ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும் 'அது" நடக்கலியாமே... பாவம் அந்த பொண்ணு!
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியல் எந்த தொய்வும் இல்லாம ரொம்ப நல்லா சரியான நேர்கோட்டுல பயணிச்சுக்கிட்டு இருக்கு.
இந்த சீரியலின் நாயகி ஆனந்திக்கு கண்மணி உயிருக்கு உயிரான தோழி. ஆனந்தி திருவை காதலிச்சு, போராட்டம், சண்டைன்னு எல்லாம் முடிஞ்சு திருவை கல்யாணம் பண்ணிக்கிட்டா.
இதுல முதலிரவு நடக்க கூடாதுன்னு திருவின் அப்பா, தங்கை, திருவின் மேல ஆசைப்பட்ட அனன்யா எல்லாரும் சதி செய்தும், ரெண்டு பேருக்கும் முதலிரவு நடந்து இப்போ ஆனந்தி முழுகாம இருக்கா.ஆனா, புருஷன் திருவுக்கு இதை தெரிவிக்க முடியாத நிலை ஆனந்திக்கு.

உண்மை, நேர்மை
கண்மணியை செழியன் லவ் பண்ணி இருந்தாலும், அம்மா பேச்சை தட்ட முடியாம சுகாசினியை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்றான். சுகாசினி நல்ல பொண்ணு இல்லைன்னு தெரிஞ்சு கண்மணி கல்யாணத்தை நிறுத்த, தன்னை செழியன் கெடுத்துட்டதா பொய் சொல்லி கல்யாணம் செய்துக்கறா .

பிடிக்கலை செழியனுக்கு
பொய் சொல்லி கல்யாணம் செய்துகிட்ட கண்மணியை புடிக்கலை செழியனுக்கு. முதலில் மாமியார் சற்குணத்துக்கும் பிடிக்காமல் இருக்க, இப்போது வீட்டுக்கும் பிடித்த மருமகளாயிட்டா கண்மணி. இருந்தாலும் என்ன மாயம், மந்திரம் செய்தாலும் புருஷன் மட்டும் கண்மணியை நெருங்கலை

கண்மணி பொய்
கல்யாணமாகி ஒரு வருஷமாக போவுது.. இன்னும் மருமக வயித்துல ஒண்ணும் இல்லையான்னு எல்லாரும் கேட்க, கண்மணி கர்ப்பம் மாதிரி நடிக்கறா. என்ன இருந்தாலும் இவளுக்கு சதி செய்ய கூடவே வீட்டில் இருக்கா சுகாசினி.

கூட்டு சதி
சுகாசினி தன் இஷ்டத்துக்கு செழியன் தம்பி, அல்லது செழியன் கூட சேர்ந்து கண்மணியை வீட்டை விட்டு விரட்ட பிளான் பண்ணிகிட்டே இருக்கா. கண்மணி மேல செழியனுக்கு அன்பு வரும் சமயம், சுகாசினி எதாவது செய்து கெடுத்து விட்டுட்டறா.

கண்மணி பாவம்
கண்மணி கடைசியாக புருஷன் கூட ஆசையா வெளியில போக, அங்கே சில பெண்களை செட் செய்து, கண்மணியின் அம்மா வேணும்னே சதி செய்து, சில பெண்களை செட் செய்து எதோ பேச வைப்பது போல சதி செய்துடறா சுகாசினி.

செழியன் பழி
இந்த முறையும், சுகாசினியின் செட்டப் செய்ததை, கண்மணியின் அம்மா செய்ததுன்னு நினைச்சு கண்மணியை பாதியிலேயே இறக்கி விட்டுட்டு போயிடறான்.ரொம்ப வேதனையில் இருக்கா கண்மணி.
பாவம் கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும், அது நடக்கலேன்னா...பாவம் இல்லையா கண்மணி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications