கு வருவீர்கள் என்று ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர். அதுவும் சின்னத்திரைக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை இன்ஸ்டாகிராமில் மட்டும் போஸ்ட் போடாமல் இருந்து விடாதீர்கள் என்று அன்பு கட்டளை இடுகிறார்கள். ரசிகர்களின் அன்புக்கு கட்டுப்பட்ட தர்ஷாவும் தினமும் போஸ்ட் போட்டு வருகிறார். இதுவரைக்கும் எத்தனையோ விதவிதமான போட்டோக்களை அப்லோட் செய்து இருந்தாலும், தற்போது இன்ஸ்டாகிராமில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ரசிகர்களின் வாழ்க்கையிலும் வெளிச்சம் வர வேண்டுமென்று கையில் விளக்கோடு, விளக்கு வெளிச்சத்தில் தேவதையாக மின்னும் இவர், இந்த போட்டோக்கு கலக்கலாக கேப்ஷன் போட்டிருக்கிறார்.ஓணத்தின் நிறம் மற்றும் விளக்குகள் உங்கள் வீட்டின் மகிழ்ச்சியை நிரப்பப்படும் என்று அனைவருக்கும் சந்தோஷமான ஒளியை காட்டியிருக்கிறார். அதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications