நிகழ்ச்சியில் பிரியங்காவிடம் அத்துமீறி நடந்த காமெடி நடிகர்...இவரா இப்படி?திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பிரியங்காவின் கழுத்தில் ராமர் கை வைத்த பிரமோ வெளியாகியதை தொடர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஊ சொல்றியா, ஊ ஊ சொல்றியா மாமா எனும் நிகழ்ச்சியில் பிரியங்காவின் கழுத்தில் ராமர் கைவைத்த பிரமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
ராமரின் செயலை சற்றும் எதிர்பாராத நிஷா அவரை அடித்திருக்கிறார்.
என்னதான் காமெடியாக இருந்தாலும் பொது வெளியில் இப்படியா ஒரு பெண்ணிடம் அனுமதி இல்லாமல் அநாகரிமாக நடந்து கொள்வது என்று நெட்டிசன்கள் ராமரை திட்டி வருகிறார்கள்.

காமெடி நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்க பட்ட ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா மாமா என்ற நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் பிரியங்காவிற்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்க கிடைக்குமா? இல்லையா? என்று பயந்து கொண்டு இருந்தவருக்கு பல நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி கிடைத்தது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இவர் ஜாலியாக பேசி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ராமர் செய்த செயல்
இந்த பிரமோவில் நிஷா மற்றும் ராமர் ஆகிய இருவரும் ஒரு பக்கத்து அணியினராக கலந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது பிரியங்காவின் கழுத்தில் ஒரு பூட்டு இருக்கும் செயின் ஒன்றை அவர் அணிந்திருக்கிறார். அந்த பூட்டுக்கான சாவி என்னிடம் தான் இருக்கிறது என்று ராமர் பிரியங்காவின் அருகில் சென்று, அவருடைய முடியை விளக்கி அவரது கலுத்தில் கை வைத்தார். ராமரின் இந்த செயலை கண்டு பிரியங்காவும் ஒரு நிமிடம் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். அடுத்து நிஷா ராமரை அடித்திருக்கிறார். இந்த பிரமோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ராமரின் இந்த எல்லை மீறிய செயலை பலர் விமர்சித்து வருகிறார்கள்.

பாப்புலரான வசனம்
விஜய் டிவியில் பெண் வேடம் விட்டு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒரே வசனத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் பிரபலமான ராமர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு? கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை காட்டி பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் பல நிகழ்ச்சிகளில் பெண் வேடம் போட்டு வந்து பலரையும் கலாய்த்து நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அதனால் தான் இவருடைய பெயரில் ராமர் வீடு என்று ஒரு தனி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தியது.

வெள்ளி திரையிலும் வாய்ப்பு
தற்போது விஜய் டிவியில் ராமர் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரைகளும் இவருக்கு பல வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிலையில் இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இவருடைய சொந்த ஊரிலேயே கிராம நிர்வாக அலுவலராகவும் இவர் பணியாற்றி வருகிறார். இது பலருக்கும் தெரிந்த உண்மைதான். இவருடைய வீட்டின் கிரகப்பிரவேசம் நடந்து முடிந்தது. தன்னுடைய சொந்த ஊரான மதுரையிலேயே பிரம்மாண்டமான வீடு கட்டி சின்னத்திரை பிரபலங்கள் பலரையும் அழைத்து சிறப்பாக பங்க்ஷன் நடத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் பிரியங்கா விடம் நடந்து கொண்ட நிகழ்வுக்கு அதிகமான ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
-
நடிகை பானுப்பிரியாவின் நிலைமை இதுதான்..! வெளியே தெரியாத ரகசியங்களை உடைத்த குஷ்பூ -
மரியான் பட நடிகர் சலீம் குமாரின் மறைவால் உருகிய 'கருப்பு' நடிகை சிவதா.. கலங்க வைத்த பதிவு -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications