Demonte Colony 2 OTT: டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை: நடிகர் அருளின் நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி 2 திகில் திரைப்படம் குறித்த ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது. எந்த தளத்தில் இந்த படம் வெளியாக போகிறது? எந்த தேதியில் வெளியாக போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படம் ஹரார் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படம் அந்த நேரத்தில் அதிகமான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நடிகர் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உட்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சியான கதைகள் திகில் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது என்று கூறலாம்.
முதல் பாகம் 275 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியான நிலையில் டிமான்டி காலனி 2 தற்போது 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை மிரட்டும் வகையில் இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனாகவிற்க்கு இந்த திரைப்படம் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்திருக்கிறது.

அதே நேரத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பிளாக் ஆகி விடும் என்று சிலர் கலாய்த்து வந்த நிலையில் அதை இந்த திரைப்படம் பொய்யாக்கி இருந்தது. ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியான பிறகு அவர் பற்றி பலரும் கலாய்த்து வந்தனர். ஆனால் டிமான்டி காலனி திரைப்படம் பிரியா பவானி சங்கருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் டிமான்டி காலனி 2 படத்திற்கான ஒடிடி உரிமையை ஜி5(Zee5) நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் டிமான்டி காலனி 2 ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications