ஜீவாவின் மாற்றத்தை கேட்டு மாமனாரின் பிளான்..அம்மாவால் தனத்திற்கு தெரியாமல் முல்லை எடுத்த முடிவு
மீனா, மூர்த்தியை ஜீவா எதிர்த்து பேசியதை தன்னுடைய அப்பா அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்.
சென்னை: ஜீவாவும் மீனாவும் திருமணத்திற்கு தனியாக வந்திருக்கின்றனர். குடும்பத்தினர் வரவில்லையா என்று மீனாவின் அப்பா, அம்மா கேள்வி கேட்கின்றனர்.
மூர்த்தியை ஜீவா எதிர்த்து பேசியதை கேட்டு மீனாவின் அம்மா, அப்பா சந்தோஷம் அடைகின்றனர்.
மீனாவின் தங்கை திருமணத்திற்கு மொய் வைப்பது குறித்து தனமும் மூர்த்தியும் புது முடிவு எடுத்திருக்கின்றனர்.
முல்லையிடம் அவருடைய அம்மா தனியாக திருமணத்திற்கு மொய் வைக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

சந்தோசப்படும் மீனாவின் அப்பா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 15வது நாளுக்கான எபிசோட்டின், ஆரம்பத்தில் மீனாவின் அம்மா வீட்டிற்கு வரும் ஜீவாவும் மீனாவும் கல்யாண வேலைகளை குறித்து பேசிகின்றனர். பிறகு தான் மற்ற வேலைகளை போய் பார்க்கிறேன் என்று ஜீவா கிளம்பி விடுகிறார். மீனா தனது பெற்றோரிடம் வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறார். மூர்த்தியை ஜீவா எதிர்த்து பேசியதை பற்றி அனைத்து விஷயத்தையும் மீனா உளறியதை கேட்டு மீனாவின் அப்பாவும் அம்மாவும் மாப்பிள்ளை மூர்த்தியை எதிர்த்து பேசினாரா? என வியப்போடு கேட்கின்றனர். பின்னர் அந்த குடும்பத்தை விட்டு விட்டு நம்ம வீட்டுக்கு இவங்க வந்தாலே போதும் என்று மீனாவின் அப்பா மனதிற்குள்ளே யோசிக்கிறார்.

குடும்பத்தினரின் முடிவு
அடுத்ததாக வீட்டில் தனம், மூர்த்தி உட்பட எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீனா தங்கையோட கல்யாணத்துக்கு சீக்கிரமே போகணும் என்று ஜீவா நடந்து கொண்ட விதம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் எல்லாரையும் அமைதியாக இருக்கச் சொல்கிறார். எல்லோரும் கல்யாணம் முடிந்த பிறகு இதைப் பற்றி பேசிக் கொள்ள சொல்லலாம் என்று நாமும் கல்யாண வீட்டுக்கு போகணும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். கதிர் நான் ஜீவாவுக்கு போன் பண்ணேன் எடுக்கவில்லை என்று சொல்ல, முல்லை நான் பேசினேன் அவர் வேலையில் பிஸியாக இருப்பதாக சொன்னார் என்று சொல்கிறார். அனைவரும் ஈவ்னிங் கல்யாணத்துக்கு போகலாம் என்று பேசி முடிவெடுக்கின்றனர்.

மொய் பணம் குறித்து ஆலோசனை
பிறகு கடைக்கு கிளம்பி சென்ற மூர்த்தி சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட தனம் என்ன இப்பவே வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். கல்யாணத்துக்கு மொய் வைக்கணும் அதான் பேங்குக்கு போய் பணம் எடுக்கணும் எவ்வளவு பணம் மொய் வைக்கலாம் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி 35 ஆயிரம் வைக்கலாம் என்று சொல்ல தனம் 50,000 வைப்போம் என்று சொல்கிறார்.

முல்லை கதிரின் தனி பிளான்
அடுத்ததாக முல்லை கதிருக்கு சாப்பாடு வைத்துக் கொண்டிருக்கும்போது முல்லையின் அம்மா போன் செய்து மல்லியின் தம்பிக்கு கல்யாணத்திற்கு மொய் எப்படி வைக்க போறீங்க என்று கேட்கிறார். அதற்கு முல்லை அதெல்லாம் வீட்டிலேயே பார்த்துப்பாங்க என்று கூற, நீங்க தனியா வைங்க என்று கூறுகிறார். அந்த யோசனையை கதிரிடம் முல்லை சொல்கிறார். அதோடு கதிர் ஐயாயிரம் வைத்தால் போதும் தானே!? பிரசாந்துக்கு அப்படியே வைப்போம் என பேசிவிட்டு இருக்கின்றனர். அடுத்ததாக ஐஸ்வர்யாவும் கண்ணனும் கல்யாண வீட்டுக்கு செல்வது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications