பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் விஜய்யை கலாய்த்த ஓவியா.. அதுவும் இப்படியா? கோபத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆர்மி முதல் முறையாக ஆரம்பித்தது ஓவியாவுக்கு தான். முதல் சீசனில் அவருக்கு இருந்த சப்போர்ட் அதற்கு பிறகு எந்த போட்டியாளருக்கும் அந்த அளவிற்கு இல்லை என்று சொல்லலாம். அப்படி பெயர் வாங்கிய ஓவியா இப்போ பிக் பாஸ் தமிழ் காமன்வென் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் தான் அவர் பேசிய ஒரு வார்த்தை சோசியல் மீடியாவில் அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது.

பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சை

ஏற்கனவே பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஆரி, மாயா, ராஜு மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஓவியாவை பற்றி ஒரு சிலர் மட்டும் தான் நெகட்டிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் 3 பேரும் வாங்கும் அடிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதனாலயே ராஜு நான் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதம் தவறு என்று மன்னிப்பும் கேட்டிருந்தார்.

Oviya Bigg Boss Vijay TV

ஸ்கிரிப்டட் நிகழ்ச்சியா?

இப்படியான நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முந்தைய எபிசோடில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்த நிகழ்ச்சி கிரிப்ட் படி நடக்கிறதா? இல்லை நார்மல் நிகழ்ச்சியா? என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதுதான் பல வருஷங்களாகவே ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகம். அதையே இந்த நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்கள் வாயிலிருந்து விளக்கம் கொடுக்க பிக் பாஸ் முயற்சி செய்திருக்கிறது.

ஓவியா சொன்ன வார்த்தை

அப்போது ஓவியா பேசும் போது, இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது. அந்தந்த நேரத்தில் என்ன நடக்கணும் என்று வேண்டுமென்றால் போட்டியாளர்கள் மனதிற்குள் ஸ்கிரிப்ட் யோசித்துக் கொள்ளலாம். ஆனால் இங்கே ஸ்கிரிப்ட் படி நடந்து இருந்தால் நாங்க எல்லாம் எங்கேயோ போயிருப்போமே என்று ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான், " ஒருத்தர் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்ததை வாசித்து மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கிறாரே... அதையா நாங்க செய்கிறோம்" என்று கிண்டலாக பேசியிருக்கிறார்.

நெட்டிசன்கள் விவாதம்

உடனே நெட்டிசன்கள் ஓவியா பேசிய அந்த வார்த்தையை மட்டும் கட் பண்ணி சோசியல் மீடியாவில் பரப்பி ஓவியா விஜயை கலாய்த்து விட்டார்... விஜய் காமன்வென் நிகழ்ச்சியில் தாக்கப்பட்டார்.. என்று கிண்டல் செய்து வருகின்றனர். அதற்கு ஒரு சிலர், ஓவியா சொன்னது உதயநிதி ஸ்டாலினை தான் என்று கதையை மாற்றி வருகிறார்கள். இப்படியாக சோசியல் மீடியாவில் ஓவியா சொன்ன ஒரு வார்த்தையை வைத்து விவாதம் இருக்கிறது. ஆனால் ஓவியா யாரை நினைத்து அப்படி சொன்னார் என்பது அவருக்கு மட்டும் தான் வெளிச்சம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+