இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கப் போகிறது. ஹாலிவுட் சூப்பர் ஹீரோ சீரிஸ்கள் முதல் தமிழ் கிராமத்து ஆக்சன் டிராமா வரை, குடும்ப சென்டிமென்ட் முதல் மர்ம த்ரில்லர் வரை பல வித்தியாசமான கதைகள் இந்த வாரம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன.

குறிப்பாக தனுஷின் 'கர', நிக்கோலஸ் கேஜ் நடித்த 'ஸ்பைடர்-நுவார்', தமிழ் குடும்ப டிராமா 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' போன்றவை ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Dhanush Kara Spider Noir Nicolas Cage OTT Releases Netflix Prime Video JioHotstar ZEE5 Tamil Cinema

தனுஷின் 'கர' மீது ரசிகர்களின் கண்கள்

இந்த வாரத்தின் மிகவும் பேசப்படும் ரிலீஸ்களில் ஒன்று தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படம். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்சன் டிராமா படம் அதிகாரம், குடும்ப மோதல், பழிவாங்குதல், எமோஷனல் போராட்டம் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

படத்தின் டிரெய்லர் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. தனுஷின் தீவிரமான நடிப்பு, கிராமத்து பின்னணி, ஆக்ரோஷமான காட்சிகள் ஆகியவை இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது. இந்த படம் மே 28 முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

ஹாலிவுட் ரசிகர்களுக்காக 'ஸ்பைடர்-நுவார்'

ஹாலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'ஸ்பைடர்-நுவார்' சீரிஸ். நிக்கோலஸ் கேஜ் நடித்துள்ள இந்த சீரிஸ், ஸ்பைடர்மேன் உலகத்தின் மிகவும் பிரபலமான alternate version-ஐ மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கருப்பு-வெள்ளை மற்றும் கலர் என இரண்டு வித ஃபார்மாட்டிலும் இந்த சீரிஸ் வெளியாகிறது என்பது கூடுதல் சிறப்பு. 1940களின் நடப்பது போன்ற ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரிஸ் க்ரைம் வேர்ல்ட், மர்ம விசாரணைகள் போன்ற பின்னணி போன்றவை ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மே 27 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

குடும்ப ரகசியங்களை உடைக்கும் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்'

தமிழ் ரசிகர்களுக்காக இந்த வாரம் குடும்ப உணர்ச்சிகளை மையமாக கொண்ட தொடராக வருவது 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்'. குடும்பத்தின் ஒற்றுமைக்குள் மறைந்திருக்கும் ரகசிய உறவு எப்படி பெரிய பிரச்சனையாக மாறுகிறது என்பதை இந்த சீரிஸ் காட்டுகிறது.

குடும்ப சென்டிமென்ட், தந்தை - மகன் உறவு, மறைக்கப்பட்ட உண்மைகள் ஆகியவை இந்த தொடரின் முக்கிய அம்சங்களாக கூறப்படுகிறது. இது மே 27 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

கலக்க வருகிற 'ஜெட்லீ'

தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த வாரம் காமெடி த்ரில்லராக வருவது 'ஜெட்லீ'. ஒரு விமான பணிப்பெண் எதிர்பாராத சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதையும், அதிலிருந்து வெளியேற முயற்சிக்கும் சம்பவங்களையும் மையமாக வைத்து படம் நகர்கிறது.

காமெடி, குழப்பம், திடீர் திருப்பங்கள் ஆகியவை இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மே 25 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

திருமண வீட்டு கலாட்டாவை சொல்லும் 'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்'

குடும்ப கொண்டாட்டங்கள், உறவினர்களின் சண்டைகள், காதல், எமோஷனல், திருமண வீட்டு கலாட்டா - இதையெல்லாம் கலந்த டிராமாவாக உருவாகியுள்ளது 'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்'.

ஆறு cousins-ஐ மையமாக கொண்டு நகரும் இந்த சீரிஸ், குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது மே 29 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மீண்டும் வரும் 'அ குட் கேர்ள்ஸ் கைடு டூ மர்டர்'

மர்ம விசாரணை தொடர்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த வாரம் முக்கியமான ரிலீஸ் 'அ குட் கேர்ள்ஸ் கைடு டூ மர்டர் - சீசன் 2'.

முதல் சீசனில் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த சீரிஸ், இப்போது இன்னும் ஆபத்தான மற்றும் மனஅழுத்தம் நிறைந்த கதையுடன் திரும்பி வருகிறது. ஒரு பெரிய வழக்கை விசாரித்த பிறகு மன உளைச்சலில் இருக்கும் Pip, மீண்டும் புதிய பிரச்சனையில் சிக்கிக் கொள்வது இந்த சீசனின் மையக்கருவாக உள்ளது.

சிரிப்பும் குழப்பமும் கலந்த 'ரூம்மேட்ஸ்'

கன்னடத்தில் உருவான 'ரூம்மேட்ஸ்' சீரிஸ், நாலு நண்பர்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட காமெடி டிராமா. ஒரு சாதாரண கிரிக்கெட் மைதான சண்டை எப்படி பெரிய ego clash-ஆக மாறுகிறது என்பதை கலகலப்பாக சொல்லியுள்ளனர்.

நண்பர்கள் வாழ்க்கை, லேண்ட்லார்ட் பிரச்சனை, சிறிய விஷயத்தில் பெரிதாகும் சண்டைகள் என இளம் ரசிகர்களை கவரும் அம்சங்கள் இதில் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இது மே 27 முதல் ஜீ5-ல் வெளியாகிறது.

நெட்பிளிக்ஸில் குவியும் சர்வதேச சீரிஸ்கள்

இதுதவிர நெட்பிளிக்ஸில் இந்த வாரம் பல சர்வதேச சீரிஸ்களும் வெளியாகின்றன.

தி ஃபோர் சீசன்ஸ் 2 - பழைய நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் எமோஷனல் டிராமா

மர்டர் மைண்ட்ஃபுல்லி 2 - டார்க் காமெடி கிரைம் சீரிஸ்

மை 2 சென்ட்ஸ் - அனிமேஷன் காமெடி

அன்டோல்ட் யுகே: வின்னி ஜோன்ஸ் - பிரபல கால்பந்து வீரர் வின்னி ஜோன்ஸ் வாழ்க்கையை மையமாக கொண்ட ஆவண சீரிஸ், இந்த அனைத்து சீரிஸ்களும் மே 26 முதல் 28 வரை வெளியாகின்றன.

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!

மொத்தத்தில் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ஆக்சன், காமெடி, கிரைம், குடும்ப டிராமா, அனிமேஷன், சூப்பர் ஹீரோ, த்ரில்லர் என அனைத்து ஜானர்களிலும் புதிய ரிலீஸ்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு 'கர' மற்றும் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதனால் இந்த வார இறுதியில் "என்ன படம் பார்க்கலாம்?" என்ற குழப்பமே இருக்காது என்று சொல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+