ஜீவா கேட்ட கேள்வியால் உடைந்து போன குடும்பம்..ஜனார்த்தனன் திடீர் மாற்றம்..மீனா செய்த எதிர்பாராத செயல்
ஜீவா, மூர்த்தியிடம் அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்க மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றது.
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா இதற்கு முன்பு தன்னுடைய மனதில் இருந்த மொத்த கவலைகளையும் அண்ணன் முன்பு கொட்டுகிறார்.
மீனாவிற்கும் தனக்கும் எந்த அளவிற்கு வீட்டில் அவமானம் நடந்தது என்பதை பற்றி சபையில் பேச ஜனார்த்தனன் ஜீவாவை பாராட்டுகிறார்.
பாண்டியன் ஸ்டோர் குடும்ப சண்டையைப் பார்த்து பிரசாந்த் தடுக்க போக மல்லி இது அவர்களுடைய குடும்ப பிரச்சினை என்று தடுத்து வைக்கிறார்.

போட்டுக் கொடுத்த ஜனார்த்தனன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மார்ச் 22ஆம் தேதி காண எபிசோட்டின் ஆரம்பத்தில் கண்ணனை மூர்த்தி அறைந்ததால் கோபத்தில் ஐஸ்வர்யா கண்ணனை தனியாக கூட்டிக்கொண்டு செல்கிறார். பிறகு ஜனார்த்தனன் எல்லாரும் தெளிவாக தான் இருக்காங்க. மாப்பிள்ளை உங்களை தவிர நாளைக்கு சபையில் மொய் லிஸ்ட்டை வாசிப்பாங்க. அப்போ எல்லாரும் என்கிட்ட கேப்பாங்க உங்க மாப்பிள்ளை பொண்ணு எவ்வளவு செஞ்சாங்கன்னு. அப்போ முகத்தை எங்க வச்சுக்கிறது மாப்பிள்ளை. அதுக்காகத்தான் பணம் வேணுமானு கேட்டேன். பணம் எதுவும் இல்லை என்றால் நானே கொடுத்து இருப்பேன். நான் வேணா பணம் தரமா நீ கொண்டு போய் மொய் எழுது என்று மீனா கிட்ட சொன்னேன் என்று சொல்கிறார்.

வேதனைகளை கொட்டி விட்டார்
அதற்கு மூர்த்தி, ஏங்க என் தம்பி தானங்க, அவன் எவ்வளவு பணம் கேட்டு இருந்தாலும் நான் கொடுத்திருப்பேன் என்று சொல்ல, அதற்கு ஜீவா கிழிச்சி இருப்பீங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது அங்கு வரும் பிரசாந்த் என்னம்மா இப்படி சண்டை போட்டுட்டு இருக்காங்க. நான் போய் தடுத்து நிறுத்துகிறேன் என்று பிரசாந்த் முயற்சி செய்ய மல்லி வேண்டா இது அவங்களோட குடும்ப சண்டை நீ தலையிட வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார். பிறகு ஜீவா ஒவ்வொன்றாக தனது மனதில் இருந்த வலிகளை எல்லாம் பற்றி பேசுகிறார்.

இது சரியான கேள்விதான்
அதாவது கதிர், கண்ணன் வேலைக்கு போறதால தான் என்னை இப்படி நடத்துறீங்களா? கதிர் கார் வாங்கின விஷயத்தை கூட நீங்க சொல்லல, பிறகு தானே எனக்கு தெரிஞ்சது. என்கிட்ட சொல்லணும்னு தோணல தானே? மீனா பாத்ரூம் கட்டித்தர சொன்ன அப்ப கூட நான் உங்க பக்கம் தானே நின்னேன். ஆனால் நீங்க யாருமே அதை கண்டு கொள்ளவில்லை. நீங்க எல்லாருமே உங்க மாமனார் வீட்டுக்கு எல்லாமே பண்ணுறீங்க. ஏன் கதிர் கூட அவங்க மாமியாருக்கு உடம்பு சரியில்லைன்னா கூட்டிட்டு போறான் ஆனா நான் என் மாமனாருக்கு ஏதாவது பண்ணுனா அது தப்பு? என்று கேட்க, சரியாக சொன்னீர்கள் மாப்பிள்ளை என்று ஜனார்த்தனன் பாராட்டுகிறார்.

மூர்த்தியிடம் பதில் இல்லை
கல்யாண பத்திரிகை வைக்க போகும்போது கூட உங்ககிட்ட சின்ன குழந்தை மாதிரி எல்லாத்துக்கும் கேட்டுகிட்டே நிக்கணும். வெளியே எங்கேயாவது போனால் அடிக்கடி போன் பண்ணிக்கிட்டே இருப்பீங்க. எல்லோரும் என் பொண்டாட்டி என் குழந்தை என்று நினைக்கிற மாதிரி நானும் நினைச்சிருந்தா என்னை இப்படி எல்லாம் நடத்திருப்பீங்களா? கதிர் தனியா சம்பாதிக்கிறான், கண்ணன் தனியா சம்பாதிக்கிறான். அதனால என்னோட பெயரை மட்டும் மொய் எழுதாமல் விட்டுட்டீங்களா? என்று கேட்கிறார்.

குடும்பம் பிரிஞ்சிடுச்சி
அது மட்டுமா என்னோட மாமனார் எனக்காக கார் கொண்டு வந்து கொடுத்தாரு, அதையும் திரும்ப கொண்டு போய் கொடுக்க சொன்னீங்க. நீங்க சொல்றபடி தானே நடக்கிறேன். அன்னைக்கு கடை திறந்து போட்டுட்டு போனதுக்கு என்ன ஏதுன்னு கேட்காமல் திட்டிட்டீங்க. இதுவே கதிர் என்றால் கேட்டிருப்பீங்க,, திட்டிருக்க மாட்டீங்க தானே? ஜீவா என்றால் தப்பு மட்டும் தான் பண்ணுவான் என்று நினைக்கிறீர்கள் என எல்லாரும் முன்னாடியும் மூர்த்தியை ஜீவா கேள்வி கேட்க, மூர்த்தி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். மீனா ஜீவாவை சமாதானப்படுத்த பார்க்கிறார். ஆனால் அவருடைய அப்பா அவர் கேட்கட்டும் நீ சும்மா இரு என்று கூறிக் கொண்டிருக்கிறார். தனமும் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications