விஜய் ஆண்டனி கரெக்டா சொல்றாரு.. காஷ்மீரில் அத்தனை பேரும் மோசமா? பின்னணியில் யாருனு பாருங்க: பிரபலம்
சென்னை: பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது'' என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கருத்து கூறியிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி தரும்போது, "4 பேர் செய்யும் தவறுக்காக முழு பாகிஸ்தானை தண்டிப்பது தவறு என்று விஜய் ஆண்டனி சொல்லியிருப்பது சரியான வார்த்தை.

தீவிரவாதிகளை, மதங்களின் அடிப்படையில் பார்க்கக்கூடாது. இவர்களை வைத்து ஒரு நாட்டையே அழிக்க வேண்டும், பதிலடி தர வேண்டும் என்று பேசுவது தப்பு.. தீவிரவாதிகளுக்கு தண்டனை தருவதில் தவறில்லை. அதுக்காக ஒட்டுமொத்த நாட்டையே எதிரியாகவே பார்க்க கூடாது, என்பதைத்தான் விஜய் ஆண்டனி சொல்கிறார்.
பெனாசீர் பூட்டோ, நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரவாதத்துக்கு துணைபுரிகிறது என்றால், அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். "நாங்கள் பதிலடி தந்தால் இந்தியா தாங்காது" என்கிறார்கள் என்றால், இந்த குரலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு நாடு என்றாலே, அந்த நாட்டின் பிரதமர், அமைச்சர் மட்டுமே என்று அர்த்தம் கிடையாது. அதையும் தாண்டி அம்மக்களையும் பார்க்க வேண்டும்.
பாகிஸ்தானிலிருந்து சிகிச்சைக்காக வந்திருப்பவர்கள் கண்கலங்குவதை இங்கு பார்ப்பது போல, அங்குள்ள மக்களை பற்றியும் நாம் பார்க்க வேண்டும்.. ஜனநாயகம் என்ற பெயரில் ஆதிக்க சக்திகளால் நடத்தப்படும் ஆட்சிதான் அங்கு நடக்கிறது.
பெனாசீர் பூட்டோ மரணங்களிலிருந்து, நவாஸ் ஷெரீப் ஆட்சி பதவி பறிக்கப்பட்டது என எத்தனையோ விஷயங்கள் அங்கு நடந்துள்ளன.. பிரதமர் ஆட்சி, ஜனாதிபதி ஆட்சி இப்படி மாறி மாறி என பாகிஸ்தானில் நிலையில்லாத ஆட்சிதான் நடந்துள்ளன. வேறு யாரோ அந்த நாட்டை இயக்குவது போலவே இருக்கும்.
இந்தியா - பாக் போர் நடக்குமா
தற்போதைய சூழலில், இந்தியா - பாகிஸ்தான் போர் நடப்பதற்கான வாய்ப்பு குறைவுதான்.. அந்த அளவுக்கு இந்த விவகாரம் செல்லாது என்றே நினைக்கிறேன். ஆனால் இதன் விளைவுகள் அதிகரிக்கலாம்.. தீவிரவாத தாக்குதல் மேலும் அதிகரிக்கலாம்.. பாதுகாப்புகளை பலப்படுத்தலாம்.. ஆனால், எந்த அளவுக்கு அங்கு ராணுவத்தை குவிக்கிறார்களோ, அந்த அளவுக்கு அந்நாட்டு மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழப்பார்கள்.
கடந்த 2006-ல் ஜம்மு, காஷ்மீர் போயிருக்கிறேன். அங்குள்ள நிலைமை எனக்கு தெரியும். எனவே, ஒரு நாட்டை அடையாளம் காணும்போது, அம்மக்களையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
விஜய் ஆண்டனி
4 பேர் தவறு செய்தால், ஊரே மோசம் என்று சொல்வது சரி கிடையாது.. இதைதானே விஜய் ஆண்டனி சொல்கிறார்? யார் குற்றம் செய்தார்களோ அவர்களை அடிக்கணும்.. அதுக்காக பொதுமக்கள் என்ன தவறு செய்தார்கள்? சார்பு நிலையில், இஸ்லாமியர்களை ஆதரிக்கணும், இந்துக்களை எதிர்க்கணும் என்ற அர்த்தத்தில் விஜய் ஆண்டனி பேசவில்லை.. மதங்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் விஜய் ஆண்டனி.
மதம் சார்ந்து முஸ்லீம்களை இப்படியானவர்கள் என்று முத்திரை குத்தவும் கூடாது. ஏனெனில் 26 பேரில் 15 முஸ்லீம்களும் இறந்துள்ளனர்.. அந்த முஸ்லிம்களும், குதிரை சவாரி செய்யக்கூடிய தொழிலாளர்கள்.. அன்றாடம் காய்ச்சிகள்.. எனவே, மதம் சார்ந்து, நாடு சார்ந்து இந்த விவகாரத்தை பார்க்கக்கூடாது. நம்ம ஊரில் ரவுடிகளை என்கவுண்டர்களை செய்வதுபோல, தீவிரவாதிகளை திருப்பியடிக்கலாம். அதில் தவறேயில்லை. ஆனால் பொதுமக்கள் பாவம்" என்று தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications