இந்த விடுமுறையை கொண்டாட வரும் ஓடிடி ரிலீஸ் தொகுப்பு.. திகில், காமெடி, காதல் என எல்லாமே இருக்கே
சென்னை: இந்த வாரம் ஆகஸ்ட் 14 முதல் 18 ஆம் தேதி வரைக்கும் ஓடிடியில் என்னென்ன வெப் சீரிஸ் வெளியாக போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அதைத்தொடர்ந்து மூன்று நாட்கள் பலருக்கும் விடுமுறை வரும் நிலையில் அதை வீட்டிலேயே கொண்டாடும் வகையில் ஓடிடி தளங்களில் பல்வேறு வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் வெளியாகிறது.
மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்- டிஸ்னி ஹாட்ஸ்டார்: நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வெப் சீரிஸ் தான் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட். சத்யராஜ் மற்றும் ரேகா பல வருடங்களுக்கு முன்பு நடித்த கடலோர கவிதைகள் திரைப்படத்தில் இவர்கள் ஜோடி ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில் பல வருடம் கழித்து இந்த வெப் சீரிஸ் மூலமாக மீண்டும் இவர்கள் இருவரும் இதில் ஒன்றாக நடிக்கிறார்கள்.

அதோடு இந்த சீரிஸில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இருக்கிறார்கள். அதிலும் நடிகை சீதா, ரேஷ்மா பசிபுலேட்டி, காயத்ரி, வர்ஷா பெல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி உட்பட பல நடித்திருக்கின்றனர். அதோடு சத்யராஜ்யின் மனைவியாக சீதா இந்த வெப் சீரிஸில் நடிக்கும் நிலையில் சத்யராஜ் ஒரு கல்லூரியில் வேலை பார்ப்பது போன்று அங்கு அவரை எல்லா பெண்களும் சைட் அடித்தாலும் அவர் யாரையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
ஆனால் தன்னுடைய முதல் காதல் நினைவுகளை மட்டும் தன்னால் மறக்க முடியவில்லை என்று தன்னுடைய மனைவி சீதாவிடம் அவர் சொல்லுவது, பிறகு அவர்களுக்குள் காதல், மோதல், காமெடி என இந்த வெப் சீரிஸ் இருக்கும் நிலையில் வரும் ஆகஸ்ட் 16 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

வேற மாதிரி ஆபீஸ் சீசன் 2- ஆஹா தமிழ்: ஆஹா வெப் சீரிஸின் இரண்டாவது சீசனான "வேற மாதிரி ஆபீஸ்" ஒரு திகில் கலந்த காமெடி வெப் சீரிசாக இருக்கிறது. இந்த சீரிஸ் அலுவலகத்தில் நடக்கும் கதை போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பணியாளர்கள் அன்றாட சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதில் ஏற்படும் விளைவுகள் பற்றி தான் இந்த சீரிஸ் இருக்கிறது. இதில் ஆர் ஜே விஜய், ஜனனி அசோக்குமார், விஜே பப்பு, சௌந்தர்யா நஞ்சுண்டன், ரவீனா தாஹா, ஜெயசீலன், விக்கல் விக்ரம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அதோடு இந்த வெப்சைரிசை ஜஸ்வின் ஜே இயக்கியுள்ளார். அதுபோல இந்த சீரிஸின் தயாரிப்பாளராக சிவகாந்த் இருக்கிறார்.

மனோரதங்கள்- ZEE5: மலையாளத்தில் உருவான இந்த சீரியஸில் நடிகர் மம்முட்டி, மோகன்லால், பிஜு மோகன், பகத் பாஸில், பார்வதி திருவோத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மனோரதங்கள் ஒன்பது எபிசோடுகளாக இருக்கிறது. இதை இயக்குனர் பிரியதர்ஷன், ரஞ்சித் அபயம், சந்தோஷ் சிவன், சியாமா பிரசாத், ஜெயராஜ், அஸ்வதி, ரத்தேஷ் அம்பாள் மற்றும் மகேஷ் நாராயணன் போன்ற பலர் இயக்கி இருக்கின்றனர்.
அதோடு புகழ்பெற்ற எழுத்தாளரான எம்டி வாசுதேவன் நாயரின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications