இதுக்கு பாண்டியன் ஸ்டோர்னு பெயர் வைக்காமல் "அந்த” பெயரை வெச்சி இருக்கலாம்! கலாய்க்கும் நெட்டிசன்கள்

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்ததாக ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஏற்கனவே முல்லை கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர்.

எல்லோரும் ஒன்றாக ஒரே அறையில் தான் தூங்குகின்றனர் ஆனால் எப்படி இவர்களால் மட்டும் கர்ப்பமாக முடிகிறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து ஒவ்வொருவராக வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் இதை வாந்தி ஸ்டோர் என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்று பாண்டியன் ஸ்டோர் சீரியலை பங்கம் செய்கின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் முல்லை

கர்ப்பமாக இருக்கும் முல்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்று பிரமோ வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியாகி தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த சீரியலில் தற்போது தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் சீன்கள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே முல்லை பல வருடங்களுக்காக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் அதுவும் டாக்டரே உங்களுக்கு குழந்தை பிறக்காது உங்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருக்கிறது என்று கூறிய பிறகும் திடீரென இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறி இருக்கின்றனர்.

இந்த லாட்ஜிக் இடிக்குதே

இந்த லாட்ஜிக் இடிக்குதே

இந்த நிலையில் நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து கொண்டிருந்தனர். காரணம் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அனைவரும் சொந்த வீட்டில் இருந்து மீனாவின் அப்பாவின் சூழ்ச்சியால் கதிர் உடைய வீட்டில் இப்போது தங்கி இருக்கின்றனர். கதிர் உடைய வீடு சின்ன வீடாக இருப்பதால் அனைவரும் ஒரே ரூமில் தான் படுத்து தூங்குகின்றனர். இதில் கதிர் உடைய வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர் மொத்த குடும்பமும் வந்து நான்கு மாதமாகும் நிலையில் முல்லை மட்டும் எப்படி இரண்டு மாதமாக கர்ப்பமானார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருந்தனர். அதையே மீனாவும் கதிரிடம் கேட்டு இருந்தார்.

அடுத்த கர்ப்பம் ரெடி

அடுத்த கர்ப்பம் ரெடி

இந்த நிலையில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்புதான் நாங்களும் அடுத்ததாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் ஐஸ்வர்யா எப்போது கர்ப்பம் ஆவார் என்று கண்ணன் பேசி இருந்தார். அப்போதே இனி அடுத்தது ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறி விடுவார்களோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதுபடியே தற்போது இன்று நடந்திருக்கிறது. ஏற்கனவே பெரும் பஞ்சாயத்துக்கு இடையில் இப்போதுதான் கார் வாங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்ததாக ஐஸ்வர்யா வாந்தி எடுத்து அவரும் இன்று கர்ப்பம் என்று ப்ரோமோவில் கன்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.

அடுத்த கர்ப்பம் யார்

அடுத்த கர்ப்பம் யார்

ப்ரோமோவை இதைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு பதிலாக பிரகனண்ட் ஸ்டோர் என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம். அடிக்கடி தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருக்கிறார்களே இதற்கு முடிவில்லையா? என்று ஒரு ரசிகரும்,இன்னொரு ரசிகர் ஏற்கனவே மீனா கர்ப்பமாக இருந்தார். அவரைத் தொடர்ந்து தனம் கர்ப்பமாக இருந்தார், இப்போது முல்லை கர்ப்பமாக இருக்கிறார். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து இனி மீண்டும் மீனா இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக போகிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+