மகனுக்கு அழகு தமிழில் பெயர் வைத்த பாண்டவர் இல்லம் அனு..வித்தியாசமான சிந்தனை.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பாண்டவர் இல்லம் சீரியலில் நடிகை அனு நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தன்னுடைய குழந்தைக்கு அழகான தமிழ் பெயராக வைத்திருக்கும் அனுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சீரியல் வில்லி :
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த அனு விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ், சன் டிவி என பல முக்கிய சேனல்களில் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கேரக்டரில் அனு நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய வில்லத்தனமான நடிப்பு பார்த்து பலரும் வெறுப்படைந்து வந்தாலும் இவர் இதற்கு முன்பு நடித்த சீரியல்களில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் குறைவு தான் என்று கூறி வருகிறார்கள்.
நிஜத்தில் வேறு மாதிரி:
ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்னும் சீரியலில் இவருடைய மிரட்டலான வில்லத்தனம் பலரையும் வெறுப்படையவும், மிரண்டு போகவும் செய்திருந்தது. இவருடைய சீரியலை பார்த்து பல ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு குழந்தைத்தனமாக தான் இருந்து வருகிறாராம். அதனால் தான் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இவருடைய துறுதுப்பான கேரக்டரையும், ஜாலியான நடவடிக்கைகளையும் பார்த்த ரசிகர்கள் சீரியலில் வரும் அவரா இவர் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தார்களாம்.

காதல் திருமணம் :
அனு நிஜ வாழ்க்கையிலும் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவர்கள் இருவரும் ஜாலியாக எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார். இதனால் சீரியலை தாண்டியும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். நிஜத்திலும் கர்ப்பம்
நிஜத்திலும் கர்ப்பம் :
இந்த நிலையில் நிஜத்தில் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல போட்டோ சூட்கள் எடுத்து அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்திருந்தார். எளிமையாக இவருக்கு ஏழாவது மாதத்திலும், ஒன்பதாவது மாதத்திலும் வளைகாப்பு பங்க்ஷன் நடத்தி இருந்தனர். அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

மகன் வந்தாச்சி :
தற்போது ஒரு சில நாட்கள் இவருடைய சீன்கள் பாண்டவர் இல்லம் சீரியலில் காட்டப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்த அனு, அதற்குப் பிறகு ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் எங்களுக்கு நிறைய செய்திகள் மற்றும் கருத்துக்கள் வந்துள்ளன. உங்கள் ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்காததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களும், எங்கள் குட்டிக்கு ஆசீர்வாதங்களும், உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பை அனுபவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் சிறிய குடும்பத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் எதிர்காலத்திலும் தேவை என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தூய தமிழ் பெயர்:
இந்த நிலையில் தன்னுடைய குழந்தை பிறந்த பிறகு முதல் முறையாக அந்த குழந்தையின் முகத்தை சமூக வலைத்தளத்தில் காட்டி, தன்னுடைய மகனுக்கு தூய தமிழில்," வான் வியன்" என்று பெயர் சூட்டியிருக்கும் செய்தியையும் ரசிகர்களிடம் தெரிவித்து இருக்கிறார். தன் மகனுக்காக அழகான கவிதை எழுதியும், ரசிகர்களிடம் ஆசி கேட்டும் அவர் செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. என்னதான் சீரியலில் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் அழகான தமிழ் மகள் தான் என்று பலரும் அவரை பாராட்டி அவருடைய மகன் வான்வியனை வாழ்த்தி வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications