சவால் விடும் ஜனார்த்தனன்.. போட்டிக்கு தயாரான தனம்.. பரபரப்பான அடுத்த பிரச்சனை.. தவிக்கும் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஏப்ரல் 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஜீவா மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என்று தனம் சொல்ல அதற்கு ஜனார்த்தனன் வரமாட்டார் என சவால் விடுகிறார்.
தன்னுடைய அப்பாவா அல்லது தன்னுடைய கணவர் குடும்பமா என முடிவெடுக்க முடியாமல் முடியாமல் மீனா தவிக்கிறார்.

வெளிப்பட்ட கோபம்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது அடுத்தடுத்து பல திருப்பங்களும் பரபரப்பும் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஜீவா தன்னுடைய அண்ணன் மற்றும் தம்பிகளின் நடவடிக்கையால் காயப்பட்டு தனக்குள் வைத்திருந்த கவலைகள் எல்லாம் மொத்தமாக மீனாவின் தங்கை திருமணத்தில் போட்டு உடைத்து தனி குடித்தனம் போயிருக்கிறார்.
பிரிந்த குடும்பம்
ஜீவாவை தொடர்ந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரச்சனை செய்து விட்டு தனி குடித்தனம் போய்விட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் மீனா மற்றும் ஜீவாவும் அதே போல கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு வந்து விடுவார்கள் என்று தனம் நம்பிக்கையில் அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வரும் திங்கள் கிழமை காண ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ஜனார்த்தனின் மிரட்டல்:
அதில் மீனாவின் வீட்டிற்கு தனம் வந்திருக்கும் நிலையில் வீட்டிற்குள்ளே விடாமல் ஜனார்த்தனன் வீட்டு வாசலில் வைத்து எதற்காக நீங்க மீண்டும் மீண்டும் ஒவ்வொருத்தராக வந்துகிட்டே இருக்கீங்க என்று திட்டி, ஜீவாவும் மீனாவும் உங்க வீட்டுக்கு வருவாங்க உங்க குடும்பம் ஒன்னாகிவிடும் என்று கனவுல கூட நினைக்காதீங்க. உங்க குடும்பம் பிரிஞ்சது பிரிஞ்சது தான். அதை இனி ஒட்ட வைக்க முடியாது. அதற்கான முயற்சியை செய்யாதீங்க என்று கூறுகிறார்.

தனத்தின் சவால்
அதற்கு தனம் நாங்க எல்லாரும் மறுபடியும் ஒண்ணா தான் இருப்போம் என்று சொல்ல, நீ இவ்வளவு நம்பிக்கையா சொல்ற, அதையும் பாப்போம் என்று ஜனார்த்தனன் கூற, பாத்துருவோம் என்று தனமும் கூறுகிறார். இவர்கள் இருவரும் மாறி மாறி சபதம் எடுக்கும் நிலையில் இனி ஜனார்த்தனன் ஜீவாவை ஒரேடியாக வீட்டிலே இருக்க வைப்பதற்காக என்ன முடிவு செய்யப் போகிறார் என்றும், அதே நேரத்தில் தனம் என்ன செய்து மீண்டும் ஜீவா மீனாவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.












Click it and Unblock the Notifications