OTT: ஹாட்ஸ்டாரில் வெளியான “கோலிசோடா ரைசிங்” ட்ரெய்லர்.. ஆரம்பமே அசத்தல்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் விஜய் மில்டன் இயக்கியுள்ள "கோலிசோடா ரைசிங் (Goli soda rising)" வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸில் கோலி சோடா திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களோடு மேலும் பல முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
தற்போதைய சூழலில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் அடுத்த பாகம் வெளிவருவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் பல ரசிகர்களை இளைஞர்களையும் கவர்ந்த கோலி சோடா திரைப்படத்தின் அடுத்த பாகமாக கோலிசோடா ரைசிங் என்ற வெப் சீரிஸ் உருவாகி இருக்கிறது. இதில் கோலிசோடா திரைப்படத்தில் நடித்த குட்டி பசங்க இப்போ இளைஞர்களாக மாறிவிட்டார்கள்.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷ் பிரைட் ரைஸ் கடை வைத்திருப்பது போன்று ஒரு கடையை கோலி சோடா இளைஞர்கள் நடத்துகிறார்கள். கோலி சோடா ரைசிங் வெப்சீரிசின் ட்ரைலரின் ஆரம்பத்திலேயே "மார்க்கெட்டில் நமக்குன்னு ஒரு கடை இருந்தா நல்லா இருக்கும்ல" என்ற வசனத்தோடு தொடங்குகிறது. கோலிசோடா நண்பர்கள் ஹோட்டலை நடத்தும்போது ஏற்படும் பிரச்சனைகள், அந்த ஹோட்டலை தங்கள் வசம் வைத்துக் கொள்ள அவர்கள் போராடும் போராட்டங்கள் தான் இந்த வெப் சீரிஸின் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.
இதில் நடிகர் சேரன் முன்னாள் ரவுடியாகவும் ஜெயிலிலிருந்து பிறகு வெளியே வந்தது போன்று காட்டி இருக்கிறார்கள். அவரைத் தொடர்ந்து பெரிய ரவுடி குரூப்பின் தலைவராக நடிகர் சாம் மிரட்டுகிறார். இவர்களையெல்லாம் விடயும் அனைவரையும் வியக்க வைத்த கேரக்டர் என்றால் அது புகழுடைய கேரக்டர் தான். விஜய் டிவியில் அவர் பெண் வேடமிட்டு நடித்து பலரும் பார்த்திருப்பார்கள்.
அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் கூட காமெடி கேரக்டரிலும் செண்டிமெண்ட் காட்சிகளிலும் நடித்திருந்தார். ஆனால் இந்த வெப் சீரிஸில் ஒரு பக்கா வில்லனாக இருக்கிறார். அதிலும் கத்தியில் ரத்தத்தோடு அவர் பேசும் வசனங்கள் பார்ப்பதற்கே பயமூட்டும் வகையில் இருக்கிறது. இவர்களோடு நடிகை ரம்யா நம்பீசன், அபிராமி மற்றும் முந்தைய கோலிசோடா படத்திலிருந்த ஆச்சி போன்றவர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு கோலிசோடா திரைப்படம் வெளியானது. 2018ஆம் ஆண்டு கோலிசோடா 2 வெளியானது. இதன் தொடர்ச்சியாக தற்போது கோலிசோடா ரைசிங் என்ற வெப் சீரிஸை விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களோடு விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, அம்மு அபிராமி போன்றோர் ஏற்கனவே பழக்கப்பட்ட கேரக்டர்களாக இந்த சீரிஸிலும் நடித்திருக்கிறார்கள்.
அதோடு அருணகிரி இசையமைத்திருக்கிறார். சைமன் கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த வெப் சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் செப்டம்பர் 13 வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications