Padai thalaivan 3 days box office: பாக்ஸ் ஆபீஸில் கெத்து காட்டும் படைத்தலைவன்.. 3வது நாளில் இவ்வளவு வசூலா?
சென்னை: நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் திரைப்படம் மூன்று நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியாகி இருக்கிறது.
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படமான படைத்தலைவன் திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. இந்த படத்தை வால்டர், ரேக்ளா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அன்பு இயக்கியிருந்தார். அது போல இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

படைத்தலைவன் திரைப்பட நடிகர்கள்
படைத்தலைவன் திரைப்படத்தில் சண்முக பாண்டியன் உடன் இயக்குனர் கஸ்தூரிராஜா, யாமினி முனீஸ் காந்த் உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்தும் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார். விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போதே இந்த திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு தன்னுடைய சந்தோஷத்தை காட்டி இருந்தார். கடந்து 2015 ஆம் ஆண்டு சண்முக பாண்டியன் சினிமாவில் அறிமுகமானார்.
படைத்தலைவன் வசூல் நிலவரம்
இரண்டு திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் இவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. இதனால் படைத்தலைவன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 1.29 கோடி, இரண்டாவது நாள் 1.22 கோடி வசூல் செய்தது .அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று 1.39 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் வெளியான மூன்று நாட்களில் 3.9 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் சில இணையதளங்கள் இந்த படம் குறைந்தபட்சம் 5 கோடி வரைக்கும் வசூல் செய்து இருப்பதாக கூறி வருகின்றனர்.
பாசிட்டிவ் கமெண்ட்ஸ்
கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தை பற்றி அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக ஒரு படத்திற்கு முதல் நாள் நெகட்டிவ் கமெண்ட் வர தொடங்கிவிட்டார் அடுத்த நாளே அந்த படத்தின் வசூல் குறைவு தொடங்கி விடும். ஆனால் இந்த படத்திற்கு நிறைய பாசிட்டிவ் கமெண்டுகள் இருப்பதால் அடுத்தடுத்து வசூல் கூடிக்கொண்டே இருக்கிறது.
படைத்தலைவன் திரைப்படம் ரிலீஸ்
படைத்தலைவன் திரைப்படம் கடந்த 2023 ஜூலை 14ஆம் தேதி அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஒடிஷா, பாங்காக் போன்ற இடங்களில் நடந்து கொண்டிருந்தது. இந்த படத்தை கடந்த மே மாதம் 23ஆம் தேதி 2025 இல் வெளியாக திட்டமிட்டது. ஆனால் திரையரங்குகள் ஒதுக்கீடு மற்றும் சில சிக்கல்கள் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. நீண்ட வருட காத்திருக்கும் பிறகு படைத்தலைவன் கடந்த வாரத்தில் வெளியாகி இருக்கிறது.

வெற்றி திரைப்படம்
தமிழகம் முழுவதும் இந்த திரைப்படம் 500 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு இந்த படம் வெளியாகி இருக்கும் நிலையில் பலர் எதிர்பார்ப்போடு இருந்தனர். இந்த திரைப்படம் முடிந்த கையோடு கொம்பு சீவி என்ற அடுத்த படத்திலும் சண்முக பாண்டியன் நடித்து முடித்திருக்கிறார். அந்த திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆனாலும் படைத்தலைவன் திரைப்படம் சண்முக பாண்டியனுக்கு வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications