சன் டிவி நடிகை சீரியலில் கர்ப்பம்.. நிஜத்தில் குழந்தை பிறந்தது.. நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷ்னி கேரக்டரில் நடிக்கும் அனுவிற்க்கு தற்போது குழந்தை பிறந்து இருக்கிறது.

சீரியலிலும், நிஜத்திலும் கர்ப்பமாக இருந்த நிலையில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கும் அனு ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

சீரியல் வில்லி

சீரியல் வில்லி

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த அனு விஜய் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ், சன் டிவி என பல முக்கிய சேனல்களில் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி கேரக்டரில் அனு நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய வில்லத்தனமான நடிப்பு பார்த்து பலரும் வெறுப்படைந்து வந்தாலும் இவர் இதற்கு முன்பு நடித்த சீரியல்களில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் குறைவு தான் என்று கூறி வருகிறார்கள்.

நிஜத்தில் வேறு மாதிரி

நிஜத்தில் வேறு மாதிரி

ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு என்னும் சீரியலில் இவருடைய மிரட்டலான வில்லத்தனம் பலரையும் வெறுப்படையவும், மிரண்டு போகவும் செய்திருந்தது. இவருடைய சீரியலை பார்த்து பல ரசிகர்கள் இவரை திட்டி வந்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு குழந்தைத்தனமாக தான் இருந்து வருகிறாராம். அதனால் தான் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் இவருடைய துறுதுப்பான கேரக்டரையும், ஜாலியான நடவடிக்கைகளையும் பார்த்த ரசிகர்கள் சீரியலில் வரும் அவரா இவர் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தார்களாம்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அனு நிஜ வாழ்க்கையிலும் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவர்கள் இருவரும் ஜாலியாக எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவார். இதனால் சீரியலை தாண்டியும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

 மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டது. இதில் ரோஷினி கேரக்டரில் வில்லியாக அறிமுகமான அணு தற்போது நல்ல மருமகளாக மாறி குடும்ப ஒற்றுமைக்காக பாடுபட்டு வருவதாக காட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இவர் சீரியலில் கர்ப்பமாக இருக்கிறாராம். சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறிய அடுத்த ஒரு சில நாட்களில் இவரும் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பது உறுதியாகி உள்ளதாம்.

நிஜத்திலும் கர்ப்பம்

நிஜத்திலும் கர்ப்பம்

இந்த நிலையில் நிஜத்தில் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பல போட்டோ சூட்கள் எடுத்து அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்திருந்தார். எளிமையாக இவருக்கு ஏழாவது மாதத்திலும், ஒன்பதாவது மாதத்திலும் வளைகாப்பு பங்க்ஷன் நடத்தி இருந்தனர். அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

மகன் வந்தாச்சி

மகன் வந்தாச்சி

தற்போது ஒரு சில நாட்கள் இவருடைய சீன்கள் பாண்டவர் இல்லம் சீரியலில் காட்டப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்த அனு, அதற்குப் பிறகு ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் எங்களுக்கு நிறைய செய்திகள் மற்றும் கருத்துக்கள் வந்துள்ளன. உங்கள் ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்காததற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களும், எங்கள் குட்டிக்கு ஆசீர்வாதங்களும், உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அன்பை அனுபவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் சிறிய குடும்பத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் எதிர்காலத்திலும் தேவை என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+