லட்சுமி மேனனின் சப்தம், ரட்சிதா மகாலட்சுமியின் ஃபயர்! இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் ஒரு மாதிரி போகுது
சென்னை: மார்ச் இறுதி வீக் என்ட், தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு சுவாரசியமாக இருக்கப்போகிறது! மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங், ஃபயர், சப்தம், ஆகாதியா மற்றும் விஜய் எல்எல்பி தி அட்வகேட் போன்ற பலதரப்பட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அவற்றின் நட்சத்திர நடிகர்கள், வெளியீட்டு தேதிகள் மற்றும் எந்த தளத்தில் பார்க்க முடியும் என்பது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்
ஹரி பாஸ்கர், லொஸ்லியா மரியனேசன், இளவரசு மற்றும் ரயன் ஆகியோர் நடித்துள்ள இந்த சுவாரஸ்யமான திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. சஸ்பென்ஸ் மற்றும் எமோஷன்கள் கலந்த இந்த திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

ஃபயர்
பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால் மற்றும் சந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ள அதிரடி த்ரில்லர் திரைப்படம் ஃபயர் (Fire OTT). இது மார்ச் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. விறுவிறுப்பான தருணங்களைக்கொண்ட இந்த திரைப்படம் ZEE5 இல் கிடைக்கும். நாகர்கோவில் காசியின் பாலியல் சீண்டல்களை அடிப்படையாக வைத்து உருவான இந்த படத்தில் சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மிகவும் கிளாமராக நடித்திருந்தார்.

சப்தம்
ஆதி பினிசெட்டி, லட்சுமி மேனன் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திகில்-நாடகம் சப்தம். திகிலூட்டும் திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் நெட்ஃபிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ரக்ஷிதா எப்படி ஃபயர் படத்தில் கிளாமர் காட்டியிருந்தாரோ அந்த அளவுக்கு கவர்ச்சி இல்லையென்றாலும், இந்த படத்திலும் லட்சுமி குளிக்கும் காட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகாதியா
ஜீவா, அர்ஜுன் சர்ஜா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ள அதிரடி திரைப்படம் ஆகாதியா. பரபரப்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மார்ச் 28, அன்று வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

விஜய் எல்எல்பி தி அட்வகேட்
ராகா உத்தயா, அஷ்ரஃப் நவாகனி மற்றும் கண்ணன் ராஜமாணிக்கம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நீதிமன்ற டிராமா ஸ்டைல் படம், விஜய் எல்எல்பி தி அட்வகேட். சட்டப் போராட்டங்களையும் உணர்ச்சிகரமான தருணங்களையும் உள்ளடக்கியது. இந்த திரைப்படம் மார்ச் 28 வெளியாகிறது. னி லிவ்வில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

இந்த மார்ச் மாதம் வெளியாகவுள்ள இந்த திரைப்படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமான திரைப்படம் எது, ஏன் என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications