வேட்டையன் பராக்.. திரிஷா, சத்யராஜ், யோகி பாபு.. OTT உலகில் முதல்முறையாக குதித்த பிரபலங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் நடிகர் நடிகைகளும் ஓடிடியில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதில் முதல் முறையாக நடிக்க தொடங்கி இருக்கும் சிலர் பற்றி பார்க்கலாம்.

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஓடிடியில் சினிமா மற்றும் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்து இருக்கிறது. தியேட்டர்களில் சென்று குடும்பத்தோடு படம் பார்ப்பது என்பது பலரால் முடியவில்லை. காரணம் பண வசதி மட்டுமல்லாமல் எல்லோராலும் ஒரே நேரத்தில் தியேட்டருக்கு செல்ல முடியவில்லை.

Television ott

இதனால் வீட்டில் இருந்தபடியே தியேட்டரில் வெளியாகும் படங்கள் சில வாரங்களில் ஓடிடியில் வெளியாவதை பார்ப்பதற்கு ரசிகர்கள் விரும்புகிறார்கள். தொலைக்காட்சியில் சீரியல்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது அதுபோலவே இப்போது ஓடிடியில்
வெப் சீரிஸும் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சினிமாவில் இருந்து முதல் முறையாக ஓடிடியில் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களை பற்றி பார்க்கலாம்.

திரிஷா (பிருந்தா வெப் சீரிஸ்): நடிகை திரிஷா முதல் முறையாக பிருந்தா என்ற வெப் சீரிஸ் நடித்திருக்கிறார். இதில் போலீஸ் ஆபீசராக அவர் நடித்திருக்கும் நிலையில் திரில்லர் மற்றும் க்ரைம் சீரிஸாக இந்த வெப் சீரிஸ் இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் சோனி லைவ்வில் வெளியாகி இருக்கிறது.

Television ott

சத்யராஜ் (மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்): நடிகர் சத்யராஜ் முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதிலும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான மை பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் என்ற சீரிஸில் நடித்திருக்கிறார். இதில் அவரோடு நடிகை சீதா, ரேகா, ரேஷ்மா பசுபுலேட்டி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்சன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

Television ott

யோகி பாபு (சட்னி சாம்பார் வெப் சீரிஸ்): நடிகர் யோகி பாபு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நிலையில் முதல் முறையாக சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் மூலமாக ஓடிடியில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த சீரிஸில் கயல் சந்திரன், வாணி போஜன், நிதின் சத்யா போன்ற பலர் நடித்திருக்கிறார்கள்.

Television ott

எஸ்.ஜே சூர்யா (வதந்தி வெப் சீரிஸ்): நடிகர் எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாகவும் வில்லனாகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் வதந்தி எந்த என்ற வெப் சீரிஸ் மூலமாக ஓடிடியில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த வெப் சீரிஸ் முழுக்க முழுக்க கிரைம் மற்றும் திரில்லர் வகையை சார்ந்தது.

Television ott

ஷில்பா ஷெட்டி(இந்திய போலீஸ் படை): பல மொழி திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ஷில்பா ஷெட்டி இந்திய போலீஸ் படை என்ற வெப் சீரிஸ் மூலமாக முதல்முறையாக ஓடிடியில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த சீரிஸில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

மனிஷா கொய்ராலா (ஹீரமண்டி): நடிகை மனிஷா கொய்ராலா தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் சீரிஸ் மூலம் ஓடிடியில் அறிமுகமாகி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+