மேடையில் குடும்பத்தினருக்கு அப்பாவோடு சேர்ந்து மீனா கொடுத்த அதிர்ச்சி.. அம்மா பேச்சால் மாறிய முல்லை

மீனாவின் அப்பா மனம் மாறி பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினரிடம் அன்பாக பேசி பழகுகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவின் தங்கை திருமணத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து இருக்கிறது.

தனம் மற்றும் மூர்த்திக்கு தெரியாமல் மொய் விஷயத்தில் தம்பிகள் பல வேலையை செய்கின்றனர்.

முல்லையின் அம்மா முல்லையை வளைகாப்பு செய்து தனியாக கூட்டி சென்று விட வேண்டும் என்று பிளான் போடுகிறார்.

மாப்பிள்ளை வரவேற்பு

மாப்பிள்ளை வரவேற்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 18 ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மீனாவின் தங்கை திருமணத்தில் மண்டபத்தில் குடும்பத்தினர் அனைவரும் இருக்கின்றனர். அப்போது மாப்பிள்ளை வீட்டினர் மண்டபத்திற்கு வர அவர்களை வரவேற்பதற்காக கதிர் ஜீவாவோடு சேர்ந்து அங்கே செல்ல மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு வரும்போது கதிர் கண்ணன் என அனைவரும் ஆட்டம் போட ஜீவா சந்தோசமாக அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜீவாவின் பயம்

ஜீவாவின் பயம்

அடுத்ததாக மாப்பிள்ளை மேடையில் உட்கார்ந்து இருக்க ஜீவா அங்கே இங்கே வேலை பார்த்துக் கொண்டே இருக்க மீனா மட்டும் மணமேடையில் நின்று கொண்டிருக்கிறார். அங்கு வரும் ஜனார்த்தனன் மீனாவிடம் மாப்பிள்ளை தனியாக வேலை செஞ்சிட்டு இருக்காரு, நீ இங்க நின்னுட்டு இருக்க, மாப்பிள்ளையை இங்கே கூப்பிடு என்று சொல்லி ஜீவாவை கூப்பிட்டு நீங்கள் இனி வேலை பார்க்க வேண்டாம் மேடையிலே நில்லுங்கள் என்று மேடையில் நிற்க வைக்கிறார். மேடையில் இருக்கும் ஜீவா கீழே தனது அண்ணன் தம்பிகளோடு ஜனார்த்தனன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து மீனாவிடம் நிச்சயதார்த்தத்தில் நடந்த மாதிரி இப்ப உங்க அப்பா நடந்துவிட கூடாது மீனா என்று சொல்ல, நானும் அதை நினைச்சு தான் பயந்துட்டு இருந்தேன். ஆனால் அவங்க எவ்வளவு ஜாலியா இருக்காங்க பாரு என்று மீனா சொல்கிறார்.

குரூப் போட்டோ எடுத்தாச்சி

குரூப் போட்டோ எடுத்தாச்சி

அடுத்ததாக மீனா கீழே இருக்கும் தனம் மற்றும் மூர்த்தி உட்பட தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் மேடையில் நிற்கும்படி கூறுகிறார். அனைவரும் மேடையில் நிற்க திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு எல்லோரும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும்போது நாம குரூப் போட்டோ எடுக்கணும்னு சொன்னேன் என கண்ணன் சொல்ல ஜீவா மட்டும் அங்கே தனியாக வந்திருக்கும் நபர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு கண்ணனோடு சென்று ஜீவாவை கூட்டி வந்து குரூப் போட்டோ எடுக்கின்றனர். முதலில் ஜீவா மறுத்தாலும் பின்பு குடும்பத்தோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

அண்ணனுக்கு வருத்தம் தான்

அண்ணனுக்கு வருத்தம் தான்

அடுத்ததாக திருமணம் முடிந்து மூர்த்தி, கதிர், கண்ணன், மனைவிகளோடு தனியாக அமர்ந்திருக்க அங்கே வரும் ஜனார்த்தனன் சாப்பிட வருமாறு அழைக்கிறார். பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அவர்கள் மறுக்க நீங்க எல்லாம் குழந்தையை வச்சிட்டு இருக்கீங்க நேரத்துக்கு சாப்பிடணும் என்று சாப்பிட அழைத்து சென்று சாப்பிட்டு வருகிறார்கள். பிறகு அப்போதும் அங்கே ஜீவா வேலை செய்து கொண்டு அலைவதை பார்த்து மூர்த்தி நம்மை வேலை செய்ய விடாமல் அவன் ரெஸ்ட்டே இல்லாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறான் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்து வளைகாப்பு

அடுத்து வளைகாப்பு

அடுத்ததாக முல்லையின் அம்மா முல்லையின் அப்பாவிடம் முல்லைக்கு சீக்கிரமா வளைகாப்பு பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட வேண்டும். இல்லனா அவ அங்க ரொம்ப கஷ்டப்படுவா. தனத்துக்கும் மீனாவுக்கும் நடந்த மாதிரி தனியா பிரம்மாண்டமா வளைகாப்பு பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக அங்கே மொய் எழுதும் இடத்திற்கு ஐஸ்வர்யா நான் போய் மொய் எழுதிட்டு வந்துருவோமா என்று கேட்க கண்ணனிடம் பணத்தை கொடுத்து அனுப்புகிறார்.

மொய் பிரச்சனை தொடங்கியாச்சு

மொய் பிரச்சனை தொடங்கியாச்சு

கண்ணனை கூப்பிட்டு மூர்த்தியும் இது மீனாவின் தங்கை வீட்டுக்கு தனியா எழுது, இது பிரசாந்த் வீட்டுக்கு என்று இரண்டு கவரை கொடுத்து மொய் எழுத சொல்ல, தனம் பிரசாந்த் வீட்டுக்கு இப்ப எழுத வேண்டாம் அதான் மல்லி, மதுரையில் பெரிய ரிசப்ஷன் வைக்கணும்னு சொல்லி இருக்காங்க. அப்ப எழுதிக்கலாம் என சொல்கிறார். பிறகு கண்ணன் மூர்த்தி கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு சென்றுவிட, முல்லையிடம் அவருடைய அம்மா நீ எவ்வளவு பணம் எழுதப்போற என கேட்க 5000 எழுத போறேன் என்று சொல்ல, இது போதாது இன்னும் கொஞ்சம் எழுது என்று அவருடைய அம்மா சொல்ல, இதுவே போதும். அக்காவும், மாமாவும் நிறைய செய்றாங்க. இது நான் தனம் அக்காவுக்கு தெரியாமல் தான் இதுவே செய்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு அவருடைய அம்மா முறைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+